
இயற்கையாகவே மருதாணிக்கு குளிர்ச்சித்தன்மை உள்ளதால் இது முடியை வலுவாக்கும். இதோடு இயற்கையான பொருட்களை சேர்க்கும்போது முடி ஆரோக்கியமாகிறது. ஆரோக்கியமான 5 மருதாணி ஹேர் மாஸ்க் பற்றிப் பார்ப்போம்.
மருதாணி வாழைப்பழ. மாஸ்க். இது வறண்ட மற்றும் மெலிதான முடிக்குச் சிறந்தது. வாழைப்பழத்திற்கு ஈரப்பதமும் மற்றும் பொடாசியம், இயற்கை ஆயில் கள் மாறும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
மருதாணி வாழைப்பழ மாஸ்க்
தேவையானவை:
ஹென்னா பௌடர் 4டேபிள்ஸ்பூன்
வாழைப்பழம்பழுத்தது 1
இரண்டையும் சிறிது நீர் விட்டு நன்கு கலந்து இக் கலவையைக் தலையில் முழுவதும் தடவி இரண்டு மணிநேரம் கழித்து ஷாம்பூ போட்டு அலச முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் ஆகும்.
ஹென்னா மெந்தயம் மாஸ்க்
புரதமும் நிகோடோனிக் அமிலமும் நிறைந்த வெந்தயம் முடி உதிர்வை தடுக்கக் கூடியது. இவை இரண்டும் இணையும் போது முடி அடர்த்தியாகிறது
தேவையானவை:
ஹென்னா பௌடர் 4 டேபிள் ஸ்பூன்
மெந்தயம் 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் அரைத்து ஹென்னாவுடன் கலந்து இதை தலை முடி முழுவதும் தடவவும்.பிறகு 45 நிமிடங்கள் கழித்து சல்ஃபர் இல்லாத ஷாம்பூ வால் அலசவும்.
ஹென்னா, நெல்லிக்காய், முட்டை, எலுமிச்சை மாஸ்க்
நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சையின் சி சத்துக்கள் முட்டையின் புரதச்சத்தோடு இணைந்து முடி வளர்ச்சியைத் தூண்டுவதோடு அதை தன்மையை ஆரோக்கிய மாக்கும்
தேவையானவை:
ஹென்னா பௌடர் 3 டேபிள் ஸ்பூன்
நெல்லிக்காய் பௌடர் 2 டேபிள் ஸ்பூன்
முட்டை. 1
அரை மூடி எலுமிச்சை ஜுஸ்
மேற்கூறிய வற்றையும் கலக்கி மென்மையான பேஸ்ட்ஆக்கி முடியில் தடவி அரைமணி நேரம் கழித்து நன்கு அலச முடி வலுவாகவும் மற்றும் அடர்த்தியாகவும் ஆவதை காணலாம்.
ஹென்னா மூல்தானி மிட்டி மாஸ்க்
இந்த இரண்டுமே எண்ணைப் பசை அதிகமுள்ள முடிக்கும் சிறந்ததாகும் தலையில் அழுக்கை நீக்கி முடியை நல்ல பொலிவாக பளபளப்பாக வைக்கும்.
மூல்தானி மிட்டி 2 டேபிள்
ஸ்பூன்
ஹென்னா பௌடர் 4டேபிள் ஸ்பூன்
இந்த இரண்டையும் நன்கு கலந்து தலை முழுவதும் தடவி தலை cap போட்டு மூடி இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் அலசவும் முடியின் நச்சுக்களை நீக்கக் கூடிய மாஸ்க் ஆகும்.
ஹென்னா, கறிவேப்பிலை, நெல்லிப் பௌடர், மற்றும் வெந்தயம் பேக்
இந்த முடி மாஸ்க்கினால் முடி உதிர்தல், முடி நரைத்தல் மற்றும் முடியின் தன்மை மாறும். கறிவேப்பிலை பிக்மெண்டேஷனை ஊக்குவிக்கும். நெல்லி, வெந்தயம் மற்றும் ஹென்னா முடியை வேர்க்காலிலிருந்து வலுவாக்கும்.
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
மெந்தயம் 2 டேபிள் ஸ்பூன்
நெல்லிப் பௌடர் 3 டேபிள்ஸ்பூன்
ஹென்னா பௌடர் 4 டேபிள் ஸ்பூன்
கடுகு எண்ணை ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலையையும் வெந்தயத்தையும் நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி இதில் நெல்லி மற்றும் ஹென்னா பௌடர் சேர்க்கவும். பிறகு கடுகு எண்ணை சேர்த்து இதை தலையில் தடவி ஒருமணி நேரம் கழித்து அலசவும் எந்தவித கெமிகல் கலப்பு இல்லாத இது முடியை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கும்.