உங்க பீரோவில் ஒரே கலர் டிரஸ் அதிகமா இருக்கா... அப்போ இந்த ஸ்டைலிங் ட்ரிக்ஸ் உங்களுக்குத்தான்!

Monochrome Fashion
Monochrome Fashion
Published on

ஃபேஷன் உலகில் எப்போதுமே ஒரு புது ட்ரெண்ட் வந்து போய்க்கொண்டே இருக்கும். அதில் பல வருடங்களாக பாலிவுட் நடிகைகள் முதல் சாதாரண பெண்கள் வரை அனைவரையும் ஈர்த்த ஒரு அட்டகாசமான ஸ்டைல் என்றால் அது ஒரே வண்ண ஆடைகளை அணிவதுதான். ஆங்கிலத்தில் இதை மோனோகுரோம் பேஷன் (Monochrome Fashion) என்று சொல்வார்கள். 

மேலேயும் கீழேயும் ஒரே கலரில் சட்டை மற்றும் பேன்ட் போட்டால் பார்ப்பதற்கு ஸ்கூல் யூனிபார்ம் போல போர் அடிக்கும் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் சில ஸ்மார்ட்டான ட்ரிக்ஸ்களை பயன்படுத்தினால் அதே உடையை வைத்து நாம் ஒரு பெரிய பேஷன் ஐகானாகவே மாறிவிடலாம். 

ஒரே கலரில் டிரஸ் செய்யும்போது எல்லாமே ஒரே வகையான துணியாக இல்லாமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். உதாரணமாக, நீங்கள் பருத்தி துணியில் ஒரு பேன்ட் அணிந்தால், அதற்கு மேலாடையாக அதே கலரில் பளபளப்பான பட்டு அல்லது டெனிம் துணியை அணியலாம். இப்படி கடினமான மற்றும் மென்மையான துணி வகைகளை ஒன்றாகச் சேர்த்து அணியும்போது அது பார்ப்பதற்கு ரொம்பவே ரிச்சான ஒரு லுக்கை உடனடியாக கொடுத்துவிடும்.

அளவுகளில் வித்தியாசம் காட்டுங்கள்!

ஒரே நிறத்தில் உடை அணியும்போது உங்களின் உடல் அமைப்புக்கு ஏற்றவாறு தளர்வான, இறுக்கமான ஆடைகளை மாற்றி மாற்றி அணிய வேண்டும். ஒரு பெரிய லூசான பேன்ட் போட்டால், அதற்கு மேல் சற்று இறுக்கமான டாப்ஸ் அணிவது ரொம்ப மாஸாக இருக்கும். இதேபோல ஸ்கர்ட் மற்றும் சட்டைகளை மாற்றி அணியலாம். இந்த மாதிரி உடைகளின் அளவுகளில் நாம் காட்டும் வித்தியாசம் நமது ஒட்டுமொத்த தோற்றத்தையும் ரொம்பவே அழகாக எடுத்துக் காட்டும்.

லேயரிங் ஸ்டைல்!

பாலிவுட் பிரபலங்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு சீக்ரெட் ட்ரிக் இதுதான். நீங்கள் அணிந்திருக்கும் அதே கலரில் சற்று டார்க் அல்லது லைட்டான ஷேடில் ஒரு ஓவர்கோட், நீளமான ஜாக்கெட் அல்லது அழகான ஸ்கார்ஃப் அணிந்து பாருங்கள். இந்த லேயரிங் முறை உங்களின் சிம்பிளான டிரஸை கூட ஒரு பெரிய டிசைனர் ஆடை போல கொஞ்சம் கெத்தாக மாற்றிவிடும்.

இதையும் படியுங்கள்:
50 வயதிலும் "மின்னும்" அழகு - இதோ உங்களின் ஸ்பெஷல் கைடு!
Monochrome Fashion

பொருத்தமான Accesories!

உங்களின் ஆடை ஒரே நிறத்தில் இருப்பதால், நீங்கள் அணியும் நகைகள் உங்களை இன்னும் பிரகாசமாக காட்ட பெரிதும் உதவும். ஆடை ரொம்ப சிம்பிளாக இருந்தால் பெரிய நெக்லஸ் அல்லது நீளமான காதணிகளை தாராளமாக அணியலாம். ரொம்பவே மென்மையான நியூட்ரல் நிறங்களில் கவரிங் ஆபரணங்களை தேர்ந்தெடுப்பது உங்களின் டிரஸுக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுக்கும்.

சரியான காலணிகள்!

உங்களின் முழுமையான ஸ்டைலை நிறைவு செய்வது நீங்கள் அணியும் காலணிகள்தான். நீங்கள் அணிந்திருக்கும் ஆடையின் நிறத்திலேயே சற்று வித்தியாசமான ஷேடில் காலணிகளை அணியலாம். அல்லது ரொம்பவே பாதுகாப்பான தேர்வாக கருப்பு மற்றும் வெள்ளை போன்ற நியூட்ரல் நிற ஷூக்களை அணியலாம். நீங்கள் கொஞ்சம் தைரியமான நபர் என்றால், உங்களின் டிரஸுக்கு முற்றிலும் நேரெதிரான ஒரு பளீர் நிறத்தில் காலணியை அணிந்து எல்லோரையும் ஆச்சரியமாக திரும்பிப் பார்க்க வைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சிங்கப்பூர் போறீங்களா? அப்படின்னா இந்த 7 விஷயத்தை கண்டிப்பா செய்யாதீங்க!
Monochrome Fashion

இந்த ஸ்டைலிங் டிப்ஸ்களை மனதில் வைத்துக்கொண்டு, உங்களின் பீரோவில் இருக்கும் ஒரே நிற ஆடைகளை எடுத்து இன்றே ஒரு புது விதமாக மேட்ச் செய்து பாருங்கள். நீங்களும் இனிமேல் எந்த ஒரு பார்ட்டியாக இருந்தாலும் ஒரு மாஸான பேஷன் ஸ்டாராக வலம் வரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com