அலுவலகம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற 'டிரெண்டி' காட்டன் பிளவுஸ் டிசைன்கள்!

saree-blouse-designs
saree-blouse-designs
Updated on

கோடைகாலம் ஆரம்பித்ததில் இருந்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வேலைக்குச் செல்பவர்களும் வீட்டிலிருக்கும் பெண்களும் காட்டன் புடவை மற்றும் காட்டன் பிளவுசுகளை அணிகின்றனர். இது பார்ப்பவர்களுக்கு சாதாரணமாக தெரியும் என்ற எண்ணம் பரவலாக உண்டு. அந்த வகையில் தினசரி மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு காட்டன் புடவைகளுக்கு ஏற்ற தோற்றத்தில் மிடுக்குடன் காட்டும் பிளவுஸ் டிசைன்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

V நெக் ஸ்டிரைப் பிரிண்டட் பிளவுஸ்

அலுவலகத்திற்கு செல்பவர்களுக்கு ப்ரொபஷனல் தோற்றத்தை இந்த v நெக் பிளவுஸ்கள் வழங்குகின்றன. கோடுகள் இடப்பட்ட V நெக் பிளவுஸ் டிசைன் அணிபவருடைய கழுத்து பகுதியை நீளமாகக் காட்ட உதவுவதோடு நேர்த்தியாக காட்சி தரும்.

பிரிண்ட் காலர் பட்டன் பிளவுஸ்

காட்டன் புடவைகளுக்கு கம்பீரமாக மற்றும் மாடர்ன் லுக்கை பிரிண்ட் காலர் பட்டன் ப்ளவுஸ்கள் வழங்குகின்றன. சிறிய பிரின்டுடன் கூடிய காலர் வைத்த பிளவுஸில் பட்டன்கள் வரும்போது மிகவும் ஸ்டைலாகவும், கம்பீரமாகவும் காட்சி தருகிறது.

saree-blouse-designs
போட் நெக் காட்டன் பிளவுஸ் - ஃப்ளோரல் பிரிண்டட் காட்டன் பிளவுஸ்

போட் நெக் காட்டன் பிளவுஸ்

எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் 'போட் நெக் காட்டன் பிளவுஸ் 'எளிய காட்டன் புடவைகளுக்கு கூட அழகான மற்றும் முழுமையான தோற்றத்தை வழங்குவதில் முன்னணியில் உள்ளன. இந்த பிளவுஸ்கள் தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் சௌகரியமானதாக கருதப்படுகிறது.

ஃப்ளோரல் பிரிண்டட் காட்டன் பிளவுஸ்

மென்மையான காட்டனில் வண்ணமயமாக பூக்கள் டிசைன் போட்ட 'ஃப்ளோரல் பிரிண்டட் காட்டன் பிளவுஸ்' வெயில் காலத்திற்கு மிகச்சிறந்த தேர்வாக உள்ளது. மேலும் பெண்களுக்கு பூக்கள் போட்ட டிசைன் மிகவும் பிடிக்கும் என்பதால் அதிகம் விரும்பப்படுவதாகவும் உள்ளது.

லைன் பஃப் ஸ்லீவ் காட்டன் பிளவுஸ்

ரெட்ரோ மற்றும் மாடர்ன் ஸ்டைலில் இருக்கும் பிளவுஸ் டிசைனாக லைன் பஃப் ஸ்லீவ் காட்டன் பிளவுஸ் உள்ளது. அலுவலகம் செல்லும் பெண்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் இந்த டிசைன் பிளவுஸில் இருக்கும் பஃப் மற்றும் கோடுகள் மிகவும் அழகுற காட்சி தருகின்றன.

பிளவர் பிரிண்ட் காட்டன் பிளவுஸ்

எளிமையான புடவையையும் எடுப்பாக காட்டுவதாக இந்த ஃப்ளவர் பிரிண்ட் காட்டன் பிளவுஸ் அமைந்துள்ளன. பெரிய பூக்கள் கொண்ட பிரிண்ட் டிசைன் உள்ள இந்த வகை பிளவுஸ்கள் தினசரி பயன்பாட்டிற்கும் வெளியே செல்பவர்களுக்கும் ஏற்ற மிகச்சிறந்த தீர்வாக உள்ளது.

மினிமல் பூட்டி பிரிண்ட் காட்டன் பிளவுஸ்

சிறிய மற்றும் கண்ணியமான தோற்றத்தை விரும்புபவர்களுக்கு சிறிய பூட்டி டிசைன் கொண்ட இந்த பிளவுஸ் அதிக ஆடம்பரம் இல்லாமல் காட்சி தருகிறது. இதில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள் தனி அழகைச் சேர்ப்பதாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
வேர்வை வந்தாலும் மேக்கப் கலையாது: நிபுணர்கள் கூறும் கோடைக்கால அழகு குறிப்புகள்!
saree-blouse-designs

ஸ்டாண்ட் காலர் காட்டன் பிளவுஸ்

தன்னம்பிக்கையான தோற்றத்திற்கு ஸ்டாண்ட் காலர் காட்டன் பிளவுஸ்கள் சிறந்தவையாக உள்ளன. முறையான நிகழ்வுகளுக்கும் அலுவலக மீட்டிங்கிற்கும் இந்த வகை டிசைன் பிளவுஸ்கள் மிகச் சிறந்த தேர்வாக உள்ளன.

'ஆள் பாதி. ஆடை பாதி' என்ற பழமொழிக்கேற்ப தோற்றத்தில் சாதாரணமாக இருப்பவர்களையும் மேற்கூறிய டிசைன் பிளவுஸ்கள் அணிபவர்களுக்கு கம்பீரமாகவும்,அழகாகவும் எடுத்துக்காட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com