சமையலறைப் பொருட்கள் போதும்... முகம் பளபளக்க இந்த 4 மாவுகள் போதும்!

கெமிக்கல் கிரீம்களைத் தாண்டி இயற்கையான முறையில் முகம் ஜொலிக்க வைக்க சூப்பர் வழிகள்.
சருமம்
சருமம் Gemini image
எஸ்.மாரிமுத்து

கடந்த 15 ஆண்டுகளாக நானும் எனது மனைவி எம். வந்தா. நிறைய இதழ்களில் கதை, கட்டுரை, ஜோக்ஸ், ஆன்மீகம், சமையல் பற்றி எழுதி உள்ளோம். தற்போது கல்கி ஆன்லைனிலும் வருகிறது. கல்கிக்கு நன்றிகள்.

Updated on: 

சரும பாதுகாப்பில் நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் மாவு வகைகள் குறித்தும் அதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை எளிய முறையில் பார்க்கலாம். கோதுமை மாவு, கடலை மாவு, பாசிப்பயறு மாவு, அரிசிமாவு இதனை பயன்படுத்தி செய்து வந்தால் சருமம் மென்மையாகும்.

1. கோதுமை மாவு

கோதுமை மாவு நாம் இன்று இயல்பாக சாப்பிடும் உணவில் கட்டாயம் இடம் பெறுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் பொலிவை மேம்படுத்துவதில் அதிக அளவில் உதவுகின்றன. இது சருமத்தில் உள்ள எண்ணெய்த் தன்மையை கட்டுப்படுத்தி இறந்த செல்களையும் அழுக்குகளையும் அகற்றும் தன்மை கொண்டது.

இரண்டு டீஸ்பூன் கோதுமை மாவுடன் காய்ச்சாத பால் தேவையான அளவு சேர்த்து, பேஸ்ட் ஆக்கி இதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவடையும்.

இரண்டு டீஸ்பூன் கோதுமை மாவுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல ஆக்கி இதனை முகத்துக்கு பேக் போல போட்டு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். முகத்தில் எண்ணெய்ப் பசையைக் குறைப்பதுடன் முகத்தில் முகப்பருக்கள் வருவதையும் இது தடுக்கும்.

கோதுமை மாவுடன், தக்காளி சாறு சேர்த்து பேஸ்டாக்கி சன்டேன் உள்ள இடங்களில் இதைப் பயன்படுத்தி பேக் போட்டு அமைணி நேரம் கழித்து கழுவினால் சன்டேன், கரும்புள்ளிகள் குறையும்.

2. கடலை மாவு

கடலை மாவு சரும பிரச்னைகளை போக்கி பொலிவு அளிக்கும். சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. முகத்தில் எண்ணெய் தன்மை மற்றும் பருக்கள் தோன்றுவதை தடுப்பதில் அருமருந்தாக செயல்படுகிறது.

ஒரு டீஸ்பூன் கடலை மாவுடன் சிறிதளவு தயிர் மற்றும் சிறிது எலுமிச்சைசாறு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று மாறும்.

சருமம்
சருமம்Gemini image

ஒரு டீஸ்பூன் கடலை மாவுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மற்றும் காய்ச்சாத பால் கலந்து பசை போல் ஆக்கி முகத்துக்கு பேக் போட்டு அரைமணி நேரம் கழித்து கழுவினால் முகம் புத்துணர்வுடன் காணப்படும்.

இதையும் படியுங்கள்:
கருமை, கரும்புள்ளிகள் நீங்க... ஒரு ஸ்பூன் உப்பு போதும்! 8 அசத்தல் அழகு குறிப்புகள்!
சருமம்

ஒரு டீஸ்பூன் கடலை மாவுடன் ரோஸ் வாட்டர் அல்லது தக்காளி சாறு கலந்து முகத்தில் மென்மையாக மசாஜ் செய்து, சில நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்தை மென்மையாக மாற்றும்.

3. பாசிப்பயறு மாவு

முகத்தில் படியும் அழுக்குகளை நீக்கி முகத்தின் நிறத்தை மேம்படுத்துவதில் பாசிப்பயறு மாவு மிகச்சிறப்பாக செயல்படுகிறது. எண்ணெய் தன்மை சருமம் உள்ளவர்களுக்கு இது அருமருந்தாகும்.

ஒரு டீஸ்பூன் பாசிப்பயறு மாவுடன் ரெண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பளிச்சிட, முகம் தெளிவாகும்.

ஒரு டீஸ்பூன் பாசிப்பயிறு மாவுடன் மஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் கலந்து பேக் போட்டு 10 நிமிடம் கழித்து கழுவினால் முகப்பரு, தழும்புகள் மறையும். சருமத்தின் நிறம் கூடும். முதுமை தோற்றத்தை இது தடுக்கும்.

4. அரிசி மாவு

சமையலில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அரிசி மாவு பலவிதமான அழகு பயன்களைக் கொண்டுள்ளது. எப்போதும் புத்துணர்வுடன் வலம் வர விரும்புவர்கள் இதனை பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
வறட்சி, எரிச்சலால் சருமம் பாழாகிறதா? இதோ ஒரு 'உயிரியல் கேடயம்' எக்டோயின்!
சருமம்

அரிசி மாவு, தேன், தயிர் ஆகியவற்றை சமஅளவில் கலந்து முகத்துக்கு பேக் போட்டு 20 நிமிடங்கள் உலரவிட்டு பின் கழுவினால் முகம் புத்துணர்வாக பளிச்சிடும்.

அரிசி மாவுடன், காய்ச்சாத பால் கலந்து பேக் போட்டு அரைமணி நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் பொலிவடையும்.

அரிசி மாவுடன் தக்காளி சாறு கலந்து முகத்தில் பேக் போட்டு காய்ந்ததும் வட்ட வடிவில் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவும். எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் இதனை செய்து வந்தால் சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும், முகத்தை மென்மையாக்கும்.

இயற்கையான முறையில் பக்கவிளைவுகள் இல்லாமல் முகம் பொலிவு பெறுவதோடு, எண்ணெய் பசை மற்றும் சன்டேன் பிரச்சனைகளில் இருந்து முழுமையான தீர்வு கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com