
கழுத்துப்பகுதியில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் வயதான தோற்றத்தை கொடுக்கும். இந்த நெக்லைன்கள் இளமை மற்றும் ஆரோக்கியமான தோற்றத்தை பராமரிக்க விரும்புபவர்களுக்கு கவலை அளிக்கக் கூடியதாக இருக்கும். பார்த்தவுடன் வயதைக் கணிக்கும் இந்த கழுத்து சுருக்கத்தை நீக்கி தோலை இறுக்கமாக்குவதற்கான இயற்கை வழிகள் சில உள்ளன. இவற்றை செய்துவர இளமை தோற்றத்துடன் இருக்கலாம்.
ஹாட் ஸ்டோன் மசாஜ்:
வயதாகும் பொழுது கரும வடிவத்தை பராமரிக்க உதவும் புரத பொருளான கொலாஜன் உற்பத்தி குறையும். அதனால் சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள், தொய்வு போன்றவை ஏற்படும். இதனை வீட்டிலேயே செய்யலாம். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த ஒரு சிறந்த வழியாகும். கற்களில் இருந்து வரும் வெப்பம் கொலாஜன் உற்பத்தியை தூண்ட உதவுகிறது. இது நம் சருமத்தை இறுக்கமாக்க உதவும்.
பாதாம் எண்ணெய் மசாஜ்:
வைட்டமின் ஈ நிறைந்த பாதாம் எண்ணெய் சருமத்திற்கு ஏற்றது. குறிப்பாக கழுத்துப் பகுதியில் பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கொலாஜன் உற்பத்தியை தூண்ட உதவும். இதனால் கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் தொய்வடையாமல் இறுகி கழுத்து சுருக்கத்தை குறைக்க உதவும்.
எடையை நிர்வகித்தல்:
எடையை நிர்வகிப்பது மிகவும் முக்கியம். கூடுதலான எடையை உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் குறைத்து உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம். கொழுப்பு சத்து மிகுந்த உணவை அதிகம் எடுத்துக் கொள்வதும், எண்ணெயில் வறுத்த தின்பண்டங்களை உட்கொள்வதும், அதிகமான தூக்கம், சோம்பல், உடற்பயிற்சி இன்மை போன்றவை உடல் எடையை கூட்டிவிடும். சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வது நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
வெள்ளரி பேஸ்ட்:
நீர் சத்து மிகுந்த வெள்ளரிக்காயை அரைத்து கூழாக்கி சிறிது தயிருடன் கலந்து கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவிவிட கருத்து தசைகள் உறுதிப்படுவதுடன் இறுக்கமாகி சருமம் தொய்வடையாமல் பாதுகாக்கும். வெள்ளரிக்காய் விழுது சருமத்தை ஹைட்ரேட் செய்யவும் நெகழ்ச்சித் தன்மையை மேம்படுத்தவும் உதவும்.
ஈரப்பதம் மற்றும் ஹைட்ரேட்:
சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பது அதன் நெகிழ்ச்சித் தன்மையை பராமரிக்கவும். கழுத்து சுருக்கங்களை குறைக்கவும் உதவும். அத்துடன் அதிக அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை மேற்கொள்வதும் அவசியம். முகம் கழுவும் பொழுது கழுத்தையும் சேர்த்து சுத்தம் செய்ய மறக்க வேண்டாம். சோப்பு பயன் படுத்துவதை தவிர்த்து மூலிகை க்ளென்சர் அல்லது மூலிகை சோப்புகளை பயன்படுத்தலாம். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது சூரிய ஒளியில் இருந்து நம் சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.
கற்றாழை:
முகத்துக்கு பூசப்படும் அனைத்து கிரீம்களும் கற்றாழையிலிருந்துதான் பெறப்படுகிறது. எனவே கற்றாழை ஜெல்லை தினமும் கழுத்துப் பகுதியிலும், முகத்திலும் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர சருமத்திற்கு தேவையான சத்துகள் சருமத் துளைகளுக்குள் நுழைந்து அங்கு தேங்கியுள்ள நச்சுக்களையும், இறந்த செல்களையும் வெளியேற்றிவிடும். இதனால் சருமம் வறட்சி அடைவதையும் தடுக்கலாம்.
சந்தானம், பன்னீர், கிளிசரின் போன்றவற்றை பேஸ்ட் போல் குழைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவிவர சுருக்கங்கள் குறைந்து வயதான தோற்றத்தைக் கொடுக்கும் நெக்லைன்கள் போய்விடும்.