"சிம்பிள், ராயல் லுக்! கல்லூரி மாணவிகளைக் கவரும் லேட்டஸ்ட் கோல்ட் ஜுவல்லரி ட்ரெண்ட்ஸ்!"

trending jewelry for women
trending jewelry for women

நாகரீகம் என்பது காலத்திற்கு ஏற்ப மாறி வருகிறது. இதில் டீன் ஏஜ் வயதினர் விதவிதமான அணிகலன்கள் அணிவதில் எப்பொழுதும் விருப்பம் கொண்டிருப்பர். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் கல்லூரி மாணவர்களுக்கான லேட்டஸ்ட்  தங்க நகை டிசைன்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1. தடித்த தங்க வளையங்கள் - Chunkey gold hoop

trending jewelry for women
Chunkey gold hoop

பழைய வட்ட வடிவிலான தங்கம், வெள்ளி, பிளாஸ்டிக் பொருட்களில் கிடைத்த 'ஹூப்ஸ் கம்மல்கள்' தற்போது தடித்த வடிவத்தில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. கம்பீரமான( Royal) தோற்றத்தைக் கொடுக்கும் இவை ஜீன்ஸ் முதல் சுடிதார் வரை அனைத்து ஆடைகளுக்கும் பொருத்தமானதாக இருக்கின்றன. 

2. மிக்ஸட் - மெட்டல் ஸ்டேக்ஸ் - Mixed - Metal  Stack

trending jewelry for women
Mixed - Metal Stack

தங்கத்தை மட்டும் அணியும் காலம் மலையேறிப்போய், இப்போது மஞ்சள் தங்கம், ரோஸ் கோல்ட் மற்றும்  வெள்ளியைக் கலந்து நகைகளை அணிவது கல்லூரி மாணவிகளிடையே டிரெண்டாகி வருகிறது. மோதிரம் வளையல்களில் இருந்த இந்த 'மிக்ஸ்டு மெட்டல் ஸ்டேக்ஸ் டிசைன் தற்போது கம்மல்களில் ஃபேஷனாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
பளபளப்பான முகம் வேண்டுமா? இதோ காசு செலவில்லாத ‘ஐஸ் வாட்டர் ஃபேஷியல்’ ரகசியம்! 
trending jewelry for women

3. தனித்துவமான ராசி நகைகள் - Personalised Zodiac Jewellery

trending jewelry for women
Personalised Zodiac Jewellery

அடையாளத்தை வெளிப்படுத்த  நினைக்கும் மாணவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக இந்த டிசைன் உள்ளது. மெல்லிய தங்க சங்கிலிகளின் டாலர்களில் பெயரின் முதல் எழுத்து அல்லது ராசியின் சின்னம் பொறித்து அணிவது தற்போது கல்லூரி மாணவர்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது.

4. அடுக்கு சங்கிலிகள் - Layered Chain Necklaces

trending jewelry for women
Layered Chain Necklaces

ஒரே ஒரு சங்கிலியை மட்டும் அணியாமல் வெவ்வேறு நீளம் மற்றும் வெவ்வேறு தடிமன் கொண்ட சங்கிலிகளில் பதக்கங்களை சேர்த்து அணியும் அடுக்கு சங்கிலிகள் தற்போது கல்லூரி மாணவிகள் இடையே டிரெண்டாகி வருகிறது. இந்த அடுக்கு சங்கிலிகள் தனித்துவமான அழகைச் சேர்ப்பதால் மாணவிகளிடையே மிகவும் பிரபலம்.

5. இயர் கஃப்ஸ் - Ear cuffs

trending jewelry for women
Ear cuffs

காதுகளில் கூடுதல் துளைகள் போட்டு நான்கு, ஐந்து கம்மல்கள் போடுவதற்கு பதிலாக துளைகள் போடாமல் காது மடல் முழுவதையும் அலங்கரிக்கும் 'இயர் கஃப்ஸ்' டிசைன் கல்லூரி மாணவர்களின் ஃபேவரைட் ஆக உள்ளது. இது நவீன தோற்றத்தை சட்டென உருவாக்கி போல்டாக காட்சி தரும்.

6. வண்ணக் கற்கள் எனாமல் மோதிரங்கள் - Coloured Gemstone/Enamel Rings

trending jewelry for women
Coloured Gemstone/Enamel Rings

தோற்றத்திற்கு கூடுதல் பொலிவையும் வண்ணமயமான அழகையும் தரும் மரகதம், மாணிக்கம் மற்றும் எனாமல் வண்ணங்கள் கலந்த தங்க மோதிரங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து டிரெண்டாகி உள்ளது.

 மேற்கூறிய டிசைன்கள் அனைத்தும் நாகரீகமான தோற்றத்தை வழங்குவதோடு அணிவதற்கு எளிதாகவும், தோற்றத்தை கம்பீரமாகவும் காட்டுவதால்  கல்லூரி இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com