கொட்டும் முடியை நிறுத்த ஷாம்பூ தேடுறீங்களா? இதோ வீட்டிலேயே செய்யக்கூடிய மேஜிக்!

how to stop hair fall
how to stop hair fall
Updated on

முடி உதிர்வு முடிபொலிவிழப்பு, மற்றும் வேர்க்கால் பலவீனம் ஆகிய பிரச்னைகளை பெரும்பாலானோர் அனுபவிக்கிறார்கள்.‌ எல்லாவற்றையும் சரி செய்ய ஒரு அதிசய ஷாம்பூ சீரம் போன்றவற்றைத் தேடுகிறார்கள். ஆனால் முடி வளர்ச்சி என்பது மேல் பூச்சைவிட உள்ளுக்கு நாம் என்ன உண்கிறோம் என்பதை பொறுத்தே ஆரோக்கியம் சார்ந்துள்ளது. ஊட்டச்சத்துக்கள் நல்ல ஓய்வு, தூக்கம், குடல் ஆரோக்கியம் இவைகள் நம் முடியின் ஆரோக்கிய மேம்பாடு அடைய வழி வகுக்கிறது.

நாம் வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய இயற்கை பயோட்டின் முடி ஆரோக்கியத்திற்குச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. கெமிகல் பொருட்களைத்தேடி ஓடுவதைத் தவிர்த்து நாம் பாரம்பர்யமான உணவு பழக்கங்களை மேற்கொள்வதால் நல்ல மாற்றம் ஏற்பட வழியுண்டு. பலகாலம் முன்பு எள், மகானா, கொட்டைகள், நெய், பேரீச்சை போன்றவற்ளை உணவில் அதிகம் சேர்த்து முடி ஆரோக்கியத்தைப் பாதுகாத்தார்கள்.

முடி வளர்ச்சிக்கு பயோட்டின் ஏன்?

இதில் அனாகென் என்ற வளர்ச்சி முடிவளர்ச்சியை ஊக்குவிக்கும்.

முடி வேர்க்காலை வலுப்படுத்தும்.

பயோட்டின் முடியை அடர்த்தியாக்கும். வழுக்கையைத்தடுக்கும்.முடிஉதிர்வை குறைக்கும்.

முடியை பளபளப்பாக்கும்.

இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

உணவில் உள்ளசத்துக்களை ஆற்றலாக மாற்றி மெடபாலிசத்தை சீராக்கும்.

கெராடின் அளவை அதிகப்படுத்தி முடி வளர்ச்சியைத் தூண்டும்.

முடிக்கும் பொலிவைத்தரும்.

இப்படிப்பில் பயோடினை இயற்கை முறையில் தயாரிப்பது பற்றி இப்பதிவில் காண்போம்.

இயற்கை பயோட்டின் பைட் தயாரிப்பு:

அந்த வகையில் Natural biotin bite

முடிக்கும் சிறந்ததாக அறியப்படுகிறது. இதில் ஆரோக்கிய கொழுப்புச் சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள். நார்சத்து, தாவரப் புரதம் மற்றும் ஒமேகா 3கொழுப்பு அமிலங்கள் நிறைந்ததாகும்.

இதை தயாரிக்க தேவையானவை:

எள் இரண்டு டேபிள்ஸ்பூன்

ஆளிவிதை 1டேபிள் ஸ்பூன்

பூசணி விதை ஒரு டேபிள் ஸ்பூன்

சூரியகாந்தி விதை ஒரு டேபிள் ஸ்பூன்

வறுத்த தாமரை விதை ஒரு கப்

ஊறவைத்த பாதாம். 8

வால்நட் 6

கோகோபௌடர் 1டேபிள் ஸ்பூன்

பேரீச்சை 5

நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
இளநரையும் முடி உதிர்வும் - முற்றுப்புள்ளி வைப்பது எப்படி?
how to stop hair fall

தயாரிப்பு:

முதல் நாள் இரவே எள், சூரியகாந்தி விதை, மற்றும் பூசணி விதையை ஊறவைக்கவும் மகானா அதாவது தாமரை விதையை லேசாக வறுக்கவும்.

எள் கொட்டைகள் மற்றும் தாமரை விதைகளை கொரகொரப்பாக அரைக்கவும்.இதில் பேரீச்சை அல்லது வெல்லம் சேர்த்து அரைக்கவும்

பிறகு இதில் கோகோ பௌடர் மற்றும் நேர் சேர்க்கவும். இந்தக் கலவையை சிறு உருண்டைகளாக செய்து வைக்கவும்.

இதன் பயன்கள்:

விதைகள் மற்றும் கொட்டைகள் நல்ல கொழுப்புச் சத்து, துத்தநாகம், மக்னீசியம் மற்றும் ஒமேகா 3அமிலங்கள் முடி ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். பேரீச்சை மற்றும் வெல்லம் இயற்கையான இனிப்புச் சுவையை தரும். தாமரை விதை நல்ல தாவரபா புரதச்சத்தையும் நல்ல மொறு பொறுப்பையும் தரும் இதன்மூலம் இயற்கை பயோட்டின் உற்பத்தியாகும்

முடி வலிமையாகவும் பளபளப்பாகவும் ஆகும். முடி ஆரோக்கியம் என்பது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளாலேயே மேம்படுத்தப் படுகிறது. ஒரே இரவில் எந்த அதிசயமும் நடந்துவிடாது.

logo
Kalki Online
kalkionline.com