ஒரு ஷீட் மாஸ்க் உங்கள் முகத்தை எவ்வளவு மாற்றும் தெரியுமா? பலருக்கும் தெரியாத ஆச்சரியமான உண்மை!

To prevent skin dryness
What is a sheet mask?
Published on

யாருக்குத்தான் அழகாக இருக்கவேண்டும் என்ற ஆசை இல்லை? சொல்லுங்கள் பார்க்கலாம்! அழகு நிலையங்களுக்குச் சென்று அதிக பணம் கொடுத்து அழகை பராமரிப்பதற்கு பதிலாக பல பிரபலங்கள் பயன்படுத்தி வரும் ஷீட் மாஸ்கை போடலாம். இது ஃபேஸ் மாஸ்க், ஃபேஸ் பேக் போன்றவற்றைவிட மிகவும் எளிமையான செயல்முறையைக் கொண்டது.

ஷீட் மாஸ்க் என்பது:

ஷீட் மாஸ்க் என்பது சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உட்பொருட்களை கொண்ட சீரம் அல்லது ஜெல் தடவப்பட்ட ஒரு ஈரப்பசைமிக்க பேப்பராகும். இவை நன்மை பயக்கும் பொருட்களால் நிறைவுற்ற காகிதம் அல்லது துணி முகமூடிகள் ஆகும். இவை முகத்தில் வைக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பேப்பர் அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கின்றன.

ஷீட் மாஸ்க்கில் பல வெரைட்டிகள் உள்ளன. நம் சரும வகைக்கு ஏற்ற ஷீட் மாஸ்குகள் வாங்கி பயன்படுத்தலாம்.

இதன் முக்கிய அம்சங்கள்:

கே-பியூட்டியின் தாக்கம்: 

தாள் முகமூடிகளை உள்ளடக்கிய பல- படி K- பியூட்டி தோல் பராமரிப்பு வழக்கம் உலக அளவில் பிரபலமாகிவிட்டது. பல இந்திய பிராண்டுகள் அவற்றின் சொந்த பதிப்புகளை அறிமுகப் படுத்துகின்றன.

உடனடி பளபளப்பு தோற்றம்:

தாள் முகமூடிகள் சருமத்திற்கு அதிக நீரேற்றத்தை அளிப்பதற்கும், புத்துணர்ச்சி, பொலிவு மற்றும் பளபளப்பான தோற்றத்தை அளிப்பதற்கும் பாராட்டப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு முதுகு வலி இருக்கிறதா? நீங்கள் வாங்கும் ஷூதான் காரணம்!
To prevent skin dryness

நன்மை பயக்கும் கூறுகள்:

பிரபலமான தாள் முகமூடி பொருட்களில் உறுதியாக்க கொலாஜன் மற்றும் பல்வேறு சருமப் பிரச்னைகளுக்கு ஹைலூரோனிக் அமிலம், நியாசினமைடு மற்றும் 24K தங்கம் போன்ற பிற நன்மை பயக்கும் கூறுகள் உள்ளன.

சரும வறட்சியைத் தடுக்கும்:

ஷீட் மாஸ்க் சரும வறட்சியால் அவதிப்படுபவர்களுக்கு வறட்சியை நீக்கி சருமம் பொலிவுபெற உதவும். இது சருமத் துளைகளில் ஆழமாகச் சென்று விரைவில் சருமத்தில் வறட்சி ஏற்படுவதை தடுக்கும். போதுமான நீர் சத்து செல்களுக்கு கிடைக்காததால் தான் சரும வளர்ச்சி ஏற்படுகிறது. இந்த ஷீட் மாஸ்குகள் சருமத்திற்கு போதிய நீர்ச்சத்தை வழங்குவதால் உடனடியான பலனைக்காண முடியும்.

முகப்பருக்களை கட்டுப்படுத்தும்:

முகப்பருவுக்கு எதிரான ஷீட் மாஸ்க் கிடைக்கிறது. டீ ட்ரீ ஆயில், கற்றாழை, சாலிசிலிக் அமிலம் போன்ற பொருட்களால் நிரப்பப்பட்டிருக்கும் இந்த ஷீட் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தவும், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை அகற்றவும், வெடிப்புகளை தடுக்கவும் பயன்படுகிறது. ஷீட் மாஸ்கை பயன்படுத்துவதால் முகப்பருக்கள் குறைவதுடன், முழுமையாக போக்கவும் உதவும்.

சருமத்தை சுத்தமாக்கும்:

சருமத்தில் தூசி மற்றும் அழுக்குகளை முழுமையாக வெளியேற்றும் பண்புகள் நிறைந்துள்ளதால் சருமத்தை சுத்தமாகவும், பொலிவாகவும் வைத்திருக்கும். முகத்தில் உள்ள கருமையான தழும்புகள், சுருக்கங்கள், கரும்புள்ளிகளை குறைத்து சரும நிறத்தை கூட்டிக்காட்டும்.

சமூக ஊடகங்களில் நயன்தாரா போன்ற பிரபலங்கள் தாள் முகமூடிகளை விளம்பரப்படுத்துகின்றனர். இது இன்ஸ்டாகிராம் மற்றும் youtube போன்ற தளங்களில் ஒரு பிரபலமான தலைப்பாகவும் அமைகிறது.

இதையும் படியுங்கள்:
பணம் செலவழிக்காமல் அழகாக இருக்க முடியுமா? இதோ, நீங்கள் தேடிய வழிகள்!
To prevent skin dryness

வசதியான மற்றும் எளிதான தன்மை:

வசதியான மற்றும் பயன்படுத்த எளிதான தன்மை காரணமாக தாள் முகமூடிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதன் விரைவான மற்றும் பயனுள்ள சரும பராமரிப்பு தீர்வுகளுக்காக பிஸியான நபர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. இது பயணங்களின் பொழுது கூட சரும பராமரிப்பை எளிதாக்குகிறது.

பல இந்திய சரும பராமரிப்பு பிராண்டுகள் சந்தையில் நுழைந்து, அதிகரித்து வரும் நுகர்வோர் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதமாக கொரிய ஈர்க்கப்பட்ட தாள் முகமூடிகளை உருவாக்குகின்றன.

விரைவான, பயனுள்ள மற்றும் எளிதில் அணுகக் கூடிய தோல் பராமரிப்பு தீர்வுகள், வெளிப்படையான முடிவுகளை வழங்குவதற்கான விருப்பத்தால் இந்த போக்கு இயக்கப்படுகிறது. கொரிய அழகு கலாச்சாரம், சமூக ஊடகங்கள் மற்றும் பிரபலங்களின் ஒப்புதல்கள் ஆகியவற்றின் செல்வாக்கு காரணமாக தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள் உட்பட பலருக்கு இந்த தாள் முகமூடிகள் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.

எப்படி பயன்படுத்துவது?

ரொம்ப சிம்பிள். முதலில் முகத்தை நீரில் கழுவி துடைத்துக்கொண்டு, ஷீட் மாஸ்கை முகத்தில் வைத்து 20-30 நிமிடங்கள் ஊறவைத்து பின்பு நீக்கிவிட வேண்டியதுதான்.

எத்தனை முறை பயன்படுத்துவது?

ஷீட் மாஸ்கை வாரத்துக்கு இரண்டு மூன்று முறை உபயோகிக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஷீட் மாஸ்க் போடுவதற்கு என்று நேரம் எதுவும் ஒதுக்க வேண்டியதில்லை. இந்த வகை மாஸ்க்களை வீட்டை சுத்தம் செய்யும்பொழுது, படிக்கும்பொழுது, டிவி பார்க்கும் பொழுது என எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com