அதிக கொழுப்பு வெளிப்படையாகத் தெரியாது; சருமம் அதை சுட்டிக்காட்டும்; புறக்கணிக்காதீர்!

cholestrol
cholestrol
Published on

அதிக கொழுப்பு (cholestrol), இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். அறிகுறிகள் பொதுவாக வெளிப்படையாகத் தெரியாது, ஆனால் சில நேரங்களில், நம் சருமத்தில் அதிக கொழுப்பின் அறிகுறிகளை நாம் காணலாம்.

அதிக கொழுப்பின் வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லை. இது பொதுவாக அறிகுறிகளை ஏற்படுத்தாது. அதனால்தான் மருத்துவர்கள் பொதுவாக இரத்தப் பரிசோதனையை பரிந்துரைக்கின்றனர். ஆனால் உங்களுக்கு ஒரு துப்பு கொடுக்கக்கூடிய சில அறிகுறிகள் இருக்கலாம். சில நேரங்களில், அதிக கொழுப்பின் அறிகுறிகள் சருமத்தில் தோன்றலாம். அவை உங்கள் கண்களைச் சுற்றி அல்லது காது மடல்களைச் சுற்றித் தெரியக்கூடும். உங்கள் சருமத்தில் இந்த அறிகுறிகளைக் கண்டால் என்ன செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கொலஸ்ட்ரால் என்றால் என்ன?

"இது கொழுப்பு போன்ற ஒரு பொருள், இது மெழுகு போன்றது, மேலும் உடலின் ஒவ்வொரு செல்லிலும் காணப்படுகிறது."

இது உடல் செயல்பாடுகளுக்கு அவசியம், அவற்றில் சில:

ஹார்மோன் உற்பத்தி : ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியில் கொலஸ்ட்ரால் ஒரு முக்கிய அங்கமாகும்.

செல் சவ்வு அமைப்பு : இது செல் சவ்வுகளின் திரவத்தன்மையை பராமரிக்க உதவுகிறது, இதனால் அவை சரியாக செயல்பட அனுமதிக்கிறது.

வைட்டமின் டி தொகுப்பு : சருமம் சூரிய ஒளியில் வெளிப்படும் போது உடல் வைட்டமின் டி தயாரிக்க மெழுகு போன்ற பொருளைப் பயன்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
உடற்பயிற்சியின் போது செய்ய வேண்டியவை... செய்யக்கூடாதவை!
cholestrol

பித்த அமில உருவாக்கம் : குடலில் உள்ள கொழுப்புகளை ஜீரணிக்க உதவும் பித்த அமிலங்களின் உற்பத்திக்கு இந்தப் பொருள் அவசியம்.

அதிக அளவு LDL அல்லது குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன், 'கெட்ட' கொழுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

அதேசமயம், HDL அல்லது அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன், 'நல்ல' கொழுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது இரத்த ஓட்டத்தில் இருந்து அதிகப்படியான கொழுப்பை அகற்றி கல்லீரலுக்கு எடுத்துச் சென்று நீக்க உதவுகிறது.

"எனவே LDL மற்றும் HDL க்கு இடையில் சமநிலையை பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது" என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உங்கள் மொத்த கொழுப்பு ஒரு டெசிலிட்டருக்கு 200 மில்லிகிராம் (mg/dL) அல்லது அதற்கு மேல் இருந்தால், உங்கள் அளவைக் குறைப்பதில் நீங்கள் கவனத்தை செலுத்த வேண்டும் என்று அர்த்தம்.

சருமத்தில் அதிக கொழுப்பின் அறிகுறிகள் என்ன?

இரத்த நாளங்களில் கொழுப்பு படிவுகள் அல்லது கொழுப்பு படிகங்கள் குவிவதால், அதிக கொழுப்பு சருமத்தில் குறிப்பிடத்தக்க ஏற்படுத்தும். சருமத்தில் கொழுப்பின் சில முக்கிய அறிகுறிகளை பார்க்கலாம்:

1. Xanthomas:

மஞ்சள் நிற கொழுப்பு கட்டிகள் அல்லது முடிச்சுகள் சருமத்தின் கீழே தோன்றும். அவை பொதுவாக கண்கள், முழங்கைகள், முழங்கால்கள், மூட்டுகள் ஆகியவற்றைச் சுற்றி காணப்படும். "அதிக அளவு கொழுப்பு இரத்த ஓட்டத்தில் பரவி சருமத்தில் படியும் போது சாந்தோமாக்கள் ஏற்படுகின்றன. மிக அதிக அளவு எல்டிஎல் கொழுப்பு அளவு உள்ளவர்களில் அவை பெரும்பாலும் காணப்படுகின்றன.

2. Xanthelasmas:

கண் இமைகளைச் சுற்றி, குறிப்பாக உள் மூலைகளில், மென்மையான, மஞ்சள் நிறத் தகடுகளை நீங்கள் கவனிக்கலாம். இந்தப் படிவுகள் பொதுவாக சமச்சீராக இருக்கும், மேலும் காலப்போக்கில் படிப்படியாக வளரும். "சாந்தெலஸ்மாஸ் என்பது சருமத்தில் கொழுப்பு குவிவதைக் குறிக்கிறது, மேலும் இது அதிக கொழுப்பின் அறிகுறியாகவும், இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதாகவும் இருக்கலாம்," என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

3. Lichen planus:

இது அரிப்புக்கும், சில சமயங்களில் வலிக்கும் வழிவகுக்கும் ஒரு நிலை. இது அதிக கொழுப்போடு தொடர்புடையதாக இருக்கலாம். லிச்சென் பிளானஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக அளவு மொத்த கொழுப்பு மற்றும் எல்டிஎல் கொழுப்பு இருந்ததாக 2020 ல் நடந்த ஒரு ஆய்வு கூறுகிறது.

