ஆரோக்கிய நன்மைகளுடன் உலகை கவரும் பிளவு-கால் (Tabi shoes) காலணிகள்!

ஜப்பானிய பாரம்பரிய தபி வடிவமைப்பு, நவீன ஃபேஷன் உலகில் டேபி பூட்ஸ், ஜிகா-தாபி போன்ற வடிவங்களில் மீண்டும் எழுச்சி பெற்று, இந்தியாவிலும் ஆடம்பர காலணியாக பிரபலமடைந்துள்ளது.
tabi-shoes-health-benefit
tabi-shoes-health-benefit
Updated on

பி (Tabi) காலணிகள் 15-ஆம் நூற்றாண்டின் ஜப்பானிய கலாச்சாரத்தில் உருவான, பெருவிரல் தனித்து பிரிக்கப்பட்ட தனித்துவமான பிளவு-கால் (split-toe) காலணிகளாகும்.  ஜப்பானிய முரோமாச்சி காலத்தில், பாரம்பரிய ஜப்பானிய செருப்புகளான ஜோரி (zōri) அல்லது கெட்டா (geta) உடன் அணிய, பருத்தியால் செய்யப்பட்ட சாக்ஸாக தபி உருவானது. பெருவிரலுக்கும் மற்ற விரல்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி, செருப்பின் பட்டையை பிடித்துக்கொள்ள உதவியது. ஆரம்பத்தில் இவை சமூக அந்தஸ்தின் அடையாளமாக இருந்தன. உயர் வகுப்பினர் ஊதா நிறத்தையும், மற்றவர்கள் நீல நிறத்தையும் அணிந்தனர்.

20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், விவசாயிகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக, ரப்பர் சோல் கொண்ட, நீடித்த உழைக்கக்கூடிய "ஜிகா-தாபி"  (Jika-tabi) தரையோடு இணைந்த தபியாக வெளிப்புற காலணிகளாக உருவாக்கப்பட்டது.

பெல்ஜிய வடிவமைப்பாளர் மார்ட்டின் மார்கீலா, ஜப்பானிய தபியால் ஈர்க்கப்பட்டு, 1988-ல் தனது முதல் ஃபேஷன் ஷோவில் புகழ்பெற்ற டேபி பூட்ஸை அறிமுகப்படுத்தினார்.  இது பாரம்பரிய பிளவு-கால் வடிவமைப்பை நவீன பேஷன் உலகிற்கு கொண்டு வந்தது.

1989-ல் மெய்சன் மார்கீலாவால் பிரபலப்படுத்தப்பட்ட இந்தக் காலணிகள், தற்போது உயர் ரக ஃபேஷன் மற்றும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு காலணியாக  திகழ்கின்றன. அமெரிக்க நடிகை மற்றும் பாடகி ஜெண்டாயா மற்றும் பிரிட்டிஷ் பாடகி துவா லிபா போன்ற பிரபலங்கள் இவற்றை அணிவதை அடிக்கடி காணலாம்.பெரும்பாலும் கையால் செய்யப்பட்ட ஆடம்பரத்துடன் கூடிய புகழ்பெற்ற வடிவமைப்பாளர் களான 'ஷாப் மிஸ்ட்ரி மற்றும் கில்சு ' போன்ற பிராண்டுகள் மூலம் இப்போது இந்தியாவில் பிரபலமாகி வருகிறது.  தபிகளின் விலை சுமார் ₹4000- 16,000-இல் இருந்து தொடங்கலாம் என்கிறார்கள்.

தபி காலணிகளான பிளவுபட்ட கால்விரல் காலணிகள் இயற்கையான கால்விரல் பிரிவை ஊக்குவிப்பதன் மூலம், மேம்பட்ட சமநிலை, வலுவூட்டப்பட்ட பாதத்தசைகள் மற்றும் சிறந்த உடல் தோரணைஉள்ளிட்ட குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகின்றன.

அவை நிலைத்தன்மையை மேம்படுத்துவதோடு, எளிமையான வடிவமைப்பைக் கொண்ட பாரம்பரிய ஜப்பானிய காலணிகளாக இருப்பதால், பாத வலியைக் குறைக்கவும், கீழே விழுவதைத் தடுக்கவும் உதவுகின்றன. இந்த வடிவமைப்பு "வெறுங்காலில் நடப்பது போன்ற" உணர்வை அளித்து, சுறுசுறுப்பை அதிகரித்து, கால் பெருவிரல் வீக்கத்தைத் தடுக்கிறது, தரை குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்கிறது.

இதையும் படியுங்கள்:
வயதான காலத்தில் நட்பு கருகும் கசப்பான உண்மை: ஒருபக்கம் முயற்சியால் மட்டும் நீளும் உறவுகள்!
tabi-shoes-health-benefit

தபி பாரம்பரிய காலணி என்பதால் பெருவிரல் அழுத்தத்தைத் தடுப்பதன்  மூலம் ஏற்படும் தோல் அழற்சியான ஹாலக்ஸ் வால்கஸ் வராமல் தடுக்க உதவுகின்றன. எடை குறைந்த, நெகிழ்வான மற்றும் மெல்லிய அடிப்பாகம் கொண்ட இதன் அமைப்பு, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் நம்பிக்கையான இயக்கத்திற்கு வழிவகுக்கிறது.

தொடக்கத்தில் தொழிலாளர்கள், சாமுராய் வீரர்கள் மற்றும் தற்காப்புக் கலைஞர்களால் அணியப்பட்ட இந்தக் காலணிகள், நீடித்து உழைப்பதுடன், பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு மேம்பட்ட பிடியையும் இயக்கத்தையும் வழங்குகின்றன.

ஜப்பானிய பிரபலமான கினேயா தபி போன்ற நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பல டாபிகள், காற்றோட்டமானவையாகவும், பாதங்கள் இயல்பாக அசைவதற்கு இடமளிப்பவையாகவும் உள்ளன. இது வியர்வையைக் குறைத்து, சௌகரியத்தை மேம்படுத்த உதவுகிறது.

டாபி காலணிகள் பயன்பாட்டின் அடிப்படையில், வீட்டுக்குள் அணியும் காலுறைகள் (டாபி), நீடித்து உழைக்கும் வெளிப்புற வேலைக்கான பூட்ஸ் (ஜிகா-டாபி) மற்றும் நவீன ஃபேஷன் என வகைப்படுத்தப்படுகின்றன. இதில் ஓடும் காலணிகள் மற்றும் மெய்சன் மார்கீலா போன்ற வடிவமைப்பாளர் பூட்ஸ்களும் அடங்கும்.

logo
Kalki Online
kalkionline.com