முகத்தில் கருந்திட்டுகளா? வைட்டமின் C சீரம் செய்யும் மாயாஜாலங்கள்!

skin-brightening-tips
skin-brightening-tips
Updated on

ஹைப்பர் பிக்மென்டேஷன் என்பது நம் சருமத்தின் சில பகுதிகள், அதைச் சுற்றியுள்ள சருமத்தின் நிறத்தை விட கருமையாக மாறும் ஒரு நிலை. நம் உடலில் 'மெலனின்' (Melanin) எனப்படும் நிறமி அதிகளவு சுரக்கும் இடங்களில் கருப்பு, பழுப்பு, சாம்பல் மற்றும் சிவப்பு நிறங்களில் திட்டுக்கள் (Dark Spot) தோன்றுவதுண்டு.

பொதுவாக சூரிய ஒளி, முகப்பரு வடுக்கள் ஹார்மோன் உற்பத்தியில் மாற்றம் (Melasma), மற்றும் சரும அழற்சிகள் ஆகியவை இதற்கான காரணங்கள் ஆகும். இப்பிரச்னைக்கு தீர்வு காண வைட்டமின் C எவ்வாறு உதவுகிறது என்பதை இப்பதிவில் காணலாம்.

சருமப் பரப்பை (Skin Tone) சமநிலைப்படுத்தவும், சருமம் பள பளப்புப் பெறவும் நீண்ட காலமாக மக்கள் வைட்டமின் C யைப் பயன்படுத்தி வருகின்றனர். உங்களுக்குள்ள சருமப் பிரச்னையின் தன்மைக்குத் தகுந்தாற்போல் சிகிச்சை முறையும் வேறுபடும். முகத்தில் பருக்கள் தோன்றி மறைந்த பின், அந்த இடத்தில் ஏற்பட்ட வீக்கத்தின் காரணமாக நிற மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. இதை போஸ்ட் இன்ஃபிளமேட்டரி ஹைப்பர் பிக்மென்டேஷன் (PIH) என்பர்.

இது பருக்கள் வந்து மறைந்த பின் அல்லது சிறு காயம் உண்டாகி குணமான பின் தோன்றக்கூடிய நிற மாற்றம் ஆகும். பெண்களின் கர்ப்பகாலத்தில் அல்லது அவ்வப்போது ஹார்மோன் சுரப்புகளில் உண்டாகும் ஏற்றத்தாழ்வுகளின் காரணமாகத் தோன்றும் நிற மாற்றம் மெலஸ்மா எனப்படும். வயதாகிவிட்ட காரணத்தினாலும், சூரியனின் அல்ட்ரா வயலெட் கதிர்கள் அடிக்கடி உடம்பில் படுவதாலும் கூட சருமத்தில் கருப்பு, சிவப்பு நிற புள்ளிகள் அல்லது திட்டுக்கள் (patches) தோன்றுவதுண்டு.

வைட்டமின் C மூலம் இப்பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது சுலபம். வைட்டமின் C, மெலனின் சுரப்பிற்கு காரணமாகும் டைரோசினஸ் (Tyrosinase) என்னும் என்சைம் அளவை கட்டுக்குள் வைத்து சமநிலைப்படுத்த உதவுகிறது. சரும செல்கள், தீங்கிழைக்கும் ஃபிரீ ரேடிக்கல்களின் தாக்கத்தால் சிதைவுறும்போது தோல் கருமையாதல் அதிகரிக்கிறது.

டாப்பிகல் வைட்டமின் C, குறிப்பாக எல்-அஸ்கார்பிக் ஆசிட் (L-ascorbic Acid) உபயோகிப்பது, சரும செல்களின் குணாதிசயங்களை மாற்றியமைத்து (மேம்படுத்தி) சருமத்தின் நிறத்தை பள பளப்படையச் செய்கிறது. பன்னிரண்டு வாரங்கள் இதைத் தொடர்ந்து உபயோகிக்கும்போது நாற்பது சதவிகிதம் கருமை நிறம் குறைவதாக கூறப்படுகிறது. ஒட்டு மொத்த சரும நலனையும் பாதுகாக்கும் வகையில் டாப்பிகல் வைட்டமின் C பல்வேறு வழிகளில் செயலாற்றி நற்பலன் பெற உதவிபுரிகிறது. அதாவது, அதிகப்படியான மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்தியும், சரும செல்களின் முழுமையான ஆரோக்கியத்தைப் பாதுகாத்தும், கொலாஜன் சிந்தசிஸை ஊக்குவித்தும் மாயாஜாலம் புரிகிறது.

