மாதுளையின் தோலை இப்படிப் பயன்படுத்தினால், முகம் ஆகும் பளிச் பளிச்!

Pomegranate peel
Pomegranate peel
Published on

இயற்கையான பொருட்களைக் கொண்டு சருமத்தை பராமரிப்பது சிறந்தது. அந்த வகையில் மாதுளை பழத்தின் தோல் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இது பல்வேறு மருத்துவ குணங்களையும், அழகு சார்ந்த நன்மைகளையும் கொண்டுள்ளது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. குறிப்பாக, மாதுளை தோலை பயன்படுத்தி முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் மாற்றலாம். மாதுளை தோலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. 

மாதுளை தோலின் நன்மைகள்:

மாதுளை தோலில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை சரும செல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகின்றன. இதனால் சருமம் இளமையாக காட்சியளிக்கிறது. மேலும் இதில் வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. கொலாஜன் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது.

மாதுளை தோல் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் சருமத்தில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்களை தடுக்க உதவுகின்றன. முகப்பரு மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகளை குறைக்க உதவுகிறது மாதுளை தோல் உதவுகிறது. மேலும், சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்தை தாமதப்படுத்த உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
குளிர்காலத்தில் காய்ந்த உதடுகளை அடிக்கடி நாவால் ஈரப்படுத்தக் கூடாது. ஏன் தெரியுமா?
Pomegranate peel

மாதுளைத் தோலை பயன்படுத்தும் முறைகள்:

மாதுளை தோலை வெயிலில் நன்கு காய வைக்கவும். காய்ந்த தோலை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும். இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.

1. மாதுளை தோல் ஃபேஸ் பேக்: ஒரு டேபிள் ஸ்பூன் மாதுளை தோல் பொடியை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது தயிர் அல்லது தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

2. மாதுளை தோல் ஸ்க்ரப்: ஒரு டேபிள் ஸ்பூன் மாதுளை தோல் பொடியை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் மென்மையாக தேய்த்து ஸ்க்ரப் செய்யவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

3. மாதுளை தோல் டோனர்: ஒரு கப் தண்ணீரில் சிறிது மாதுளை தோலை போட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் ஆறிய பிறகு அதை வடிகட்டி ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். இந்த டோனரை தினமும் முகத்தில் ஸ்ப்ரே செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் சுவையில் வாழைத்தண்டு சூப் - மாதுளை பொரியல் ரெசிபிஸ்!
Pomegranate peel

மாதுளை தோலை பயன்படுத்தும் முன், உங்கள் சருமம் அதற்கு ஒத்துக்கொள்ளுமா என்பதை பரிசோதித்துக்கொள்ளவும். கண்களில் படாமல் பார்த்துக்கொள்ளவும். சருமத்தில் ஏதேனும் எரிச்சல் ஏற்பட்டால், உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்திவிடவும். மேலே, கூறப்பட்ட முறைகளை வாரத்திற்கு 2-3 முறை செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com