முகத்தில் எண்ணெய் வழிகிறதா? 5 நிமிடத்தில் தீர்வு!

Beauty tips in tamil
Is your face oily?
Published on

வ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடல் அமைப்புகள் இருக்கும். முகத்தில் அதிகப்படியான எண்ணெய் வெளியேறுவது பொதுவான ஒன்றுதான். இப்படி அதிகப்படியான எண்ணெய் வெளியேறுவதன் மூலம் சருமத்தில் உள்ள துளைகள் மற்றும் வெடிப்புகள் அடைக்கப்படுவதோடு, தோலை உலரவிடாமல் தடுக்கப்படுகிறது. மேலும் அதிகப்படியான எண்ணையை உற்பத்தி செய்து சருமம் சமநிலையை பராமரிப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

இப்படி பல பயன்களை அதிகப்படியான எண்ணெய் வெளியேறுதல் கொண்டிருந்தாலும் கூட இது முகத்திற்கு ஒருவித சோர்வையும் புத்துணர்ச்சி இன்மையையும் கொடுக்கிறது. எனவே இதனை சரி செய்யும் எளிய வழிமுறைகளை பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

எண்ணெய் பசை உள்ள சருமத்தை மாற்றுவதற்கு பல்வேறு இயற்கையான முறைகளும், அழகு சாதன பொருட்களும் உள்ளன. பொதுவாக வெயில் அதிகம் உள்ள இடங்கள் மற்றும் அதிக தூசி நிறைந்த இடங்களில் பயணம் செய்யும்போது அதிகப்படியான எண்ணெய் வெளியேறுகிறது. இதனை தவிர்க்க குடைகளை பயன்படுத்தலாம். மேலும் அதிகப்படியான கெமிக்கல் நிறைந்த சோப்புகளை பயன்படுத்துவதும் அதிகப்படியான எண்ணெய் வெளியேறுவதற்கு ஒரு காரணம்.

  • முகத்தை அடிக்கடி கழுவுவதன் மூலம், (ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை) அதிகப்படியான அழுக்குகள் சேராமல் பார்த்துக் கொள்ள முடியும்.

  • முகத்தில் அதிகமான எண்ணெய் சுரப்பதால் முகம் கருமையாக மாறும். இதனை தவிர்க்க ஒரு காட்டன் துணியை பாலில் நனைத்து முகத்தில் அழுந்த துடைத்து எடுக்கலாம். மேலும் பாலுடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவலாம்.

  • ஆரஞ்சு பழச்சாறு எடுத்து அதனை நன்கு முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்து பின் குளிர்ந்த நீரில் கழுவலாம்.

  • சிறிதளவு சந்தன பவுடர், மஞ்சள் தூள் மற்றும் பால் இவற்றை நன்கு குழைத்து முகத்தில் மாஸ்க் போன்று போடுவதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்பட்டு முகம் பளபளப்பாக மாறும்.

  • கற்றாழை ஜெல்லை முகத்தில் மாஸ்க் போன்று போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் சுத்தமான நீரில் கழுவலாம்.

இதையும் படியுங்கள்:
சரும வறட்சியைப் போக்க... ஆயுர்வேதமும் இயற்கைப் பழங்களும்!
Beauty tips in tamil
  • தேனில் சிலவகை என்சைம்கள் இருப்பதால் இதனை முகத்தில் தடவுவதன் மூலம் முகம் பளபளப்பாக மாறும்.

  • சிறிதளவு தண்ணீரை வெதுவெதுப்பாக சூடேற்றி முகத்தில் ஆவி பிடிப்பது மூலம் முகத்தில் உள்ள துவாரங்கள் விரிவடைந்து அழுக்குகள் வெளியேறும்.

  • மேலும் முகத்திற்கு அவ்வப்போது ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். இதுவும் முகத்தை பளபளப்பாக மாற்ற உதவும்.

இதனைத் தவிர்த்து அதிகப்படியான மன அழுத்தமும் முகத்தில் எண்ணெய் அதிகமாக சுரப்பதற்கு ஒரு காரணம். அதிகப்படியான மன அழுத்தம் கார்டிசோலின் அளவை அதிகரிக்கிறது. எனவே மன அழுத்தத்தை குறிக்க சுவாச பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றையும் அவ்வப்போது மேற்கொள்ளலாம். 7 முதல் 9 மணி மணி நேர தூக்கம் ஒவ்வொரு நாளும் உடலுக்கு கொடுக்கப்பட வேண்டும். அதிகப்படியான தூக்கமின்மையும் எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு ஒரு காரணம்.

அதிகப்படியான எண்ணெய் பசை உள்ள சருமத்தை கொண்டவர்கள் சுத்தமான படுக்கை மற்றும் துண்டுகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் அசத்தமான துண்டுகளில் உள்ள பாக்டீரியாக்கள் அழுக்கு மற்றும் எண்ணெய் இவற்றை சருமத்திற்குள் நுழையச் செய்து வெடிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதோடு சமச்சீரான உணவு மிகவும் அவசியம். தினமும் அதிகமாக தண்ணீர் குடிப்பதும் அவசியம், ஏனெனில் அதிகமாக தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை விரட்ட முடியும்.

இதையும் படியுங்கள்:
இயற்கை அழகை மேம்படுத்தும் அற்புத வீட்டு வைத்தியங்கள்!
Beauty tips in tamil

சன் ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்துவதும் அதிகப்படியான எண்ணெய் பசை வெளியேற்றத்தை தடுக்கும். வெயில் அதிகம் இல்லை என்றாலும் இத்தகைய சன் ஸ்கிரீம்களை பயன்படுத்துவது நல்லது. அதிலும் குறிப்பாக எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கென வடிவமைக்கப்பட்ட சன்ஸ்கிரீம்களை பயன்படுத்துவது நல்லது. இதன் மூலம் வெடிப்புகள் வராமல் பாதுகாக்க முடியும். மேலும் இலகுவான மற்றும் எண்ணெய் இல்லாத மாய்ஸ்ரைசரை தேர்வு செய்து பயன்படுத்துவது நல்லது. வளர் இளம் பருவத்தில் ஹார்மோன் மாற்றங்களால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் சரியான உணவு பழக்க வழக்கத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com