
ரோஜா மலர் இதய நோய்களிலிருந்து நம்மைக் காக்கும். இதன் இதழ்கள் புண்களை ஆற்றும். உடலுக்கு பலம் தந்து இதயம், நரம்பு மண்டலத்திற்கு நன்மை தரும். தொண்டையிலுள்ள நோய் சளி, இருமல், சுவாச நோய் நாவறட்சியை குணமாக்கும்.
ரோஜா இதழ்களில் உள்ள துவர்ப்புச்சுவை வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும். ரோஜாப்பூவினால் தயாரிக்கப்படும் 'குல்கந்து ' மலச்சிக்கலுக்கு நல்ல பலன் தரும்.
ரோஜா இதழ்களை அப்படியே மென்று தின்றால் வாய்ப்புண் குணமாகும். ரத்தம் சுத்தமாகும். சருமம் பளபளப்பாகும்.
உஷ்ணம் காரணமாக ஏற்படும் வயிற்று வலி நீங்கும். பித்தம் காரணமாக மயக்கம், குமட்டல், வாந்தி, நெஞ்சு எரிச்சல் கோளாறுகளுக்கு 2 கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதித்ததும் வடிகட்டி காலை, மாலை இரு வேளை 1 வாரம் குடித்தால் பித்தம் அறவே நீங்கும்.
ரோஜாப் பூவைக் குடிநீராக்கி வாய் கொப்பளித்தால் வாய்ப்புண், வாய் நாற்றம் நீங்கும்.
ரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சல் இருக்கும்போது சில துளிகள் விட்டால் எரிச்சல் குறையும். அதிக வியர்வை நாற்றம் ஏற்படும் நேரங்களில் குளிக்கும் நீரில் ரோஜாப் பன்னீரைக் கலந்து குளித்தால் துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். ரோஜா இதழ்கள் மூலநோய்க்கு மருந்தாகிறது.
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை தொடர்பான நோய்களை ரோஜா இதழ்கள் மருந்தாக பயன்படுகிறது. பெண்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கும். உடல் இளமையாகவும் இருக்கும்
ரத்தம் சுத்தமாக இருக்க ரோஜா இதழ்களை நன்றாக அரைத்து கெட்டியான தயிரில் கலந்து. காலை வேளையில் சாப்பிட ரத்தம் சுத்தமாகும்.
செரிமான பிரச்னை நீங்க ரோஜா இதழ்களை நீரில் கலந்து குடித்து வர செரிமான பிரச்னை விரைவில் நீங்கும்.
ரோஜாப்பூ நிறைய கிடைக்கும்போது நிழலில் உலர்த்தி எடுத்து கஷாயம் செய்து சாப்பிட உடம்பிற்கு மிகவும் நல்லது. இதனால் வாய்ப்புண், கர்ப்பிணிகளுக்கு சிறுநீர் நன்கு பிரியும்.
சருமம் பள பளக்க ரோஜா இதழ்களுடன் கற்றாழை ஜெல் சேர்த்து சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் பள பளப்பாகும்.