புடவை ஷேப்வேர் (Shape wear) வாங்கும்போது கவனிக்க வேண்டிய 7 முக்கியமான விஷயங்கள்!

shapewear for women
Shapewear for women
ஆர்.ஐஸ்வர்யா

I am a Fashion Technologist graduated from National Institute of Fashion Technology, Gandhinagar, Gujarat. I am interested in creating fashion related articles, Psychology and lifestyle articles. I am grateful to CEO of Kalki group, and it’s publishers. I am thankful to the readers for reading my contributions.

Updated on

பெண்களின் பாரம்பரிய உடைகளில் புடவைக்கு என்றுமே தனி இடம் உண்டு. புடவை அணிவது ஒரு கலை என்றால், அதற்குப் பொருத்தமான உள் ஆடையைத் தேர்ந்தெடுப்பது அந்த கலையின் அடிப்படை. முன்பு புடவைக்கு அடியில் 'பெட்டிகோட்' எனப்படும் உள்பாவாடை மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இப்போது அந்த இடத்தை ஷேப்வேர்' (Shape wear) பிடித்துள்ளது. உடல் வாகை கச்சிதமாகக் காட்ட விரும்புபவர்களுக்கு ஷேப்வேர் ஒரு வரப்பிரசாதம். ஆனால், அதில் நாம் செய்யும் சில தவறுகள் புடவை அழகையே கெடுத்துவிடுகின்றன.

உள் பாவாடையின் வசதியும், அசெளகரியமும்:

கனமான பட்டுப் புடவைகளுக்கு இன்றும் உள்பாவாடைகளே சிறந்த தேர்வாக இருக்கின்றன. பருத்தி துணியால் ஆன பாவாடைகள் காற்றோட்டமானவை. நமது சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவை. ஆனால், இவை இடுப்புப் பகுதியில் அதிக பருமனாகக் காட்டும். குறிப்பாக மெல்லிய ஷிஃபான் அல்லது நெட் புடவைகளுக்கு இது ஒருவித தடிமனான தோற்றத்தைத் தரும்.

ஷேப்வேர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:

1'High-waist' ஷேப்வேர்:

பலர் ஷேப்வேர் வாங்கும்போது இடுப்புப் பகுதியை மட்டும் கவனிப்பார்கள். ஆனால், ஒரு நல்ல ஷேப்வேர் என்பது வயிற்றுப் பகுதியையும், முதுகின் கீழ் பகுதியையும் சீராகக் காட்ட வேண்டும். சில வகை ஷேப்வேர்கள் வயிற்றை மட்டும் அமுக்கிவிட்டு, அதன் மேல் பகுதியில் சதையை துருத்திக் காட்டச் செய்யும். இது புடவை கட்டும்போது அசிங்கமாகத் தெரியும். எனவே, 'High-waist' ஷேப்வேர்களைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது.

2. தவறான அளவு :

உடல் ஒல்லியாகத் தெரியவேண்டும் என்பதற்காக, மிக இறுக்கமான அளவைத் தேர்ந்தெடுக்காதீர்கள். இது ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். அதேபோல், மெல்லிய புடவை கட்டும்போது உள்ளே இருக்கும் ஆடையின் தையல் கோடுகள் வெளியே தெரியாமல் இருக்க 'ஸீம்லெஸ்' (Seamless) ரகங்களைத் தேர்வு செய்யுங்கள்.

இதையும் படியுங்கள்:
குளிர்கால சரும வறட்சிக்கு 'டாடா' சொல்லுங்க: வீட்டிலேயே இயற்கையான மாய்ச்சுரைஸர்!
shapewear for women

3. கழிவறைப் பயன்பாடு:

இது பலரும் வெளியில் பேசத் தயங்கும் விஷயம். பாரம்பரிய பாவாடையில் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், முழு நீள ஷேப்வேர் அணிந்து கொண்டு பொது இடங்களுக்குச் செல்லும்போது சிரமம் ஏற்படலாம். நவீன ஷேப்வேர்களில், அடிப்பகுதியில் 'கட்-அவுட்' அல்லது 'ஜிப்' போன்ற வசதிகள் கொடுக்கப் படுகின்றன. ஷேப்வேர் வாங்கும்போதே இந்தப் பயனுள்ள வசதி இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

4. ஃபிஷ் கட்' (Fish Cut) vs 'ஸ்ட்ரெய்ட் கட்':

நடக்கும்போது மயில் போலத் தெரியவேண்டுமா? அப்படியானால் 'ஃபிஷ் கட்' ஷேப்வேர் சிறந்தது. இது முழங்கால் வரை இறுக்கமாகவும், கீழே விரிந்தும் இருக்கும். இது நடப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும். நேராக இருக்கும் ஷேப்வேர்களில் சில சமயம் இயல்பாக அடி எடுத்து வைப்பது கடினமாக இருக்கும்.

5. ஹீல்ஸ் மற்றும் உயரம்:

ஷேப்வேர் கச்சிதமான நீளத்தில் இருக்க வேண்டும். நீங்கள் ஹை-ஹீல்ஸ் அணியப் போகிறீர்கள் என்றால், அதற்கு ஏற்ற நீளம் கொண்ட ஷேப்வேரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில் கணுக்கால் தெரிந்து புடவையின் அழகைக் கெடுத்துவிடும்.

6. ஆரோக்கியமும் பாதுகாப்பும்:

தென்னிந்திய வெயிலுக்கு நைலான் அல்லது பாலியஸ்டர் கலந்த ஷேப்வேர்களை நீண்ட நேரம் அணிந்தால் சரும அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உட்புறம் வியர்வையை உறிஞ்சும் வகையில் காட்டன் லைனிங் கொண்ட அல்லது மைக்ரோ-ஃபைபர் துணியால் ஆன ஷேப்வேர்களைப் பயன்படுத்துங்கள்.

இதையும் படியுங்கள்:
ஒரு வெள்ளை முடியைப் பிடுங்கினால் பத்து வெள்ளை முடிகள் வளருமா?
shapewear for women

7. நிறத் தேர்வு:

புடவையின் நிறத்திற்குப் பொருத்தமான ஷேப்வேர் அவசியம். குறிப்பாக டிரான்ஸ்பரன்ட் புடவைகளுக்கு, சரும நிறத்திலான ஷேப்வேர்களைப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.

வீட்டில் இருக்கும்போது அல்லது சாதாரண வேலைகளுக்குச் செல்லும்போது காற்றோட்டமான காட்டன் பாவாடைகளையும், விசேஷங்கள் மற்றும் பார்ட்டிகளுக்குச் செல்லும்போது கச்சிதமான ஷேப்வேர்களையும் பயன்படுத்துவதே ஆரோக்கியத்திற்கும் ஃபேஷனுக்கும் இடையிலான சரியான சமநிலை.

logo
Kalki Online
kalkionline.com