Gloss Lipstick: கண்ணாடி போன்ற பளபளப்புத் தோற்றம்... ஃபேஷன் உலகில் தனியிடம்!

Gloss lipstick
Gloss lipstick
Published on

தற்போது இளம் பெண்களிடையே அதிகம் காணப்படும் ஒரு லிப்ஸ்டிக் வகைதான் க்ளாஸ் லிப்ஸ்டிக். இதுகுறித்து பலருக்கும் தெரிவதில்லை. யாருக்கெல்லாம் இந்த க்ளாஸ் லிப்ஸ்டிக் சரிவரும் என்றும், நன்மை, தீமைகள் குறித்தும் பார்ப்போமா?

உதடுகளுக்கு ஒரு வசீகரமான, பளபளப்பான தோற்றத்தைக் கொடுக்கும் உதட்டுச்சாய வகைகளில் ஒன்றுதான் க்ளாஸ் லிப்ஸ்டிக் (Gloss Lipstick). இது உதடுகளுக்கு உடனடிப் பொலிவையும், கவர்ச்சியான ஈரப்பதமான தோற்றத்தையும் அளிக்கக்கூடிய ஒரு அழகு சாதனப் பொருளாகும். மேட் (Matte) லிப்ஸ்டிக்குகளின் ஆதிக்கம் நிறைந்திருந்தாலும், க்ளாஸ் லிப்ஸ்டிக்கின் மென்மையான மற்றும் கண்ணாடி போன்ற பளபளப்புத் தோற்றம் ஃபேஷன் உலகில் எப்போதும் தனியிடம் வகிக்கிறது.

  • க்ளாஸ் லிப்ஸ்டிக் என்பது அடிப்படையில் லேசான நிறமி கொண்ட அல்லது நிறமி இல்லாத, அரை திரவ அல்லது ஜெல் போன்ற அமைப்பைக் கொண்டது.

  • இதன் முதன்மையான நோக்கம், உதடுகளை அதிகப் பளபளப்பாகவும் மற்றும் அடர்த்தியாகவும் காட்டுவதுதான்.

  • க்ளாஸ் லிப்ஸ்டிக்கில் பெரும்பாலும் வைட்டமின் E, எண்ணெய் மற்றும் ஈரப்பதமூட்டும் பொருட்கள் நிறைந்திருக்கும். இதனால் உங்கள் உதடுகள் வறண்டு போகாமல், மென்மையாகவும், நீர்ச்சத்துடனும் இருக்கும்.

  • உதடுகளை வழக்கத்தைவிடப் பெரியதாகவும், அடர்த்தியாகவும் இருப்பது போன்ற வசீகர தோற்றத்தை அளிக்கிறது.

க்ளாஸ் லிப்ஸ்டிக்கின் நன்மைகள்:

சரும ஆரோக்கியம்:

மற்ற லிப்ஸ்டிக்குகளைப் போல இல்லாமல், இது உதடுகளுக்கு ஒரு பாதுகாப்பு அடுக்கை கொடுக்கிறது. இது உதடுகளில் வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.

பயன்படுத்துவது சுலபம்:

க்ளாஸ் லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தும்போது அதிகம் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. கண்ணாடியில் பார்க்காமல் கூட இதை எளிதில் பூச முடியும்.

இயற்கையான அழகு:

லேசான நிறமி கொண்ட க்ளாஸ்கள், அலங்காரமாக இல்லாமல் ஒரு இயற்கையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தோற்றத்தை அளிக்கின்றன.

சவால்கள் மற்றும் தீமைகள்

க்ளாஸ் லிப்ஸ்டிக்கின் மிகப்பெரிய சவால், அதன் குறைந்த நேரத்திலேயே மறைந்துவிடும். சாப்பிடும்போதோ அல்லது குடிக்கும்போதோ இது விரைவில் அழிந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
முடி உடையாமல் இருக்க, நரை முடி மறைய... இந்த வைட்டமின்கள் தேவை!
Gloss lipstick

பெரும்பாலான க்ளாஸ் லிப்ஸ்டிக்குகள் சிறிது ஒட்டும் தன்மையுடன் இருப்பதால், முடி அல்லது தூசி எளிதில் ஒட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது.

நீடித்த பளபளப்புத் தோற்றத்தைப் பராமரிக்க அடிக்கடி மீண்டும் பூச வேண்டிய அவசியம் இருக்கும்.

யார் பயன்படுத்தலாம்?

  • உதடுகளை அடர்த்தியாகக் காட்ட விரும்புபவர்கள்.

  • உதடுகள் அடிக்கடி வறண்டு போவதைத் தவிர்க்க நினைப்பவர்கள்.

  • விரைவான மற்றும் இயற்கையான பிரகாசமான தோற்றத்தை விரும்புபவர்கள்.

மேட் லிப்ஸ்டிக் vs க்ளாஸ் லிப்ஸ்டிக்:

மேட் லிப்ஸ்டிக் மற்றும் க்ளாஸ் லிப்ஸ்டிக் ஆகிய இரண்டும் உதட்டுச்சாய வகைகளில் மிகவும் பிரபலமானவை என்றாலும், அவை அவற்றின் தன்மை மற்றும் தோற்றத்தில் முற்றிலும் வேறுபடுகின்றன.

மேட் லிப்ஸ்டிக்  (Matt lipstick) உதடுகளுக்கு எந்தப் பளபளப்பும் இல்லாத, அடர்த்தியான மற்றும் நீண்ட நேரம் நீடித்திருக்கும்  ஒரு இறுக்கமான தோற்றத்தைக் கொடுக்கிறது. இது நவீனமான மற்றும் ஒரு அடர்த்தியான தோற்றத்தை விரும்புபவர்களுக்கு ஏற்றது.

இதற்கு நேர்மாறாக, க்ளாஸ் லிப்ஸ்டிக் (Gloss Lipstick) என்பது பளபளப்பான ஈரப்பதமூட்டும் மற்றும் அரை திரவ தன்மை கொண்டது. இது உதடுகளைப் பெரியதாகவும், வசீகரமான தோற்றத்துடனும் காட்டுகிறது.

இதையும் படியுங்கள்:
உங்க கால் வெடிப்புல எலி கூட பதுங்கிக்கொள்ளும்... நெய் தடவி பாருங்க!
Gloss lipstick

மேட் லிப்ஸ்டிக் உதடுகளை வறட்சியாக்க வாய்ப்புள்ளது, ஆனால் நீண்ட நேரம் அழியாது.

அதே சமயம் க்ளாஸ் லிப்ஸ்டிக் உதடுகளுக்கு ஈரப்பதம் அளித்தாலும், அதன் ஒட்டும் தன்மை மற்றும் குறைந்த ஆயுட்காலம் காரணமாக அடிக்கடி மீண்டும் பூச வேண்டியிருக்கும்.

க்ளாஸ் லிப்ஸ்டிக், ஒரு வசதியான மற்றும் கவர்ச்சிகரமான தயாரிப்பாக, உதடுகளுக்கு அதிகபட்சப் பளபளப்பையும், ஈரப்பதத்தையும் அளித்து, உங்கள் ஒட்டுமொத்த அழகையும் கூட்டுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com