அனைத்து வகை வைட்டமின் C சீரம்களும் ஒரே மாதிரியான விதிமுறைகளைப் பின்பற்றி தயாரிக்கப்படுவதில்லை. எனவே, தனி ஒருவரின் சரும வகை மற்றும் பிரச்னையின் தன்மை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அதற்கு பொருத்தமான சீரம் வகையை தேர்ந்தெடுத்து உபயோகிப்பது நலம்.

ஹைப்பர் பிக்மென்டேஷன் பிரச்னைகளுக்கு, செறிவின் அடர்த்தி 10-20% இருப்பதை உறுதிப்படுத்திய பின், வாங்கி உபயோகிக்கலாம். உங்கள் சருமம் சென்சிடிவ் டைப்பாக இருக்குமாயின், மக்னீசியம் அஸ்கார்பில் பாஸ்பேட்டை பயன்படுத்தலாம். இது மிருதுத்தன்மை கொண்டிருப்பதால், அதிக கால அவகாசம் எடுத்துக் கொண்டு சிறப்பான முறையில் குணமாக்க உதவும்.

உங்கள் சருமத்திலுள்ள கருந்திட்டு, பருக்களுடன் தொடர்புடையதாயின், சோடியம் அஸ்கார்பில் பாஸ்பேட்டை உபயோகிக்கலாம். இது ஆன்டி மைக்ரோபியல் குணமும் கொண்டிருப்பதால் பிரச்னை முழுவதுமாக தீர்க்கப்பட்டுவிடும். எந்தவித எரிச்சலுமின்றி, சகிப்புத்தன்மையுடன், சருமம் பழைய மினு மினுப்புப்பெற வேண்டுமென நினைப்பவர்கள், தொடர்ந்து நிதானமாக வைட்டமின் C யை வெளியேற்றி, ஹைப்பர் பிக்மென்டேஷனை முற்றிலுமாக குணப்படுத்தக் கூடிய அஸ்கார்பில் குளுகோசைட்டை (Ascorbyl glucoside) தேர்ந்தெடுக்கலாம்.

கருந்திட்டுக்களை குணப்படுத்த உதவும் வைட்டமின் C யை முறையாக பயன்படுத்துவதும் அவசியம். காலை நேரங்களில் இந்த சிகிச்சையை மேற்கொள்வது நலம்.

இதையும் படியுங்கள்:
அடர்த்தியான கூந்தல் இனி கனவல்ல... இதோ உங்களுக்கான 'ஹேர் கேர்' டிப்ஸ்!
skin-brightening-tips

டாப்பிகல் வைட்டமின் C உபயோகிக்க ஆரம்பித்து, குறுகிய காலத்திலேயே முழு பலனை எதிர்பார்க்க முடியாது. இடைவெளியின்றி தொடர்ந்து பயன்படுத்துவது முக்கியம் (Consistency is key). பொறுமை அவசியம். 1-2 வாரங்களில் சருமம் கொஞ்சம்

பிரகாசமாக மாற ஆரம்பிக்கும். 3-4 வாரங்களில் கரும்புள்ளிகள் சற்று மங்க ஆரம்பிக்கும். Overall skin tone சீராகும். 6-8 வாரங்களில் ஹைப்பர் பிக்மென்டேஷன் கணிசமாக குறையும். டார்க் ஸ்பாட் படிப்படியாக நிறம் மாறி வருவதை காணமுடியும். மூன்று மாதங்களில் நிலையான மாற்றம் உண்டாகும். புதிய பிக்மென்டேஷன் உருவாகும் வாய்ப்பு குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com