
சருமத்திற்கு நாள் முழுவதும் புதுப்பொலிவு கிடைக்க வேண்டுமா? ரோஜா இதழ்களை பயன்படுத்தி சில அழகு குறிப்புகள்!
பன்னீர் ரோஜா இதழ்களை சுத்தமாக கழுவி அதனை மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்த்து மை போல் அரைத்து, இந்த பேஸ்ட்டை ஒரு பவுலில் எடுத்து ஒரு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின்பு 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால், முகம் நல்ல பொலிவு பெறும். வாரம் இருமுறை இதனை செய்யலாம்.
ரோஜா இதழ்களை நைசாக அரைத்து ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து அதனுடன் கலந்து இந்த பேக்கை முகத்தில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்துவிடும். இதனை தினமும் செய்யலாம்.
பன்னீர் ரோஜாவை அரைத்து எடுத்து வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து, இந்த கலவையை உங்கள் உதட்டில் நன்றாக அப்ளை செய்தால் உதடு கருமை நிறம் மாறி உதடுகள் பளபளப்பாகும்.
ஒரு பவுலில் மைய அரைத்த ரோஜா இதழ்களை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜூஸை சேர்த்து, இக்கலவையை சருமத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்களுக்கு பின்பு குளிர்ந்த நீரால் கழுவினால் சருமம் பளபளப்பாக காணப்படும். இதனை தினமும் செய்து வர சூரியக்கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் நீங்கும்.
ரோஜா பயன்கள்
ரோஜா இதழ்கள் பல இயற்கையான தயாரிக்கும் கிரீம்களில் கண்டிப்பாக இருக்கும். அதற்கு காரணம் இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீக்கி அழகாகவும் மற்றும் மிருதுவாகவும் மாட்டிக்கவும் தர்மத்தில் உள்ள ஈரப்பதம் குறையாமல் மற்றும் வறட்சியான சருமம் ஆக இருந்தால் இது ஈரப்பதத்தை மாற்றி தரும்.
இந்த ரோஜா இதழ்களை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு, சீதபேதி போன்ற பிரச்னைகளையும் சரி செய்யும். உடலுக்கு குளிர்ச்சி தன்மையை அதிகரிக்கும்.
ரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சலாக இருக்கும் நேரம், சில துளிகள் விட்டால் எரிச்சல் மாறும் .கண் நோய் சம்பந்தமான மருந்துகள் தயாரிக்க பன்னீர் பயன்படுகிறது.
அதிக வியர்வை வந்தால் உடலில் துர்நாற்றம் ஏற்படும். இவர்கள் குளிக்கும் நேரில் பன்னீரை கலந்து குளித்தால் துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.
ரோஜா இதழ்களை நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை டோனராக பயன்படுத்தலாம். இது சருமத்துளைகளை சுருக்கி சருமத்தை புத்துணர்ச்சியாக மாற்றும்.
ரோஜா இதழ்களை அரைத்து சர்க்கரை மற்றும் தேன் கலந்து சருமத்தை ஸ்கிரப் செய்தால் இது இறந்த செல்களை நீக்கி சருமத்தை பளபளக்க வைக்கும்.
ரோஜா இதழ்களை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து அந்த எண்ணெயை கூந்தலில் தடவி வந்தால் கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.
ரோஜா இதழ்களை நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை கூந்தல் கண்டிஷனராக பயன்படுத்தினால் கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்.