குழந்தைகளின் தலைமுடியை பாதுகாக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய இயற்கை வழிகள்!

Natural beauty tips
Natural beauty tips
கல்பனா ராஜகோபால்

கல்பனா எனும் நான் பள்ளிப் பருவத்திலிருந்தே என்னுள் இருக்கும் தமிழார்வத்தால் புத்தகம் வாசிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன். என் கவிதைக்கு முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் பெற்று உள்ளேன். என் கவிதை முதன் முதலில் மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியாகி அதற்கு பரிசும் பெற்றேன். பணி ஓய்வுக்கு பிறகு என் எழுத்துப் பணியை கல்கி ஆன்லைனில் தொடந்துள்ளேன். எனக்கு வாய்ப்பு நல்கிய. கல்கிக் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Updated on

குழந்தைகளோட முடி ரொம்ப மென்மையானது. கெமிக்கல் இல்லாத வீட்டில் இருக்கிற பொருட்களை கொண்டே தயாரித்து, தலையில் முடியின் வேர்கால்களில் படும் படியும் நுனிவரை தடவி, பேக் போல போட்டு ஊறிய பின் குளிக்க முடி மென்மையாகவும் உறுதியாகவும் இருக்கும்.

எண்ணெய்க் குளியல் - Oil Massage

வாரம் ஒரு முறை 2 ஸ்பூன் தயிர் + 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்துதலையில் தடவி மசாஜ் செய்துஇருபது நிமிடம் ஊற வைத்துபின் கழுவினால் முடி வறட்சி இல்லாமல் இருக்கும்.

வெந்தய பேஸ்ட் - Natural Conditioner

இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து அரைத்து தலையில் தடவி இருபது நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முடி உதிர்வு குறையும். இதை வாரம் ஒருமுறை செய்தால் போதும்.

இயற்கை ஷாம்பு - Natural Cleanser

மாதம் ஒரு முறை சீகைக்காய் + அரப்புப் பொடி சேர்த்துதண்ணீரில் கலந்து தலையில் தேய்த்தால் நன்கு நுரை வரும். அப்போது அழுக்குகள் நீங்கி முடி இயற்கையாக பளபளக்கும்.

இயற்கை கண்டிஷனர் - Softener

தேங்காயை அரைத்து தேங்காய் பால் எடுத்து அதை தலை முடிக்கு தடவி இருபது நிமிடம் ஊறவைத்து பின் ஷாம்பு போட்டு குளித்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கிரீம் போட்டு ஏமாந்தது போதும்... கொலாஜனை அள்ளித்தரும் இயற்கை பழங்கள் இதோ!
Natural beauty tips

குழந்தைகளுக்கான இயற்கை முக பராமரிப்பு

தேனும் பயத்தமாவு அல்லது கடலை மாவு கலந்துமுகத்தில் தடவி கழுவி வந்தால் முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எந்தக் காரணம் கொண்டும் அழகு சாதன பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது. அவர்களின் சருமம் மிகவும் மென்மையானதாக இருப்பதால் அவை அவர்களது சருமத்தை பாதிக்கும்.

logo
Kalki Online
kalkionline.com