
புடவையை அழகாகவும், தனித்துவமாகவும் காட்டுவதற்கு அதற்கான பிளவுஸில் அழகாக எம்பிராய்டரி செய்யலாம். இருப்பினும் பிளவுஸ் எம்பிராய்டரி செய்யும்போது அதை கசகச வென்று பிளவுஸ் முழுக்க செய்யாமல், சிம்பிளாக அழகை மெருகூட்டும்படி எப்படி செய்வதை என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.
பிளவுஸ்ஸில் உள்ள ஸ்லீவ்ஸில் Vertical ஆக மட்டும் இந்த எம்பிராய்டரியை செய்யலாம். இது எவ்வளவு Simple and elongated ஆக இருக்கிறதோ அந்த அளவிற்கு Rich லுக்கை கொடுக்கும். இந்த பிளவுஸை அணியும்போது உங்கள் கை Thin and fit ஆகத் தெரியும்.
வலதுகைப்பகுதி மேலே மட்டும் போடப்படும் எம்பிராய்டரி டிசைன். இதை Detachable ஆக செய்து வாங்கிக்கொண்டாலும் அழகாக இருக்கும். எந்த புடவைக்கு வேண்டுமானாலும் மேட்ச் செய்து கொள்ளலாம். பிளைன் பிளவுஸாக இருந்தாலும் இந்த ஒரு Detail போதும் உங்கள் லுக்கை ஸ்டைலிஷ்ஷாக மாற்றுவதற்கு.
Closed neck உள்ள பிளவுஸிற்கு இந்த டிசைனை டிரை பண்ணலாம். குட்டி குட்டி எம்பிராய்டரி டிசைன்கள் பிளவுஸ் முழுவதும் ஆங்காங்கே இருப்பது அழகாகவும், தனித்துவமாகவும் இருக்கும்.
இந்த V neck டிசைன் பிளவுஸில் சின்னதாக இருந்தாலும் சரி அல்லது தனித்துவமாக எம்பிராய்டரி டிசைன் செய்தாலும் சரி அழகான ரிச் லுக்கை கொடுக்கும். முழு பிளவுஸூம் பிளைன்னாக விட்டு V neck டிசைன்னில் மட்டும் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்வது தனித்துவமாக தெரியும்.
நல்ல Closed neck டிசைன் உள்ள பிளவுஸில் கழுத்தை சுற்றி Jewel Workல் எம்பிராய்டரி டிசைன் செய்யலாம். இந்த பிளவுஸை அணியும்போது கழுத்திற்கு நகை போட வேண்டிய அவசியமே இருக்காது. இந்த ஒரு டிசைன் போதும் பிளைன்னான பிளவுஸிற்கு ராயல் லுக் கொடுக்கும்.