

இன்றைய நவ நாகரீக நங்கையர்கள் எடை குறைவான புதிய டிசைன் தங்க நகைகளை அதிகம் விரும்பி அணிகின்றனர். பார்ப்பதற்கு 'லுக்'கான தோற்றத்தை கொடுக்கும் சிறிய வகை நகைகள் அதிகம் பிரபலம் அடைந்து வருகிறது. அந்த வகையில் மாடர்ன் லுக் கொடுக்கும் 1 கிராம் இன்ஃபினிட்டி கம்மல் டிசைன்களை இப்பதிவில் காண்போம்.
பாரம்பரிய இன்ஃபினிட்டி கம்மல்கள் - Traditional Infinity Earings:
எடை குறைவான அதேசமயம் பாரம்பரிய அழகுடன் தோற்றமளிக்கும் இன்ஃபினிட்டி கம்மல்கள் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹூக் ஸ்டைல் கம்மலான இது கல்லூரி செல்லும் மாணவிகளின் விருப்பமான தேர்வாக உள்ளது.
மேஷ் வொர்க் கோல்ட் கம்மல்கள் - Mashwork Gold Earings:
'S' வடிவ லாக் கொண்ட புதுமையான டெக்ஸ்சர் இன்ஃபினிட்டி கம்மல்கள் சிறப்பான தோற்றத்தை வழங்குகிறது. குர்தி, ஜீன்ஸ், ஃபார்மல் உடைகளுக்கு நேர்த்தியான தோற்றத்தை தருவதால் நவநாகரீக பெண்களின் முதல் தேர்வாக உள்ளது.
ஹார்ட்ஷேப் இன்ஃபினிட்டி கம்மல்கள் - Heart Shape Infinity Design:
இதய வடிவத்துடன் இன்பினிட்டி குறியீடு கொண்ட ஹார்ட்ஷேப் இன்ஃபினிட்டி கம்மல்கள் Gen -Z பெண்களுக்கு மிகவும் பிடித்த டிசைனாக உள்ளது. காதல் மட்டும் டிரெண்டினஸ்ஸை காட்டும் இந்த கம்மல் வெஸ்டர்ன் மற்றும் கேஷூவல் ஆடைகளுக்கு பொருத்தமானதாக இருக்கிறது.
ஸ்டோன் இன்ஃபினிட்டி போ பாலி - Stone Infinity Bow Bali:
அமெரிக்கன் டைமண்ட் போ வடிவ இன்ஃபினிட்டி கம்மல்கள் ஸ்டட் பேட்டர்ன் மூலம் கூடுதல் உறுதியை தருவதால் புதிய பேஷன் விரும்பி களுக்கு ஏற்ற தேர்வாக உள்ளது. பெண்களுக்கு மென்மையான அழகை தரும் இந்த டிசைன் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.
ட்விஸ்டெட் இன்ஃபினிட்டி தங்க பாலி - Twisted Infinity Gold Bali:
இன்ஃபினிட்டி ட்விஸ்ட் கொண்ட நவீன ஹக்கி பாலி டிசைனில் இருக்கும் ட்விஸ்டெட் 'இன்ஃபினிட்டி தங்க பாலி கம்மல்கள்' தினசரி அணிவதற்கு தேவையான பாதுகாப்பான வலுவான லாக் மற்றும் அதிக வசதியுடன் இருப்பதால் பெண்களின் முதன்மை தேர்வாக உள்ளது. மேற்கூறிய டிசைன்கள் அனைத்தும் புதுமையான வடிவங்களில் இருப்பதால் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.