முகம் கண்ணாடி போல மின்ன ஆசையா? - 'மில்கி பியூட்டி' மேக்கப் ரகசியங்கள்!

Makeup secrets
Makeup secrets
ஆர்.ஐஸ்வர்யா

I am a Fashion Technologist graduated from National Institute of Fashion Technology, Gandhinagar, Gujarat. I am interested in creating fashion related articles, Psychology and lifestyle articles. I am grateful to CEO of Kalki group, and it’s publishers. I am thankful to the readers for reading my contributions.

Updated on

மூக வலைதளங்களைத் திறந்தாலே 'கிளாஸ் ஸ்கின்' (Glass Skin) மற்றும் 'மில்கி பியூட்டி' (Milky Beauty) என்ற வார்த்தைகள்தான் தற்போது  டிரெண்டிங்கில் உள்ளன. முகம் கண்ணாடி போல மின்ன வேண்டும், ஒருவித ஈரப்பதத்துடன் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய இளம் பெண்களின் விருப்பம். ஆனால், நம் ஊர் வெயிலுக்கும் ஈரப்பதமான தட்பவெப்ப நிலைக்கும் இந்த கண்ணாடிப் பளபளப்பு பல நேரங்களில் முகத்தில் எண்ணெய் வழிவது போன்ற தோற்றத்தைத் தந்துவிடுகிறது.

 மேக்கப் பரிதாபங்கள்:

முகத்தின் இயற்கையான பொலிவிற்கும், எண்ணெய் வழிவதற்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் உள்ளது. ஹாலிவுட் அல்லது கொரியன் பெண்களைப் பார்த்து நாம் மேக்கப் முறைகளை அப்படியே பின்பற்றும்போது ஒரு சிக்கல் எழுகிறது. அவர்கள் வாழும் குளிரான சூழலுக்கு அந்த மேக்கப் பொருத்தமாக இருக்கும். ஆனால், 40 டிகிரி வெயில் அடிக்கும் சென்னைக்கோ அல்லது அதிக ஈரப்பதம் கொண்ட கேரளாவுக்கோ அதே மேக்கப் செட் ஆகாது.

மேக்கப் போட்ட அரைமணி நேரத்தில் முகம் அழகாகத் தெரியும். ஆனால், நாம் வெளியே கிளம்பிச் செல்லும் போது வியர்வையும், சருமத்தின் இயற்கையான எண்ணெயும் மேக்கப் சாதனங்களுடன் கலந்துவிடும். இதனால் முகம் பொலிவாகத் தெரிவதற்குப் பதில், ஏதோ எண்ணெய் வடியும் முகம் போலவும், முகம் கருத்தது போலவும் தோன்றும்.

சரி செய்ய வேண்டிய 5 மேக்கப் தவறுகள்!

ப்ரைமர்  தவிர்ப்பது: பலரும் நேரடியாக முகத்தில் பவுண்டேஷன் க்ரீம் போடுகிறார்கள். இது சரும துளைகளை அடைத்து வியர்வையை அதிகப்படுத்தும்.

அதிகப்படியான ஹைலைட்டர்: கன்னம், நெற்றி, தாடை என முகம் முழுவதும் மின்ன வேண்டும் என நினைப்பது தவறு. இது உங்களை ஒரு 'டிஸ்கோ பால்' போலக் காட்டும்.

இதையும் படியுங்கள்:
சரும வறட்சி முதல் கை, கால் முட்டி கருமை வரை... அனைத்திற்கும் ஒரே தீர்வு!
Makeup secrets

தவறான பவுண்டேஷன் தேர்வு: எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் 'க்ரீம்' (Cream-based) வகை மேக்கப்பை பயன்படுத்தினால், அது வெயிலில் உருக ஆரம்பிக்கும்.

செட்டிங் ஸ்ப்ரே பயன்படுத்தாமை: மேக்கப்பை கலைக்காமல் அப்படியே வைத்திருக்க செட்டிங் ஸ்ப்ரே அவசியம். தற்போது  இது ஒரு கட்டாயத் தேவையாகிவிட்டது.

பவுடர் டச்-அப் : ஒருமுறை மேக்கப் போட்டுவிட்டால் அப்படியே விட்டுவிடக்கூடாது. அவ்வப்போது ஈரத்தை ஒற்றி எடுக்கவேண்டும். பவுடர் டச்-அப் செய்துகொள்ள வேண்டும்.

பொலிவான முகத்தைப்பெற எளிய வழிகள்

அதிகப்படியான மேக்கப் கோட்டிங், க்ரீம் லேயர்களைத் தவிர்த்து, சருமத்தின் இயற்கையான நிறத்தை மெருகேற்ற வேண்டும்.

மேட் பினிஷ் ப்ரைமர்: எண்ணெய் பசையுள்ள சருமம் கொண்டவர்கள் 'மேட் பினிஷ்' ப்ரைமரைப் பயன்படுத்துங்கள். இது வியர்வையைக் கட்டுப்படுத்தி சருமத்தைச் சீராக வைக்கும்.

பவுடருக்குப் பதில் பேப்பர்: முகத்தில் எண்ணெய் வழிவது போல் தெரிந்தால் உடனே பவுடர் போடாதீர்கள். அது மேக்கப்பைத் திட்டுத்திட்டாக மாற்றும். அதற்குப் பதில் 'ப்ளாட்டிங் பேப்பர்' (Blotting paper) பயன்படுத்தி எண்ணெயை மட்டும் ஒற்றி எடுங்கள். நெற்றி மற்றும் மூக்கு பகுதிகளில் மட்டும் லேசாக பவுடர் தடவுங்கள். மற்ற இடங்கள் இயற்கையாக மின்னட்டும்.

இதையும் படியுங்கள்:
ஒரே வாரத்தில் கரும்புள்ளிகள் மறைய... நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
Makeup secrets

எந்த மேக்கப்பை விடவும் ஆரோக்கியமான சருமமே மிகப்பெரிய ஃபேஷன். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, காய்கறிகளை உணவில் சேர்ப்பது உங்கள் சருமத்தை உள்ளிருந்தே மின்ன வைக்கும். தரமான சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சூரியக் கதிர்களால் சருமம் கருமையாவதைத் தடுக்கும்.

மேக்கப் என்பது முகத்தின் அழகை குறைப்பதற்கல்ல, அழகை மெருகூட்டுவதற்கே. எனவே, உங்கள் சருமத்தின் தன்மை மற்றும் ஊரின் தட்பவெப்ப நிலையை அறிந்து மேக்கப் செய்யுங்கள். மிளிரும் முகத்துடன் தன்னம்பிக்கையோடு வலம் வாருங்கள்!

logo
Kalki Online
kalkionline.com