2024ல் இந்தியர்கள் தேடிய டாப் 10 சுற்றுலாத் தலங்கள்

10 Tourist Places
10 Tourist Places

சமீப காலமாக இந்தியர்களின் சுற்றுலா செல்லும் மனப்பாங்கு அதிகரித்துள்ளது. அவர்கள் இந்தியா மற்றும் உலகில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்க்க விரும்புகின்றனர். சமீபத்தில் கூகுள் சர்ச் இஞ்சின் 2024 ஆம் ஆண்டு இந்தியர்கள் அதிகம் தேடிய சுற்றுலா இடங்களை வகைப்படுத்தியுள்ளது. அந்த பட்டியலில் உள்ள இடங்கள் பின்வருமாறு: 

1. அஜர்பைஜான்

Azerbaijan
Azerbaijan

இந்தியர்கள் அதிகம் தேடிய இடத்தில் அஜர்பைஜான் முதல் இடம் பிடித்தது. சமீபத்தில் பிரபலமாகி வரும் இந்த இடம் பழமையும் புதுமையும் ஒருங்கிணைத்து உள்ளது. காஸ்பியன் கடல் கடற்கரை, காகசஸ் மலைகள் மற்றும் எரிமலைகள் உள்ளிட்ட பல்வேறு  இயற்கை எழில் சூழ்ந்த ஒரு நாடாக உள்ளது. அங்குள்ள மக்களின் கலாச்சார உடைகள், உயர்தர உணவுகள் ஆகியவை பயணிகளை ஈர்க்கிறது.

2. பாலி

Pali
Pali

இந்தியர்கள் தேடுவதில் இரண்டாவது இடத்தில் இந்தோனேசியாவின் பாலி உள்ளது. இந்திய கலாச்சாரம் மற்றும் மலாய் மக்களோடு சேர்ந்து, கலந்த தனி கலாச்சாரத்தை பாலி தீவு கொண்டுள்ளது. பாலி முழுவதும் இந்து மதத்தின் தொன்மையான பிரம்மாண்டமான கோவில்களையும் காணலாம். ஆன்மீகம் மட்டுமின்றி இனிமையான கடல் விளையாட்டுக்கள், காட்டு சுற்றுலாக்கள், யானை சவாரிகள் எல்லாம் இனிய அனுபவம் தருகிறது.

3. மணாலி

Manali
Manali

இந்தியாவில் உள்ள மணாலி பனி படர்ந்த சிகரங்கள், பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் அமைதியான ஆறுகளுக்கு பெயர் பெற்ற இடமாகும். இங்கு மலையேற்றம், பாராகிளைடிங் மற்றும் பனிச்சறுக்கு போன்ற சாகச நடவடிக்கைகளை ஈடுபடலாம். பழங்கால கோவில்கள் மற்றும் திபெத்திய மடாலயங்கள் போன்றவை ஆன்மீக அனுபவத்தையும் தரும்.

இதையும் படியுங்கள்:
பயணம்: திருநெல்வேலியில் ரசிக்க வேண்டிய 5 இடங்கள்!
10 Tourist Places

4. கஜகஸ்தான்

Kazakhstan
Kazakhstan

கஜகஸ்தான் அதன் கலாச்சாரம் மற்றும் மக்களின் நாடோடி வாழியலுக்கு பெயர் பெற்றது. மிகவும் அமைதியான மலைப்பிரதேசம், மக்களின் வாழ்க்கை முறை, கொழுப்பு மிகுந்த உணவுகள் உங்களை ஈர்க்கலாம். பயணிகள்  அல்மாட்டி மற்றும் அஸ்தானாவின் நவீன கட்டிடக்கலைகளை ரசிக்கலாம். 

5. ஜெய்ப்பூர்

Jaipur
Jaipur

புகழ் பெற்ற இளஞ்சிவப்பு நகரான ஜெய்ப்பூர் இந்தியாவின் பொக்கிஷமாக உள்ளது. ராஜ்புத்களின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம், நடனம், தனித்துமிக்க தீ நடனம் , பிரம்மிக்க வைக்கும் அரண்மனைகள், அதில் உள்ள ஒவ்வொரு கற்களும் உங்களை அந்த இடத்தை விட்டு நகர விடாது. ஆம்பர் கோட்டை, ஹவா மஹால், கர்ணி மாதா கோவில் உங்களை கவரும். ராஜஸ்தான் உணவு உண்மையில் அற்புதமானது இங்கு நீங்கள் ராஜாவாக உணர்வீர்கள்.

6. ஜார்ஜியா

Georgia
Georgia

ஐரோப்பா மற்றும் ஆசியாவின் நடுவில் உள்ள மலை வாழ் பிரதேசம். காகசஸ் மலையில் அற்புத அனுபவங்களை பெறவும், சாகச விளையாட்டுகளில் ஈடுபடவும் சிறந்த இடமாகும். 

7. மலேசியா

Malaysia
Malaysia

தமிழகத்தின் ஒரு பகுதி போல எளிமையாக அணுகக் கூடிய நாடாகும். கோலாலம்பூர் உங்களுக்கு நவீன அனுபவத்தையும் மற்ற இடங்கள் இயற்கையின் கொடையினை ரசிக்கும் படியும் இருக்கும். லங்காவி தீவு கடல்சார்ந்த ஒரு இனிய அனுபவத்தை தரும். இங்கு உள்ள உணவுகளில் கலாச்சாரத்தில் தமிழ் தாக்கங்கள் இருக்கும். 

இதையும் படியுங்கள்:
பூமியின் பரவசம்… பாம்பார் நீர்வீழ்ச்சி!
10 Tourist Places

8. அயோத்தி 

Ayodhya
Ayodhya

சரயு நதிக்கரையில் அமைந்துள்ள இந்தியாவின் புராண சிறப்புமிக்க நகரம். இங்குள்ள மிகப் பிரம்மாண்டமான ஶ்ரீ ராமர் கோவில் அற்புதமான ஆன்மிக அனுபவத்தை தரும். 

9. காஷ்மீர்

Kashmir
Kashmir

இது ஒரு பனிமலை பூமி, பனி மலைகளும், டால் ஏரி சவாரியும், நதி நீர் வாழ்க்கை முறைகளும், முகல் தாக்கம் கொண்ட உணவுகளும் உங்களை ஈர்க்க கூடும்.

10. தெற்கு கோவா

South Goa
South Goa

தெற்கு கோவா அதன் அமைதியான கடற்கரைகள், அழகிய நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றது. இந்தியாவில் இருந்தாலும் வெளிநாடு போன்ற அனுபவத்தை கோவா தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com