

முகத் துளைகள் பெரிதாக மாறுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?
உங்கள் முகத்தில் துளைகள் ஏன் ஏற்படுகின்றன. துளைகளில் செபேஷியஸ் க்ளாண்ட் உள்ளது. இது ஹார்மோன் குறைபாட்டால் அதிக அளவு எண்ணை சுரக்கப்பட்டு அவை இறந்த செல்களுடன் சேர்வதால் துளைகள் பெரிதாகின்றன. மேலும் கொலாஜன் சுரக்கப்படுவது குறைந்தாலும் துளைகள் தெளிவாக காணப்படும். இந்த முகத் துளைகளைப் போக்க இயற்கை வழிமுறைகளைக் குறித்து இப்பதிவில் காண்போம்.
வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு முகத் துளைகள் போக்க இயற்கை வழிமுறை
1. களிமண் மாஸ்க்
இது துளைகள போக்கக் கூடியது. பென்டோனைட் களிமண் முக அழுக்குகளை நீக்கக்கூடியது. இரண்டு டீஸ்பூன் பென்டோனைட் களிமண்ணை பேஸ்டாக்கி முகத்தில் பூசவும் 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.
2. இரட்டை க்ளென் சிங் முறை
ஜோஜோபா அல்லது பாதாம் எண்ணையை பயன்படுத்தி உங்கள் மேக்கப்பை கலைக்கவும். இது முகத்தில் உள்ள அசுத்தத்தை போக்கும்.
3. ஆவிபிடித்தல்
தண்ணீருடன் சிறிது புதினா அல்லது சாமோமைல் சேர்த்து கொதிக்கவைத்து அதை பத்து நிமிடம் ஆவி பிடிக்கவும். இது முக அழற்சியைப் போக்கும்.
4. இயற்கை எக்ஸ்ஃபோலியேஷன்
இதற்கு ஒரு பங்கு ஆப்பிள் சிடார் வினீகருடன் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து ஒரு பஞ்சு மூலம் முகத்தில் தடவிக் கழுவ நல்ல பயன் தெரியும்.
5. ஓட்ஸ் ஸ்க்ரப்
ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்சை பௌடராக்கி அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் வட்டவடிவ மாக மசாஜ் செய்யவும். ஓட்சில் இருக்கும் சபோனின் எண்ணைப் பசையை நீக்கும்.
6. தேன் சீனி
தேன், சீனி இரண்டையும் சம அளவில் கலந்து பயன்படுத்தவும். தேனில் பாக்டீரியா எதிர்ப்பும். சீனியில் எக்ஸ்ஃபோலியேட் பண்பும் உள்ளதால் இறந்த செல்களை நீக்கி துளைகளை போக்கும்.
7. முட்டை வெள்ளைக்கரு
முட்டை வெள்ளைக் கருவை நன்றாக அடித்து முகத்தில் தடவவும் குளிர்ந்த நீரால் கழுவ பலன் தெரியும்.
8. முல்தானி மட்டி
முல்தானி மட்டி இரண்டு டேபிள் ஸ்பூனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவிக் கழுவ முல்தானி மட்டி எண்ணைப் பசையைப் போக்கி முகத்துளையை நீக்கும்.
9. கடலைமாவு மஞ்சள்
இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடிமற்றும் தயிர் சேர்த்து முகத்தில் தடவிக் கழுவவும். தயிரின் ல்க்டிக் அமிலம் எக்ஸ்ஃபோலியேட் செய்யும். மஞ்சள் அழற்சியை குறைக்கும்.
10. ஐஸ்கட்டிகள்
ஒரு சுத்தமான துணியில் ஐஸ்கட்டிகளை வைத்து முகத்தில் ஒத்தடம் கொடுக்க துளைகளை போக்கும். இதை மேக்கப் போடுவதற்கு முன் செய்யலாம். ஆலோவேரா ஜெல்லை முகத்தில் தடவிக் கழுவுவதும் மிகச் சிறந்த பலனைத்தரும். ஆண்டி ஆக்சிடன்ட் பண்புகள் நிறைந்த க்ரீன் டீ டிகாக்க்ஷனை முகத்தில் ஒத்தடம் கொடுக்க முகத்துளைகளை போக்கும்.
எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி முகத் துளைகள் வராமல் தடுக்கும் உணவுகள்
துத்தநாத சத்துக்கள் நிறைந்த பூசணி விதைகள் இயற்கை முறையில் எண்ணைப்பசையைக் கட்டுப்படுத்தும். எனவே, துத்தநாக சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்வது மூலமாக எண்ணைப் பசைய கட்டுப்படுத்தலாம். மேலும் ஆன்டி ஆக்சிடண்ட் நிறைந்த பெர்ரி, கீரை வகைகள், நல்ல நிறமுள்ள காய்கறிகள், ஒமேகா கொழுப்பு அமிலம் நிறைந்த வால்நட், ஆளிவிதை போன்றவைகளும் சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.