செம்மரத்தின் செம்மையான ஆரோக்கியம் நன்மைகள்!

செம்மரம்
செம்மரம்
Published on

செம்மரக்கட்டை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதை கடத்தும் அளவிற்கு அதில் என்ன அவ்வளவு மவுசு இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். இதோ செம்மரக்கட்டையின் அற்புதங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

* மண்ணீரல்: செம்மரப் பட்டை மண்ணீரலில் ஏற்படக்கூடிய நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகிறது. மண்ணீரலானது கல்லீரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகும். நிணநீர் உறுப்புகளில் மிகப்பெரிய உறுப்பு மண்ணீரல்.

* செரிமானம்: உணவு செரிமான பிரச்னைகளை குணப்படுத்த செம்மரக் கட்டையின் ஒரு துண்டை 200 மில்லி குடிநீரில் போட்டு இரவு ஊர வைத்து அடுத்த நாள் காலை குடித்து வர செரிமான பிரச்னைகள் தீரும்.

* நீரிழிவு நோய்: செம்மரக் கட்டையின் பவுடரை தண்ணீரில் கலந்து தினமும் குடிக்க இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து கட்டுப்பாட்டில் வைக்க பெரிதும் பயன்படுவதாக ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

* இரத்த அழுத்தம்: நீண்ட நாட்களாக இருக்கும் உயர் இரத்த அழுத்த நோய்க்கு செம்மர கட்டையின் பவுடரை உட்கொண்டால் சில நாட்களிலேயே உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

* வாந்தி: செரிமானப் பிரச்னை, வயிறு உப்புசம் உள்ளிட்ட பல்வேறு வயிறு சம்பந்தமான வாந்தி, குமட்டல், தொற்று போக்கு போன்றவற்றை  குணப்படுத்துகிறது.

* மேல்பூச்சு: கை, கால் வீக்கம், தலை வலி, காய்ச்சால், உடல் அசதி ஆகியவற்றிற்கு மேற்பூச்சாகப் பயன்படுத்த குணம் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
இஸ்லாமியர்கள் விரும்பி உண்ணும் கடல் பாசியின் மகிமை தெரியுமா?
செம்மரம்

* மாதவிடாய்: மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும்  தீராத பிரச்னையான அதிக இரத்தப் போக்கினை கட்டுப்படுத்தவும் இது பயன்படுத்தப்படுகிறது.

* இரத்த ஓட்டம்: மனித உடலில் உள்ள அனைத்து இரத்தக் குழாய்களிலும் இரத்த ஓட்டத்தினை மேம்படுத்தி அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே சீராக இரத்தத்தை செலுத்த உதவுகிறது. இருதயத்தை வலுப்படுத்துகிறது.

* முகப்பூச்சு: செம்மரக்கட்டை பவுடரை முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து குளித்தால் முகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு நீங்கி, பளிச்சென்று ஆகிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com