
உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு என்பர். அப்படி மங்கையரின் வயிறு எப்படி இருந்தால் என்னென்ன சௌகரியங்கள், சகல சௌபாக்கியங்கள் ஏற்படும் என்பதை இப்பதிவில் காண்போம்.
தவளையின் வயிறுபோல அமைந்துள்ள வயிறு உடைய பெண்களுக்கு சந்தான விருத்தியும், சம்பத்து விருத்தியும், சுப மாங்கல்யமும் உண்டாகும். புத்திரர்கள் மேன்மை அடைவார்கள் . உயர்ந்த பதவிகளை பெற்று தாய்மாரை தெய்வமாக போற்றுவார்கள் என்கிறது வயிறு பற்றிய லட்சணக்குறிப்பு.
பெண்களின் வயிறானது மிருதுவானதாகவும், மெல்லிய தோளினை உடையதாகவும், பருத்த கொப்பூழை உடையதாகவும் உரோமம் அற்றும் இருந்தால் அத்தகைய பெண்கள் செல்வ சீமாட்டியர்கள் ஆவார்கள்.
உள்ளங்கையைப்போல வயிறு நடுவில் ஒட்டினார்போல இருக்கும் பெண்களுக்கு லட்சுமி கடாட்சம் உடைய குடும்ப வாழ்க்கை அமைவது உறுதி. இவர்களால் இவர்களுடைய பிறந்த இடம், புகுந்த வீடும் வளமையும் செழிப்பும் பெற்று விளங்குவதோடு, இவர்கள் குடும்பத்தில் சகல வசதிகளும் பெருகி புகழும் பெருமையும் உண்டாகுமாம்.
சிலரின் வயிறு விசாலமாக இருப்பதை காணலாம். இதில் விசேஷம் என்னவென்றால் அவருக்கு தாயாகும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் காலம் கடந்து கிடைக்கும் என்பதுதான் இதன் உறுதிப்பாடு. இதனால் இப்படிப்பட்ட வயதுடைய பெண்கள் நம்மால் தாயாக முடியாதோ என்று ஏங்குவதை தவிர்க்கலாம்.
சில பெண்களுக்கு பானை வயிறு இருப்பதை பார்க்கலாம். அவர்களை கிண்டல் கேலி செய்பவர்களும் உண்டு. அப்படி இருப்பவர்கள் குடும்ப வாழ்க்கையின் நிர்வாகத்தில் சிறந்து விளங்குவார்கள் என்றும், சமயற்கலையில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், சுவையான உணவுகளை விரும்பிய போதெல்லாம் உண்ணும் பாக்கியம் பெற்றவர்களாகவும், இதயத்தில் மனிதாபிமான உணர்வுகளை உடையவர்களாகவும் விளங்குவார்கள் என்கிறது ஜாதக அமைப்பு.
மங்கையரின் வயிறு பாம்பின் வயிற்றைப்போல ரோமங்கள் இன்றி வழுவழுப்பாகவும், படிமானமாகவும் இருந்தால் தங்கள் ஆயுள் முழுமையும் சுகபோக சௌகரியங்களுடன் சகல சம்பத்தும் நிறைந்தவர்களாக இருப்பார்கள் என்கிறது லட்சணக் குறிப்பு.
வயிற்றில் இரண்டு மூன்று மடிப்புகள் அமையப்பெற்ற பெண்களுக்கு புதையல் கிடைக்கும் யோகமும், எதிர்பாராத நிதி வசதியும் உண்டாகும் .ஆடை ஆபரண வசதிகள் உண்டாகும். சத் புத்திரர்கள் பிறப்பார்கள். மணவாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். சகல ஐஸ்வர்ய அபிவிருத்திகளும் உண்டாகுமாம்.
பெண்களின் வயிறு மென்மையாக இருப்பின் தீர்க்காயுளும், சௌபாக்கியங்களும் உண்டாவதுடன், புத்திர பௌத்ராதிகளுடன் வாழ்நாள் முழுமையும் பொறுப்புடையவர்களாகவும், பொறுமையும், நிதானமும் உடையவர்களாகவும் விளங்குவார்கள் என்றும், வயிறு இளைத்து இருந்தால் மிகவும் பாக்கியசாலிகளாக திகழ்வார்கள்.
சகல சம்பத்துக்களும் விருத்தியடையும். இவர்கள் நல்ல மனம் உடையவர்களாகவும் இளகிய சுவாபம் உடையவர்களாகவும், பரோபகாரிகளாகவும் இருப்பார்கள் என்றும் வயிறு பற்றிய லட்சணக்குறிப்பு உணர்த்துகிறது.
அதிகமாக சாப்பிடாமலும் சத்தானதை சாப்பிட்டும் வயிற்றுக்கு எந்த விதமான அஜீரணக் கோளாறுகளும் வராதபடிக்கு பார்த்துக் கொண்டோமானால் வயிறு பெருக்காமல் இருக்கும். அதனால் மேடிடாத வயிறு கிடைக்கும். அப்பொழுது வயிறு அழகு பெறுவதுடன் ஆரோக்கியம் மிக்கனவாகவும் இருக்கும்.