இதையும் படியுங்கள்:
எந்த வாசனையையும் உணர முடியவில்லையா? அப்போ அது 'அனோஸ்மியா' பாதிப்புதான்!
cholestrol

4. Senile bow:

கண்ணைச் சுற்றி ஒரு சாம்பல், வெள்ளை அல்லது நீல நிற வளையம் தோன்றும், ஆனால் அது பார்வையைப் பாதிக்காது.. இது கார்னியாவில் கொழுப்பு படிவுகள் காரணமாக ஏற்படுகிறது. வயதானவர்களில் (60 வயதுக்கு மேல்) இது பொதுவானது என்றாலும், இளையவர்களில் இது இருப்பது அதிக கொழுப்பின் அளவைக் குறிக்கலாம் என்று கருதப்படுகிறது.

5. Psoriasis:

இது சரும அழற்சிக்கு வழி வகுக்கும். செதில்களால் மூடப்பட்ட நிறமாற்றம் அடைந்த சருமம் உங்களுக்கு ஏற்படலாம். ஆர்த்ரிடிஸ் & ருமாட்டாலஜியில் வெளியிடப்பட்ட 2014 ஆம் ஆண்டு ஆய்வின் போது, அதிக கொழுப்பால் பாதிக்கபாபட்டவர்கள் குறிப்பாக கொழுப்பைக் குறைக்கும் மருந்துகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பவர்கள் சொரியாசிஸ் உருவாகும் அபாயத்தில் இருந்தனர்.

6. Frank’s sign:

இது காது மடலில் ஒரு மூலைவிட்ட மடிப்பு ஆகும். இது காது திறப்பிலிருந்து கீழ் விளிம்பு வரை நீண்டுள்ளது. "ஃபிராங்கின் அறிகுறிக்கான சரியான காரணம் தெளிவாக இல்லை, ஆனால் தமனிகளில் கொழுப்பு படிவு காரணமாக இரத்த ஓட்டம் குறைவதோடு இது தொடர்புடையதாக இருக்கலாம்."

தோலில் ஏற்படும் இந்த கொழுப்பின் அறிகுறிகள் வெறும் அழகு சார்ந்த கவலைகள் மட்டுமல்ல, அடிப்படை இருதய பிரச்சினைகளின் சாத்தியமான குறிகாட்டிகளாகும். தோலில் இந்த கொலஸ்ட்ரால் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால், பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கவும்:

1. ஃபாஸ்டிங் லிப்பிட் ப்ரொஃபைல் பரிசோதனை:

இந்த இரத்தப் பரிசோதனையானது உடலில் காணப்படும் LDL, HDL, மொத்த கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் எனப்படும் ஒரு வகை கொழுப்பை அளவிடுகிறது. இந்த சோதனை உங்களுக்கு அதிக கொழுப்பு அளவு உள்ளதா மற்றும் மருத்துவ சிகிச்சை தேவையா என்பதைக் கண்டறிய உதவும்.

2. வாழ்க்கை முறை மாற்றங்கள்:

சருமத்தில் ஏற்படும் கொலஸ்ட்ரால் அறிகுறிகளை நிர்வகிக்க, நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள ஆரோக்கியமான உணவைப் பின்பற்ற வேண்டும். "ஓட்ஸ், பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதன் மூலம் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க செய்யலாம். கொட்டைகள், விதைகள் மற்றும் சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் போன்ற உணவுகளில் காணப்படும் ஆரோக்கியமான கொழுப்புகளை உண்ணுங்கள்..." என்பது நிபுணர்களின் கருத்து.

இதையும் படியுங்கள்:
'மடி'க்கணினி - பெயரில் இருக்கட்டும் 'மடி'! மடியில் வேண்டாம் கணினி! கதிர்வீச்சு பேரபாயம்!
cholestrol

3. புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்:

உங்களுக்கு தொடர்ந்து மது அருந்தும் பழக்கம் அல்லது அடிக்கடி சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தால், அந்தப் பழக்கங்களை கைவிட வேண்டும். புகைபிடித்தல் HDL அளவைக் குறைத்து தமனி அடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் அதே வேளையில், அதிகப்படியான மது அருந்துதல் ட்ரைகிளிசரைடு அளவை அதிகரிக்கும்.

அதிக கொழுப்பு பெரும்பாலும் அமைதியாக இருக்கும், ஆனால் சிலருக்கு சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்பட வழிவகுக்கும். சருமத்தில் ஏற்படும் இந்த உயர் கொழுப்பு அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்கக்கூடாது. உடல்நலப் பரிசோதனைகள், சீரான உணவு முறை மற்றுமின்றி கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க உடற்பயிற்சியும் அவசியம். எண்ணெயில் செய்த பண்டங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com