
குளிர்காலத்தில் குழந்தைகளை வசதியாகவும் கதகதப்பாகவும் ஸ்டைல் ஆகவும் தோற்றமளிக்க வைக்கும் ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். இந்த பதிவில் சிறுவர் சிறுமியருக்கான குளிர்கால ஆடைகளைப் பற்றி பார்ப்போம்.
குளிர்கால சிறுமியர் ஆடைகள்
டர்ட்டில் நெக் (Turtle neck) ஆடைகள்;
டர்டில்னெக் ஆடை என்பது கழுத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் உயரமான காலர் கொண்ட ஒரு வகை ஆடை. இது குழந்தைகளை கதகதப்பாக வைத்திருக்கும். இவை குறுகிய அல்லது நீளமான பல்வேறு வடிவங்களில் வருகின்றன. இதை பார்ப்பதற்கு ஸ்டைல் ஆகவும் அணிவதற்கு வசதியாகவும் இருக்கும்.
ஸ்னோ சூட் (snow suit) ஆடைகள்;
அதிகப்பனிப்பொழிவு உள்ள பகுதியில் வசிப்பவராக இருந்தால் வழக்கமான ஆடைகளுக்கு மேல் அணியக் கூடிய ஸ்னோ சூட் ஆடைகளையும் அணியலாம். இது குளிர் மற்றும் பனிக்கு ஏற்றவாறு கதகதப்பாக இருக்கக்கூடிய வகையில் நீண்ட சட்டை மற்றும் ஒரு பேண்ட்டையும் கொண்டுள்ளது. பனியில் விளையாடும் போது சிறுமிகளை வசதியாகவும் நீர் உட்புகா வண்ணமும் இருக்கும். கீழ்ப்பகுதியில் தடிமனான பாவாடை போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது.
வெப்ப (thermal)ஆடைகள்;
கம்பளி அல்லது செயற்கைக் கலவைகள் போன்ற ஈரப்பதத்தை உறிஞ்சும் துணிகளால் செய்யப்பட்ட வெப்ப ஆடைகள் குளிர் காலத்திற்கு சிறந்தவை. அவை உடலை இறுக்கிப்பிடிக்காமல் அதாவது கனமாக இல்லாமல் இதமாக இருக்கின்றன. சட்டைப் பகுதியில் நீண்ட கை அல்லது குறுகிய கை இருக்கும். பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் வருகின்றன. மென்மையாகவும் வசதியாகவும் இருப்பதால் நாள் முழுவதும் அணிவதற்கு ஏற்றது.
ஸ்கேட்டர் (scatter)ஆடைகள்;
பருத்தி, பாலிஸ்டர் போன்ற மெட்டீரியலில் தயாராகும் இவை முழங்கால் வரையிலான அளவில் இருக்கும் ஒரு விரிந்த பாவாடை போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். இதன் கீழே லெக்கின்ஸ் அணிந்து கொள்ளலாம்.
பஃப் ஸ்லீப் (puff sleeve) ஆடைகள்;
பஃப் ஸ்லீவ் ஆடைகள் பார்ப்பதற்கு வேடிக்கையான மற்றும் ஸ்டைலான ஆடையாகும். வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் தயாராகிறது. கீழே அழகான பாவாடை அமைப்பும், பஃப் வைத்த கையுமாக இருக்கும் சட்டையுமாக, பிறந்தநாள் விழாக்கள் மற்றும் விசேஷங்களுக்கு அணிய ஏற்றவை.
சிறுவர்களுக்கு ஏற்ற குளிர்கால ஆடைகள்
தெர்மல் டாப்ஸ்;
இது பிரத்தியேகத் துணியினால் செய்யப்பட்ட சூடான சட்டைகள். குளிர் பனிக்காலங்களில் சிறுவர்கள் வெளியே விளையாடும்போது அவர்களுக்கு வசதியாக இருக்கின்றன. இவை நீண்ட ஸ்லீவ்கள் அல்லது ஷார்ட் ஸ்லீவ்களைக் கொண்டிருக்கலாம். பொருத்தமான லெக்கின்ஸ் அணிந்து கொள்ளலாம்.
இன்சுலேட்டட் ஜாக்கெட்; (Insulated jackets)
இவை வெப்பத்தைத் தாங்கிப் பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் மென்மையான வசதியான துணியைக் கொண்டிருக்கும், ஆனால் லைட் வெயிட்டாக இருக்கும். தலைப்பகுதியில் ஹுட் போன்ற ட அமைப்பும் இருப்பதால் தலையையும் பாதுகாக்கிறது.
கம்பளி, பருத்தி சட்டைகள் மற்றும் பேண்ட்கள்;
இதை பருத்தியாலான ஆடைகள் மென்மையாகவும் காற்று உள்ளே போய் வரக்கூடிய வகையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ஏற்றது. அதே சமயம் கம்பளியால் இணைக்கப்பட்டிருப்பதால், சூடாகவும் கதகதப்பாகவும் வைக்கும்.
ஹென்லி (Henley) சட்டை;
இது குறுகிய கையும் வட்ட கழுத்துப்பகுதியும், முன்புறத்தில் சில பொத்தான்களும் இருக்கும். பார்ப்பதற்கு க்ரூ நெக் டி-ஷர்ட் போன்று இருக்கும். தளர்வான வகையில் இருப்பதால் அணிவதற்கு சௌகரியமாக இருக்கும். இதை அணிந்து அதன் மேலே ஸ்வெட்டர் அணிந்து கொள்ளலாம். இதை பருத்தி அல்லது இதமான துணிக்கலவைகளால் செய்யப்படுவதால் சுவாசிக்கக் கூடிய வகையில் சௌகரியமாக இருக்கிறது.
அதிகக்குளிர் அல்லது பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் இடத்தில் வசிப்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பல அடுக்குகளைக் கொண்ட ஆடைகளை தேர்வு செய்து அணிவிக்க வேண்டும். வெளியில் செல்லும் போதும் விளையாடும்போது பிரகாசமான வண்ணங்களை கொண்ட ஆடைகளையும், தொப்பிகள் கையுறைகள் போன்றவையும் அணிவிக்க வேண்டும். அப்போது தான் உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவும். அதே சமயம் ஈரப்பதத்தை உறிஞ்சும் வகையில் இந்த ஆடைகள் தயாரிக்கப்பட வேண்டும்.