ஆரோக்கியமான கூந்தலுக்கு இந்த 2 காய்கள் போதும்

Fruits
Fruits
Published on

நமது தலைமுடி பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியான இரண்டு காய்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

ற்போது அனைவருக்கும் உள்ள ஒரே  தலையாய பிரச்னை என்று சொன்னால் அது தலைமுடி பிரச்னைதான். அழகுக்கு அழகு சேர்க்கும் தலைமுடி கொட்டிப் போனாலும் அல்லது நரைத்துப் போனாலும் பொடுகினால் அழகு இழந்து போனாலும் மனம் வேதனை கொள்ளும்.

இந்த தலைமுடி பிரச்னைக்கு நிவாரணம் தேட பலரும் பல வழிகளை பல வகையான மருந்துகளை நாடி செல்கின்றனர். ஆனால் நமது பண்டைய காலத்தில் இருந்தே நம் தமிழ் மருத்துவத்தில் இந்த தலையாய பிரச்னைக்கு தீர்வு தரவே நெல்லிக்காய், கடுக்காய் ஆகிய  2 காய்கள் உள்ளன. நாட்டு மருத்துவத்தில் கூறியபடி இதில் வைத்து செய்யப்படும் மருந்துகள் தலைப் பிரச்சனைகளை எப்படி போக்குகிறது எனறு பார்ப்போம்.

முடி கொட்டும் பிரச்னைக்கு பச்சை நெல்லிக்காய், துளசி இலை, கொட்டை நீக்கிய முற்றிய கடுக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றை தலா 100 கிராம் மிக்ஸில் போட்டு மைய அரைச்சதும், கிடைக்கற விழுதை மெல்லிய துணியில் மூட்டையாக் கட்டித் தொங்க விட்டு அதற்கு கீழாக ஒரு பாத்திரத்தை வைத்து அதிலிருந்து துளித் துளியா சொட்டும்  சாற்றைச் சேமிச்சு, அதோட அளவுக்கு மூன்று மடங்கு தேங்காய் எண்ணெயைக் கலந்து காய்ச்ச வேண்டும். நெல்லிக்காய் தைலம் ரெடி. இந்த எண்ணெயைத் தினமும் தலையில் தடவி வந்தால் முடி கொட்டுவது குறைந்து அடர்த்தியான முடி வளரத் துவங்கும்.

பெரும்பாலோருக்கு பொடுகுகள் வந்து வேதனை தரும். இதிலிருந்து விடுதலை கொடுத்து நிம்மதியைத் தர உதவுவதுதான் இந்த நெல்லிக்காய் பேஸ்ட். வெந்தயப் பொடி, கடுக்காய் பொடி, கடலை மாவு மூன்றையும் கலக்கும் அளவுக்கு தேவையான எலுமிச்சபழச்சாறு மற்றும்  நெல்லிக்காய் சாறு எல்லாவற்றையும் சேர்த்து பேஸ்ட் போல கலவை ஆக்குங்க. இந்த பேஸ்ட்டை தயார் பண்ணினதும், தலைக்கு இதை ‘பேக்’ ஆகப் போட்டு 10 நிமிஷம் கழிச்சு அலசலாம். இதுபோல் 2 அல்லது 3 முறை இந்த பேஸ்டை  யூஸ் செய்யும்போதே பொடுகுத் தொல்லை குறையும்.

இதையும் படியுங்கள்:
தலைமுடி வளர்ச்சிக்கு முக்கியமாக உதவக்கூடிய 5 தாவர வகைகள்!
Fruits

இந்த பேஸ்ட்ல இருக்கற மூலப் பொருட்களான வெந்தயம், கடுக்காய், கடலைமாவு ஆகியவை தலையை சுத்தப்படுத்தி செதிள்களை நீக்கும் சக்தி உடையது. மேலும் நெல்லிக்காய் தலைமுடியின் நுனிப் பிளவை நீக்கி முடியை கருகருன்னு வளர்க்கும் சக்தி கொண்டது. எலுமிச்சைச் சாறுக்கு தலையில அரிப்பு எதுவும் வராம தடுக்கற சக்தி இருக்கு. அரிதான இந்த காம்பினேஷன் பொடுகைத் தடுக்கும்.

நிறையப் பேருக்கு பெரிய பிரச்னையா இருப்பது இளநரைங்கற விஷயம்தான். தலைக்கு டை அடிச்சாலோ, அதுனாலயே பக்கவிளைவுகள் வரலாம். இதுக்கும் கூட நெல்லிக்காய் ஒரு கை கண்ட மருந்தாக உள்ளது எனலாம். மருதாணி இலை, பெரிய நெல்லிக்காய், முழு சீயக்காய், சுத்தம் செய்த புங்கங்கொட்டை எடுத்து தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவைத்து மிக்சியில் இட்டு அரைச்சு விழுதாப் பண்ணிக்குங்க. இந்த விழுதை தலைக்கு ‘பேக்’ ஆகப் போட்டு, 10 நிமிஷம் கழிச்சு அலசவேண்டும். வாரம் ஒரு முறை இந்த விழுதை தயாரித்து முடிக்கு பேக் ஆகப் போட்டால் இளநரைமுடி நாளடைவில் கருமையாகத் துவங்கும்.

இதையும் படியுங்கள்:
“வசந்த ஊஞ்சலிலே அசைந்த பூங்கொடியே” - சோக இசை மனதிற்கு மருந்தாகுமா? 
Fruits

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com