இயற்கை தந்த 'பியூட்டி பார்லர்': முட்டைக்கோஸின் 8 அற்புத நன்மைகள்!


Natural 'Beauty Parlor'
Natural 'Beauty Parlor'
Published on

முட்டைக்கோஸ் (Cabbage) சாப்பிடுவதற்கு மட்டுமல்ல. சருமம் மற்றும் கூந்தல் அழகை பராமரிக்கவும் ஒரு சிறந்த இயற்கை பொருளாகும். இதில் உள்ள வைட்டமின் சி, கே மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தை இளமையாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகின்றன. வீட்டில் சமையலுக்கு வாங்கும் முட்டைக்கோஸை வைத்து செய்யக்கூடிய சில எளிய அழகு குறிப்புகள் இதோ;

முகம் பொலிவு பெற (Face Glow pack)

வெயிலால் கருமை அடைந்த சருமத்தை மீட்க இது உதவும். முட்டைக்கோஸ் இலைகளை நன்றாக அரைத்து சாறு எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15லிருந்து 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி உடனடி பொலிவைத் தரும்.

சுருக்கங்கள் நீங்க (Anti-Aging Mask)

முட்டைக்கோஸ் சாற்றுடன் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் சில துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி காய்ந்ததும் கழுவவும் .இதனால் முகத்தில் உள்ள மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மறையத் தொடங்கும்.

பருக்கள் மற்றும் எண்ணெய் பசை நீங்க (Oily skin care)

முட்டைக்கோஸ் சாற்றுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவ இதில் உள்ள கந்தக சத்து (sulpher) பருக்களை குணமாக்கி அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
"வெயிலிலும் முகம் கருத்துப் போகாமல் இருக்க இதோ சில எளிய வழிகள்!"

Natural 'Beauty Parlor'

கூந்தல் வளர்ச்சிக்கு (Hair care)

முடி உதிர்தல் பிரச்னை உள்ளவர்களுக்கு முட்டைகோஸ் சாறு நல்ல தீர்வாகும். முட்டைகோஸ் சாற்றை தலையில் (scalp) வேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும்.

முகப்பருக்கள் அதிகமாக இருந்தால் (For Acne-prone skin)

முகப்பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகளைக் குறைக்க இந்த முறை உதவும்.முட்டைக்கோஸ் இலைகளை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் வேப்பிலை பொடி அல்லது அரைத்த வேப்பிலை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.இதுபோல் செய்து வந்தால் முட்டைக்கோஸில் உள்ள சல்பர் மற்றும் வேப்பிலையின் கிருமி நாசினி பண்புகள் பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும்.

சருமம் மிகவும் வறட்சியாக இருந்தால் (For dry Skin)

சருமம் பொலிவின்றி வறண்டு காணப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த மாயச்சுரைசர். இரண்டு ஸ்பூன் முட்டைகோஸ் சாற்றுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் (Aloe vera) மற்றும் அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின் குளிர்ந்த நீரால் கழுவ இது சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து மென்மையாக்கும்.

கருவளையங்கள் நீங்க (For Dark Circles)

கண்களுக்கு கீழே உள்ள கருமையை போக்க முட்டைக்கோஸ் சாற்றில் பஞ்சை (cottonBalls) நனைத்து கண்களின் மேல் வைத்து 10 நிமிடம் ஓய்வெடுக்கவும். இதில் உள்ள வைட்டமின் கே ரத்த ஓட்டத்தை சீராக்கி கருமையை குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
ஸ்டைலா? ஆரோக்கியமா? ஹேர் ஜெல் உபயோகிப்பதால் முடி கொட்டுமா? ஓர் அலசல்!

Natural 'Beauty Parlor'

எல்லாவற்றுக்கும் மேலாக அழகு என்பது வெளிப்புற பராமரிப்பு மட்டுமல்ல. உட்புற ஆரோக்கியமும்தான். ஆதலால் முட்டைக்கோசை சூப் செய்தோ அல்லது சாலட் செய்தோ அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் அதில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் உங்கள் சருமத்தை இயற்கையாகவே ஜொலிக்க வைக்கும்.

இந்த எட்டு குறிப்புகளையும் தட்டாமல் பயன்படுத்தி அழகை மேம்படுத்திக்கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com