
குளிர்காலத்தில் வறண்ட சருமம் உடையவர்களுக்கு சருமத்தில் எரிச்சல் மற்றும் விரிசல் ஏற்பட்டு மனதளவில் கூட பாதிப்பை ஏற்படுத்தலாம். குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் அடிக்கடி ஏற்படும் திட்டுக்களை அகற்றுவதற்கு சருமத்தை பராமரிப்பது மிகவும் இன்றியமையாதது. ஆகையால் வறண்ட சருமத்தை போக்க வீட்டிலேயே செய்யப்படும் சிறந்த 6 வீட்டு வைத்தியங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1.பச்சை பால் சுத்தப்படுத்தி
வீட்டில் இருக்கும் பச்சை அல்லது சூடான பால் சருமத்திற்கு சிறந்த சுத்தப்படுத்தியாக செயல்படுவதால், ஒரு மென்மையான பருத்தி உருண்டையை எடுத்து பாலில் நனைத்து, முகத்தை மெதுவாக சுத்தம் செய்யவும். ஸ்க்ரப்பிங் செய்ய பச்சை பாலில் சிறிது காபிதூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து பேஸ்ட் செய்வதால், சருமத்திற்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது. கண்களுக்குக் கீழே உள்ள உணர்திறன் பகுதிகளைத் தவிர்த்து, வட்ட இயக்கத்தில் முகத்தில் பேஸ்ட்டை மெதுவாகத் தேய்த்து, சிறிதுநேரம் கழித்து தண்ணீரில் கழுவவும்.
2.டோனர்
குளிர்காலத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள ஆர்கானிக் ரோஸ் வாட்டர் மிகவும் நல்லது. அதை முகத்தில் தெளித்து துடைக்காமல் அப்படியே விட்டு உலர விடவேண்டும் .இது வறண்ட சருமத்திற்கு சிறந்த டோனராக செயல்படுகிறது.
3.மாய்ஸ்சரைசர்
குளிர்காலத்தில் சரும வறட்சியை தடுக்க வைட்டமின் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவை அனைவரின் தேர்வாக உள்ளது. இதேபோல் தற்போது அனைவராலும் பயன்படுத்தப்படும் ஜோஜோபா எண்ணெய் துளைகளை அடைக்காமல் எடை குறைவாக இருப்பதால் சரும பராமரிப்பிற்கு மிகச்சிறந்த மாய்ஸ்டரைசராக செயல்படுகிறது. குளிர்காலத்திலும் சன் ஸ்கிரீனை தொடர்ந்து பயன்படுத்துவது மிகவும் நல்லது
4.உடலில் வெண்ணெய் தடவவும்
நெய்யில் உள்ள பாஸ்போலிப்பிட்கள் மற்றும் ஸ்டெரால்கள் சூரியன், தூசி மற்றும் மாசு போன்ற கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு இயற்கையான தடையாக உள்ளது. அதிக நன்மைகளைப் பெற வைட்டமின் ஈ எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் இதைப் பயன்படுத்துவதோடு, கூடவே பாக்டீரியா எதிர்ப்பு முகவராகச் செயல்படும் வேப்ப எண்ணெய் சில துளிகள் சேர்க்கவும். உலர்ந்த சருமத்தை ஆற்றுவதற்கு ஆர்கானிக் ஷியா அல்லது கோகோ வெண்ணெயும் பயன்படுத்தலாம்.
5.இரவில் வைட்டமின் சி சீரம்
குளிர்ந்த வால்நட் எண்ணெய் சருமத்தை மென்மையாகவும், ஊட்டமாகவும் வைத்திருப்பதோடு, வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடி, நேர்த்தியான கோடுகளின் தோற்றத்தையும் குறைக்கும் என்பதால் படுக்கைக்குச் செல்வதற்கு முன் இதைப் பயன்படுத்தினால், சருமம் உறுதியாகவும் மென்மையாகவும் இருக்கும். முகம், கழுத்து மற்றும் கண்களைச் சுற்றியும் மசாஜ் செய்யலாம்.
6.வறண்ட சருமத்திற்கு ஓட்ஸ் முகமூடி
ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், இரண்டு டேபிள் ஸ்பூன் பச்சை பால், அரை டீஸ்பூன் நெய், சேர்த்து பேஸ்ட் செய்து, வறண்ட மற்றும் அரிப்பு எரிச்சல் கொண்ட சருமத்தில் சமமாக தடவி, 15-20 நிமிடம் விட்டு, பாதி காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
பொதுவாக வறண்ட சருமமுடையவர்கள் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உண்பதோடு உடலை நீரேற்றமாக வைத்திருப்பது இயற்கையான வழிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.