
பெண்களுக்கு தங்கம் என்றால் அலாதிப்பிரியம். பெண்களையும், தங்கத்தையும் பிரிக்க முடியாது. அத்தகைய தங்கத்தை வாங்கும் போது இருந்த பளபளப்பு போக போக குறைந்துவிடும். அப்படி மங்கிய தங்கத்தை மீண்டும் புதிது போல ஜொலிக்க வைக்க சில டிப்ஸ்களை இந்தப் பதிவில் காண்போம்.
1. ஜொலிக்காமல் மங்கிப்போய்க் கிடக்கும் தங்க நகைகளை பற்பசையைக் கொண்டு சுத்தம் செய்யலாம். வெள்ளை நிறத்தில் இருக்கும் பற்பசையை பயன்படுத்தும் போது தங்க நகைகள் நன்றாக புதிது போல பளப்பளக்கும்.
2. முதலில் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கும் சோப்பு, துணி சோப்பு, பாத்திரம் கழுவப் பயன்படும் திரவம் ஆகியவற்றை கலந்துவிட்டு சோப்பு கரைசலை உருவாக்கிக் கொள்ளவும். இதில் தங்க நகைகளைப் போட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அதை எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு, துணியை பயன்படுத்தி துடைத்துவிட்டு, காற்றில் உலர்த்திவிட்டு பின்பு நகையைப் பாருங்கள். அனைத்தும் புதிது போல அழகாக ஜொலிக்கும்.
3. சில தங்க நகைகள் அழுக்குப் படிந்து காணப்படும். அவ்வாறு அழுக்குப்படிந்த நகைகளில் மீது பிரஷ்களைப் பயன்படுத்தி அழுக்கை நீக்கலாம். ஆனால், பிரஷ்ஷை அழுத்திப் பயன்படுத்தக் கூடாது. இதற்காக டூத் பிரஷ்ஷையோ அல்லது சின்ன பிஷ்ஷையோ வாங்கிப் பயன்படுத்தலாம்.
4. தங்க நகைகளை சுத்தம் செய்வதற்கு கொதிக்கக்கூடிய தண்ணீர் அல்லது பிரிட்ஜில் வைத்திருக்கும் குளிர்ந்த தண்ணீர் ஆகிய அதிகப்படியான தட்பவெப்பநிலையைக் கொண்ட தண்ணீரை பயன்டுத்தக்கூடாது.
5. விலை உயர்ந்த கற்களைக்கொண்ட தங்க நகையை அதிக நேர தண்ணீரில் ஊறவைத்து பிறகு பிரஷ் பயன்படுத்தி தேய்க்கக்கூடாது. அது கற்களின் ஜொலிக்கும் திறனைப் போக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் கல் வைத்த நகைகளை சுத்தம் செய்வதற்கு குறைந்த வேகத்தில் தண்ணீரை பயன்படுத்துவது நல்லதாகும்.
6. தங்க நகையை உடனடியாக பளபளக்க வைப்பதற்கு வினிகர் ஒரு சிறந்த ஆப்சென்னாக தெரிந்தாலும், அதை தங்கம், வெள்ளிப் போன்ற நகைகளுடன் சேர்த்துப் பயன்படுத்தும் போது, அதில் இருக்கும் அமிலத்தன்மை நகைகளுக்கும், கற்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து செய்யப்படும் கலவையில் நகைகளைக் கழுவும் போது அதில் இருந்து ஏற்படக்கூடிய ரசாயன மாற்றத்தினால், நகைகள் புதிது போல ஜொலிக்கத் தொடங்கும். இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்தி நீங்களும் உங்கள் நகைகளை புதிதாக மாற்றுங்கள்.