புது டாட்டூ போட்ட உடனேயே சன்ஸ்க்ரீன் தடவலாமா? நீங்கள் கட்டாயம் அறிய வேண்டிய ரகசியங்கள்!

புண் ஆறும் வரை சன்ஸ்க்ரீன் தவிர்க்கப்பட வேண்டும்! சரியான பராமரிப்பு முறைகள் இதோ!
டாட்டூ
டாட்டூ Gemini image
Updated on

சூரிய அல்ட்ரா வயலெட் கதிர்வீச்சிலிருந்து டாட்டூவைக் காக்க சன்ஸ்க்ரீன் மிக அவசியம்‌. டாட்டூ போட்ட பிறகு அது நன்கு ஆறியதும் 30SPF சன்ஸ்க்ரீன் சருமத்தைக் காக்க மிக அவசியம் ஆகிறது. டாட்டு போட்ட உடனேயே சன் ஸ்க்ரீனைப் பயன்படுத்தக் கூடாது. புண் ஆறியதும் பயன்படுத்துவது நல்லது.

டாட்டூவைப் பற்றிய பாதுகாப்பு விஷயத்தில் எப்போதும் அவை மங்காமல் இருப்பது பற்றியே யோசிக்குப் படுகிறது. சிலருக்கு டாட்டூவால் அழற்சி ஏற்பட்டு அரிப்பு ஏற்படலாம்.‌ மேலும் சூரிய வெளிச்சத்தில் டாட்டு படும் போது சரும பாதிப்பு அதிகமாகவே ஏற்படும்.

சூரியனின் அல்ட்ரா வயலெட் கதிர்கள் சருமத்தின் மேல்பகுதியை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சருமத்தினுள்ளேயும் ஊடுருவி டாட்டூவின் நிறத்தையும் மங்கலாக்கும்‌. என்னதான் அழுத்தமான நிறமாக இருந்தாலும் வெளியில் வெயில் பாதிப்பால் நிறம் மங்கும் சூரிய ஒளியில் டாட்டூ படும்போது சிவத்தல், அரிப்பு மேலும் தோல் உரித்து போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்‌. இந்த பாதிப்பிலிருந்து விடுபட நாட்கள் ஆகும்‌‌ அதிக சூரிய வெளிச்சம் டாட்டூக்கள் படும்போது சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

சில சமயங்களில் டாட்டூக்களில் ஏற்படும் பிரச்னைகள் வெளிப்படையாக தெரியாமல் இருக்கும்.‌ அரிப்பு, சிவத்தல் போன்ற நடவடிக்கைகளை தடுக்க முன்னெச்சரிக்கை பாதுகாப்பு தரப்பட வேண்டும்‌. இதை கவனிக்காமல் அலட்சியத்தோடு விட்டு விட்டால் தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உண்டு. ஒரு சிலருக்கு தோல் பிரச்னையான எக்ஸிமா இருக்கும்போது அவர்கள் மிக எச்சரிக்கையுடன் டாட்டூக்கான பொருட்களை ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

சன் ஸ்க்ரீன் எப்போது பயன்படுத்துவது?

புதிதாக உள்ள டாட்டூவில் சிவத்தல், நீர்வடிதல், தோலுரித்தல் போன்ற பிரச்னைகள் ஆறும் வரை இருக்கும்.‌ இதனால் அதில் சன்ஸ்க்ரீன் பயன்படுத்தும்போது பிரச்னை ஏற்படும்.‌ நன்கு ஆறிய டாட்டூவிலேயே சன் ஸ்க்ரீன் பயன்படுத்தப்பட வேண்டும். தோல் நன்கு மூடியிருக்க வேண்டும்.‌

டாட்டூ
டாட்டூ Gemini image

டாட்டூ குணமாகும் நேரம் அது போடப்படும் இடத்தைப் பொருத்ததாக இருக்கிறது. மேலும் அதன் அளவைப் பொறுத்தும் உள்ளது. டாட்டூ போட்டவர்கள் சூரிய வெளிச்சத்தில் அதிகம் நடமாடுவதைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே நீங்கள் வெயிலில் செல்லவேண்டி இருந்தால் துணியால் மூடுவது சிறந்தது. அலர்ஜி உள்ளவர்கள் டாட்டூ பொருட்களை நன்கு ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
முடி உதிர்வை தடுத்து அடர்த்தியாக வளர உதவும் ஸ்கால்ப் பராமரிப்பு சீக்ரெட் ட்ரிக்ஸ்!
டாட்டூ

டாட்டூவை பாதுகாக்க தினந்தேறும் பயன்படுத்துவதற்கு SPF30 சன்ஸ்க்ரீன் சிறந்ததாக நம்பப்படுகிறது. ஒரு சிலர் அதிக நேரம் வெயிலில் இருக்க நேர்ந்தால் SPF50 சன் ஸ்க்ரீனைப் பயன்படுத்துவது நல்லது. பெரும்பாலும் அதிக வாசனை இல்லாத லோஷன் மற்றும் க்ரீம்களை டாட்டூவிற்குப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அரிப்பு ஏற்படும்.

உங்களுக்குச் சிறந்த சன்ஸ்க்ரீன் மிக விலை உயர்ந்ததாக இருக்கத் தேவையில்லை. மேலும் நீங்கள் பயன்படுத்தும் சன்ஸ்க்ரீன் எல்லா இடங்களிலும் சரியாக பரவுகிறதா என்பதை நீங்கள் அறிய வேண்டும்.‌‌

ஒரு சிலருக்கு சன் ஸ்க்ரீன் பயன்படுத்திய பிறகும் கூட அரிப்பு, தடித்தல் போன்ற பிரச்னை ஏற்பட்டால் நல்ல தோல் மருத்துவரிடம் செல்ல வேண்டும்‌. டாட்டூக்களுக்கு நீங்கள் வெளியே செல்வதற்கு 15 நிமிடம் முன் சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும். நன்கு தாராளமாகத் தடவ வேண்டும்‌ இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை தடவுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
முகத்தின் வசீகரத்தை கூட்டும் கன்னங்கள்! அழகை கெடுக்கும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி!
டாட்டூ

மிகுந்த வாசனையுள்ள சன்ஸ்க்ரீன்கள் பிரச்னைகளை ஏற்படுத்தினால் அதை உடனே மாற்ற வேண்டும். டாட்டூக்களில் சிவப்பு நிறம் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். டாட்டூ இடத்தில் தழும்போ அல்லது தடித்தலோ ஏற்பட்டால் உடனே தோல் மருத்துவரை அணுக வேண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில் கெமிக்கல்கள் கலந்த டாட்டூக்களை பாதுகாக்க சன்ஸ்க்ரீனின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வு தேவையாக இருக்கிறது.

புதிய டாட்டூக்கள் ஆறும் காலத்தில் எப்போது, எவ்வாறு சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும் என்ற சரியான காலக்கெடுவை அறிந்து கொள்வதன் மூலம், தோலில் ஏற்படும் தொற்றுகளைத் தவிர்த்து டாட்டூவினை ஆயுள் முழுதும் பளிச்சென்று பராமரிக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com