பாதங்களைப் பாதுகாப்பது எப்படி? இதோ பாதங்களுக்கான எளிய 3 பேக்குகள்!

பாதங்களைப் பாதுகாப்பது எப்படி? இதோ பாதங்களுக்கான எளிய 3 பேக்குகள்!
Published on

பொதுவாக கால் பாதங்கள் பற்றி நாம் பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்வது இல்லை. இதனால், பாத சருமம் மிகவும் வறண்டதாகவும், வெடித்தும் காணப்படலாம். இது பதங்களின் அழகை மட்டுமல்லாமல், அவற்றின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

உங்கள் பாதங்களில் வறண்ட சருமம் இருப்பது சங்கடமாகவும் சில சமயம் அறுவருப்பாகவும் இருக்கும். நம் உடலின் மற்ற பாகங்களைப் போல பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லை. அதனால், விரைவில் வறண்டு, அரிப்பு ஏற்படுகிறது.

இதிலிருந்து விடுபடுவதற்கான முதல் படி, உங்கள் பாதங்களை சுத்தமாகவும், உலர்ந்ததாகவும் வைத்திருப்பதுதான். வறண்ட பாதங்களில் இருந்து விடுபட உதவும் ஃபுட் பேக்குகள் பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.

1. ஊறவைத்த ஓட்ஸ் பேக்

கால்களில் உள்ள வறண்ட மற்றும் கடினமான சருமத்தை மென்மையாக்கவும், உரிக்கவும் ஓட்ஸ் ஒரு சிறந்த வழியாகும். உங்கள் பாதத்தை ஊறவைக்க, 1/2 கப் சமைக்காத ஓட்மீலை 2 கப் வெதுவெதுப்பான நீரில் கலக்க வேண்டும். அந்த கலவையில் உங்கள் கால்களை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, ஓட்மீல் கொண்டு உங்கள் கால்களை மெதுவாக தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

2. தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் கால் பேக்

தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் ஃபுட் பேக் உங்கள் கால்களின் வறண்ட, கடினமான சருமத்திற்கு ஆழமான நீரேற்றத்தை வழங்குகிறது. ஒரு சிறிய கிண்ணத்தில், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். கலவையை உங்கள் கால்களில் தடவி, வறண்ட சருமத்தில் நன்கு தேய்த்து, 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.

அந்த பேக் சற்று உலர்ந்ததும், இரண்டு கால்களிலும் தடிமனான காலுறைகளை அணிந்து, ஒரே இரவு முழுவதும் பேக்கை அப்படியே விட்டு விடுங்கள். காலையில், உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

3. அவகாடோ மற்றும் வாழைப்பழ பேக்

வகாடோ மற்றும் வாழைப்பழங்கள் இரண்டும் கால்களின் வறண்ட, கடினமான சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கும் சிறந்த ஆதாரங்கள். இந்த ஃபுட் பேக் செய்ய, பழுத்த அவகாடோவில் 1/2 மற்றும் பழுத்த வாழைப்பழத்தில் 1/2 ஆகியவற்றை ஒன்றாக மசிக்க வேண்டும். கலவையை உங்கள் கால்களில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விடவும். அதன் பிறகு, உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

பெரும்பலான மக்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனையாக வறண்ட, தடிமனான பாத சருமம் உள்ளது. குறிப்பாக குளிர்கால மாதங்களில், இவை அதிகரிக்கலாம். இந்த நிலைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன, அதாவது தவறான வகை காலணிகளை அணிவது, கால்களை தவறாமல் ஈரப்பதமாக்குவது அல்லது சருமத்தை பாதிக்கும் மருத்துவ நிலை போன்றவை. சில சந்தர்ப்பங்களில், நீங்கள் சரும மருத்துவரிடம் ஆலோசனை செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com