முகச் சுருக்கங்கள் மற்றும் கருவளையங்களை நீக்க ஐஸ் ஒத்தடம் தரும் அற்புத பலன்கள்!

பார்லர் செலவில்லாமல் இயற்கையான முறையில் முகப் பொலிவைப் பெற இதைச் செய்யுங்கள்.
ஐஸ்கட்டி
ஐஸ்கட்டிGemini image
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on: 

முக அழகைப் பொலிவாக்க ஐஸ்கட்டிகள் தரும் நன்மைகள் குறித்து இப்பதிவில் காண்போம்‌. முகத்தில் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கும்போது vasoconstriction உண்டாவதால் இரத்த ஓட்டம் நன்கு சீராகி கண்களில் சிவத்தல் மற்றும் வீக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது.‌ இதன் மூலம் நம் சருமத்தில் நல்ல ஆக்சிஜன் சேர்க்கப்பட்டு அழற்சியும் குறைக்கப்படுகிறது.

முகத்தில் ஐஸ்கட்டிகளை வைத்து ஒத்தி எடுப்பதால் அழற்சியைக் குறைத்து முகம் சிவத்தல் மற்றும் பரு பிரச்னையைச் போக்குகிறது.

இதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் முகம் பளபளவென்று விளங்கும். மேலும் அதிக இரத்த ஓட்டத்தின் மூலம் முகம் ரோஸ்கலரில் மின்னும்.

ஒரு துணியில் ஐஸ்கட்டியை வைத்து கண்களுக்குக் கீழ் ஒத்தடம் கொடுக்க கருவளையம் நீங்கும்.

ஐஸ்கட்டி மசாஜ் மூலம் கண்கள் வீக்கம் குறைக்கப்படும். வயதாவதால் கண்களுக்கு கீழ் வீக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.

உங்கள் உதடுகளில் இந்த மசாஜ் வறட்சியை நீக்கி நல்ல நீரேற்றத்தைத் தரும்.

வெப்பம் அதிகமான நிலையில் அரிப்பு ஏற்படும். ஐஸ் ஒத்தடம் இதைத் தடுக்கும்.

முகத்தில் அழுக்குகள் சேர்ந்து துளைகள் மூடப்படும் நிலையை ஐஸ் மசாஜ் தடுக்கும்.

நீங்கள் மேக்கப் போடுவதற்கு முன் ஐஸ் மசாஜ் செய்த பிறகு மேக்கப் போட நன்கு பொலிவான தோற்றத்தைக் கொடுக்கும். ஐஸ் மசாஜ் செய்த பிறகு சீரம், மாய்ச்சரைசர் மற்றும் டோனர் பயன்படுத்தும்போது அவைகள் நன்கு முகத்தில் உறிஞ்சப்படும்.

ஐஸ் ஒத்தடம் கொடுப்பதால் முகம் இறுக்கமாகவும் கோடுகள் சுருக்கங்களை நீக்கி இளமையுடன் வைக்கும்.

ஐஸ் ஒத்தடம் மூலம் முகத்தில் எண்ணைப் பசை நீங்கும்.

சூரியனின் அல்ட்ரா வயலெட் கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளை நீக்கும்.

உங்கள் முகம் பொலிவைக் கூட்டும் இயற்கை ஐஸ் க்யூப்கள்:

1. துளசி மற்றும் ஆலோவேரா ஐஸ்க்யூப்

துளசி இலைகளை அரைத்து அதில் ஆலோவேரா ஜெல் சேர்த்து கலக்கவும். இது ஐஸ் ட்ரேயில் ஊற்றி கட்டிகளாக்கி முகத்திற்குப் பயன்படுத்தவும்.

ஐஸ்கட்டி
ஐஸ்கட்டிGemini image

2. வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை ஐஸ்க்யூப்

வெள்ளரிக்காயை கூழாக்கிக் கொள்ளவும். அதில் எலுமிச்சையை பிழிந்து ஐஸ் ட்ரேயில் ஊற்றி கட்டிகளாக்கி உபயோகப்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
வறட்சி, எரிச்சலால் சருமம் பாழாகிறதா? இதோ ஒரு 'உயிரியல் கேடயம்' எக்டோயின்!
ஐஸ்கட்டி

3. காபி ஐஸ்க்யூப்

இரண்டு டேபிள் ஸ்பூன் காபி பௌடரில் டிகாக்ஷன் தயாரித்து அதை ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீஸ் செய்து கட்டியாக்கி பயன்படுத்தவும்.

4. பால் ஐஸ்க்யூப்

முக்கால் கப் பாலுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஐஸ்கட்டியாக்கி பயன்படுத்தவும்

5. பட்டை ஐஸ்க்யூப்

ஒரு டேபிள் ஸ்பூன் பட்டைப் பொடியை சேர்த்து தண்ணீரில் கலந்து ஐஸ் ட்ரேயில் ஊற்றி கட்டியாக்கவும்.

6. க்ரீன் டீ ஐஸ்க்யூப்

இரண்டு க்ரீன் டீ பேக்குகளை நல்ல சூடான நீரில் சேர்த்து அது நன்கு ஆறிய பிறகு ஐஸ் ட்ரேயில் சேர்த்து கட்டியாக்கி உபயோகிக்கவும்.

இதையும் படியுங்கள்:
பீட்ரூட் ஐஸ் க்யூப்ஸ் முகத்தில் தேய்க்கிறீர்களா? சருமத்தில் நடக்கும் மாற்றம் இதுதான்!
ஐஸ்கட்டி

7. மஞ்சள் மற்றும் குங்குமப்பூ ஐஸ்கட்டி

தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள்பொடி சேர்த்து மற்றும் குங்குமப்பூ சேர்த்து ஊறவைத்து பிறகு அதை ஐஸ் ட்ரேயில் சேர்த்து ஐஸ் கட்டிகளாக்கி பயன்படுத்தவும்

மேற்கூறிய ஐஸ்கட்டி மசாஜ் செய்வதன் மூலம் துளைகள் நீக்கப்பட்டு, இயற்கையான முறையில் முகம் இறுக்கமாகி அழற்சி குறைந்து இரத்த ஓட்டம் அதிகரித்து உங்கள் முகம் பளிங்கு போல் ஜொலிப்பதை உணர்வீர்கள். இதனால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாது.

இரசாயனப் பொருட்கள் எமின்றி, வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே முகச் சுருக்கங்களை விரட்டி, பளிச்சிடும் இயற்கையான சருமப் பொலிவைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com