பெண்கள் உங்களைப் பார்த்ததும் முதலில் கவனிக்கும் 7 சீக்ரெட் விஷயங்கள்.. இதை ஆண்கள் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!

mens grooming secrets
mens grooming secrets
Updated on

ஆண்கள் பொதுவாக தங்களை அழகுபடுத்திக்கொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை. ஏதோ ஒரு சட்டையையும் பேன்ட்டையும் அவசரமாக மாட்டிவிட்டு கிளம்பிவிடுவது அவர்களின் வழக்கம். நாம் பார்ப்பதற்கு நேர்த்தியாகத் தான் இருக்கிறோம் என அவர்கள் நினைப்பதுண்டு. ஆனால் பெண்கள் ஒரு ஆணைப் பார்க்கும்போது அவர்களின் ஒட்டுமொத்த தோற்றத்தை மட்டும் பார்ப்பதில்லை. 

ஆண்களின் ஆடைகளில் ஒளிந்திருக்கும் மிக நுணுக்கமான சில விஷயங்களைத்தான் அவர்கள் முதலில் ஸ்கேன் செய்வார்கள். பெரும்பாலான ஆண்கள் கொஞ்சமும் காதிலேயே வாங்கிக்கொள்ளாத, ஆனால் பெண்கள் உடனடியாக கவனித்து எடைபோடும் 7 முக்கியமான ஆடை ரகசியங்களை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பெண்கள் ஆண்களிடம் கவனிக்கும் 7 ஆடை ரகசியங்கள்!

1. நீங்கள் எவ்வளவு விலையுயர்ந்த ஆடைகளை அணிந்திருந்தாலும், உங்களின் ஷூக்கள் சுத்தமாக இல்லை என்றால் அந்த மொத்த லுக்கும் வீணாகிவிடும். சேறு படிந்த ஷூக்கள் அணிவதையோ அல்லது ஃபார்மல் டிரஸ்க்கு ஸ்போர்ட்ஸ் ஷூ அணிவதையோ பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். ஷூக்களை பாலிஷ் செய்து வைப்பது மிக முக்கியம்.

2. டிரஸ் ரொம்ப லூசாகவும் தொளதொளவென இருக்கக் கூடாது, அதே சமயம் மூச்சு விட முடியாத அளவுக்கு டைட்டாகவும் இருக்கக் கூடாது. தோள்பட்டை தையல் சரியான இடத்தில் உட்கார்ந்திருக்கிறதா என்பதையும் பேன்ட் நீளம் சரியாக உள்ளதா என்பதையும் பெண்கள் மிக நுட்பமாக கவனிப்பார்கள்.

3. இஸ்திரி போடாத சுருக்கங்கள் நிறைந்த சட்டையை அணிந்து சென்றால், நீங்கள் ஒரு பொறுப்பற்ற நபர் என்ற எண்ணம் பெண்களுக்கு உடனடியாக வந்துவிடும். அவசரமாக கிளம்பினாலும், ஆடைகளை அழகாக அயர்ன் செய்து அணிவது உங்கள் மீது ஒரு பெரிய மரியாதையை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
கருப்பு நிற விமானங்களா? அதுவும் கலாச்சாரத்தின் சின்னமாம்! எந்த நாட்டில் தெரியுமா?
mens grooming secrets

4. நீங்கள் கருப்பு நிற ஷூ அணிந்தால் கருப்பு நிற பெல்ட் தான் அணிய வேண்டும். பழுப்பு நிற ஷூவிற்கு கருப்பு பெல்ட் அணிவதை பெண்கள் மிக எளிதாக கவனித்து உங்களின் ஃபேஷன் சென்ஸை மதிப்பிட்டு விடுவார்கள்.

5. நீங்கள் உட்காரும்போதோ அல்லது நடக்கும்போதோ உங்களின் சாக்ஸ் வெளியே தெரியும். அப்போது அதில் ஓட்டை இருந்தாலோ அல்லது ஃபார்மல் டிரஸ்க்கு வெள்ளை நிற ஸ்போர்ட்ஸ் சாக்ஸ் அணிந்திருந்தாலோ அது ரொம்பவே மோசமான ஒரு தோற்றத்தை கொடுக்கும். டார்க் நிற சாக்ஸ் அணிவது எப்போதும் பாதுகாப்பானது.

6. சட்டை பார்ப்பதற்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் அதன் காலர் பகுதி கசங்கிப் போயோ அல்லது சட்டைக் கைகளின் ஓரங்களில் அழுக்கு படிந்தோ இருந்தால் அது உங்களின் சோம்பேறித்தனத்தை அப்படியே காட்டிக் கொடுத்துவிடும். வெளுத்துப் போன காலர் கொண்ட சட்டைகளை தவிர்ப்பது நல்லது.

7. வெறும் கைகளோடு இருப்பதை விட, ஆடைக்கு தகுந்தாற்போல ஒரு நல்ல வாட்ச் அணிவது ஆண்களுக்கு ஒரு தனி கம்பீரத்தை கொடுக்கும். சாதாரண டி-ஷர்ட்டிற்கு ஸ்போர்ட்ஸ் வாட்ச் மற்றும் அலுவலக உடைக்கு லெதர் ஸ்ட்ராப் வாட்ச் அணிவதை பெண்கள் ரொம்பவே ரசிப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
பங்க்ஷன் போறீங்களா? ஆடை நழுவாமல் இருக்க இந்த மேஜிக் டேப் ட்ரை பண்ணுங்க!
mens grooming secrets

ஆடை அலங்காரம், பல ஆயிரம் ஆயிரமாக செலவு செய்து பிராண்டட் துணிகளை வாங்குவதில் கிடையாது. நாம் அணியும் சாதாரண உடையை எவ்வளவு சுத்தமாகவும் பொறுப்பாகவும் அணிகிறோம் என்பதில் தான் உண்மையான ஸ்டைல் அடங்கியிருக்கிறது. விலையுயர்ந்த பெர்ஃப்யூம் அடித்துக்கொண்டு செல்வதை விட, இந்த ஏழு சிறு விஷயங்களில் நீங்கள் காட்டும் அக்கறைதான் உங்களை பெண்களின் மத்தியில் ஒரு ஜென்டில்மேனாக நிலைநிறுத்தும்.

logo
Kalki Online
kalkionline.com