
ஆறு நெல்லிக்காய்களை ஐந்தாறு இடத்தில் ஊசியால் துளையிடவும். அத்தனை காய்களும் மூழ்கி ஊறும் அளவிற்கு எலுமிச்சை சாறு பிழிந்து ஊற்றி ஒரு நாள் முழுக்க ஊறவிடவும். பிறகு நெல்லிக்காய்களை எடுத்துத் துணியால் துடைத்துக் கொள்ளவும். இரண்டு கப் தண்ணீரில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கம்பிப் பாகுபதத்துக்குக் காய்ச்சவும். பாகு நுரைத்து வந்ததும் சூடாக இருக்கும்போதே நெல்லிக்காய்களின் மீது ஊற்றி வெயிலில் காயவைத்துப் பயன்படுத்தவும். இந்த முரப்பா தங்கத்திற்குச் சமம் என்பதால் தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர தேகம் பொன்னிறமாகும்.
வில்வ இலைகளை நிழலில் காயவைத்து அதைப்பொடி செய்து சலித்து வைத்துக்கொள்ளவும். வில்வ இலைத் தூளுடன் சில சொட்டுக்கள் தேன் கலந்து பூசி வர மாசு வில்லாத சருமம் கிடை க்கும்.
வெள்ளரிக்காயை அரிந்து மிக்சியில் கூழாக அரைத்து ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கவும். தினமும் குளிப்பதற்கு முன்னால் இதை உடல் முழுவதும் தடவிக் குளிக்க உடலுக்கு ஏ.சி போட்டது போன்று இருக்கும். சருமம் மிளிரும்.
வெந்தயக்சாறோடு, சமஅளவு ஆமணக்கு எண்ணை நல்லெண்ணெய் கலந்து மேனியில் பூசிக்குளிக்க நாற்பதே நாளில் சருமம் மின்னும். இதை பித்த வெடிப்புக்குத் தடவ அவை மறைந்து மிருதுவாகும்.
பாதாம் பிஸ்தா இரண்டையும் ஊறவைத்து அத்துடன் வெள்ளரி விதை ஓட்ஸ் மாவு, ந்தனம், படிகாரம் போன்றவற்றைக் கலந்து பூசிவர முகம் ப்ளீச் செய்தது போன்று இருக்கும்.
முகத்தில் பௌடர் பூசுவதற்கு முன் முகத்தை நன்கு துடைத்து சிறிதளவு பன்னீர் தடவி துடைத்துவிட்டு பிறகு பௌடர் பூசுங்கள். இதனால் முகம் வசீகரமாக இருக்கும். புத்துணர்வும் கிடைக்கும்.
திராட்சை ஜுஸ் மூல்தானி மிட்டி கலந்து முகத்திற்கு பேக்காகப் போட எண்ணைப் பசை உள்ளவர்களுக்கு நல்லது.
வறண்ட முகம் பளபளக்க இயற்கை வழிமுறைகள்!
தக்காளிச் சாற்றுடன் தயிர் சேர்த்து முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவ முகம் பொலிவு பெறும்.
ரோஜா இதழ்களுடன் பால் அல்லது ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அரைத்து, அத்துடன் சிறிது கடலைமாவு மற்றும் பன்னீர் சேர்த்து முகம் கழுத்து பகுதிகளில் தடவி கழுவ முகம் புத்துணர்ச்சி பெறும்.
வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவிக் கழுவ முகம் பளிச்சென்று ஆகும்.
வாழைப்பழம், தேன், பன்னீர் மூன்றையும் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்துத் கழுவ முகம் வறண்டு போகாமல் இருக்கும்.
பாசிப் பருப்புடன் ஆரஞ்சு தோல் மற்றும் பால் சமஅளவு எடுத்து அரைத்து முகத்தில் தடவிக் கழுவ வறண்ட முகம் பொலிவு பெறும்.
பத்து ரோஜாப்பூ க்களை தண்ணீரில் போட்டு 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு வடிகட்டி இந்த சாற்றை முகத்தில் தடவி கழுவ முகம் பளபளப்பாகவும்.
முட்டைகோஸ் சாற்றை முகத்தில் தடவிவர வறண்ட முகம் பொலிவு பெறும்.
தயிருடன் கடலை மாவை கலந்து முகத்தில் பூசி கழுவ வறண்ட முகம் பளபளக்கும்.
நன்றாக பழுத்த வாழைப்பழத்தில் ஆலிவ் ஆயில் விட்டுப் பிசைந்து முகத்தில் தடவி ஒரு மணிநேரம் கழித்து கழுவ முகம் பளபளக்கும்.
கசகசாவை எருமைக் தயிரில் அரைத்து இரவு படுக்க போகுமுன் தடவி கழுவ முகம் பொலிவடையும்.
ஒரு டேபிள் ஸ்பூன் அன்னாசிச்சாறுடன் கடலைமாவு கலந்து முகத்தில் பூசி 5 நிமிடங்கள் கழித்து கழுவ முகம் பளிங்குபோல் ஆகும்.
இரண்டு டேபிள் ஸ்பூன் அன்னாசி சாற்றுடன் தேங்காய்பால் சேர்த்து முகத்தில் பூசி கழுவ முகம் ஜொலிக்கும்.