

குளிர்காலம் வந்தாலே உதடு வெடிப்பு, தோலில் வறட்சி தன்மை ஏற்படலாம். இதை அப்படியே விட்டுவிட்டால் பாதிப்பு அதிகமாகிவிடும். குளிக்கும் முன் உடலில் லேசாக தேங்காய் எண்ணெய் தேய்த்து பிறகு குளித்தால் தோல் எளிதில் வறண்டு போகாது. சோப்பு போடுவதை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக பாசிப்பருப்பு மாவு போட்டு குளித்து வந்தால் மேனி பொலிவு பெறும்.
குளிர்காலத்தில் அதிகமாய் சருமம் வறண்டு போகும் வறண்டு போன சருமத்திற்கு தேன் கலந்து முகபேக் நல்லது இரண்டு ஸ்பூன் தேனில் சிறிதளவு முல்தானி மெட்டி பவுடர் போட்டு நன்றாக குழைத்து விடவேண்டும். அடர்ந்த பேஸ்ட் போல் இருக்கும் இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவிட வேண்டும் பலன் கிடைக்கும்.
மழை குளிர்காலங்களில் முகத்துக்கு ஆவிபிடிப்பது, வெதுவெதுப்பான நீரில் கை கால்களுக்கு மசாஜ் செய்வது மிகவும் இதமாக இருக்கும்.
மழைக்காலத்தில் கூந்தல் அதிகமாய் வறண்டுபோய் ஓரங்களில் வெடிப்பு ஏற்பட்டு முடி இழப்பை ஏற்படுத்தும். இதை தவிர்க்க அவ்வப்போது எண்ணெய் மசாஜ் கொடுக்க வேண்டும்.
மழைக்காலங்களில் குளிர்காலங்களில் கைகளில் சுருக்கம் ஏற்பட்டால் ஒரு எலுமிச்சம்பழத்தை இரண்டு உள்ளங்கைகளிலும் எடுத்துக்கொண்டு அதனுடன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவேண்டும். சர்க்கரை கரைந்ததும் கைகளில் மெதுவாக தேய்க்கவேண்டும். பின்னர் வெதுவெதப்பான நீரிலும் அதன் பின் குளிர்ந்த நீரிலும் கழுவினால் சுருக்கங்கள் காணாமல் போய்விடும்.
மழைக்காலங்களில் கைகளுக்கு அதிகமாக சோப்பு பயன்படுத்தக்கூடாது கோல்ட் கிரீம் பயன்படுத்தி கைகளை கழுவலாம் மாய்ஸ்ரைசர் அல்லது ஹேண்ட் லோஷன் தடவலாம்.
குளிர்காலத்தில் ஏற்படும் முகச்சுருக்கத்தை தடுக்க சிறிது முட்டைக்கோஸ் சாறு எடுத்து அதனுடன் சிறிது ஈஸ்ட் மற்றும் தேன் கலந்து முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகச்சுருக்கம் ஏற்படுவது குறையும் .
மழைக்காலத்தில் நம் பாதங்களில் பித்த வெடிப்பு எட்டிப் பார்க்கும். பாதம் அதிகம் குளிர்ச்சியாக உணர்ந்தால் இரவில் ஆலிவ் எண்ணெயை தேய்த்து மசாஜ் செய்துவிட்டு தூங்கவேண்டும்.
வேப்பிலை மருதாணி மஞ்சள் மூன்றையும் அரைத்து பூசினால் பித்தவெடிப்பு குணமாகும்.
தினமும் படுக்கப்போகும் முன் தேங்காய் எண்ணெய் அல்லது வேப்ப எண்ணையை பாதங்களில் தடவி வந்தால் வெடிப்பு வராமல் இருக்கும்.
பாசிப்பருப்புடன் ஆரஞ்சு பழத்தோல் மற்றும் பாலாடை ஆகியவற்றை சமஅளவு எடுத்து அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்கும்.
ஃப்ரெஷ் கிரீமுடன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி வந்தால் சருமம் வறண்டு போகாமல் குளிர்காலத்தில் இருக்கும்.