கோடை காலத்திற்கேற்ற எளிய அழகு பராமரிப்பு குறிப்புக்கள்!

அழகு பராமரிப்பு...
அழகு பராமரிப்பு...pixabay.com
Published on

கோடைக் காலம் என்றாலே அனைவருக்கும் பிரச்சனைதான். வெளியில் அலைபவர்களுக்கு கேட்கவே வேண்டாம். தோல் கருத்தல், நாவறட்சி, கண் சோர்வு, வியர்வை, பிசுபிசுப்பு, துர்நாற்றம் , பாத வெடிப்பு என பல்வேறு இம்சைகள் ஏற்படும் அவைகளில் இருந்து நம் உடலை பாதுகாக்க சில அழகு  பராமரிப்பு குறிப்புகள் பார்ப்போம். 

ண்கள் சோர்வடையாமல் இருக்க  விளக்கெண்ணெய் துளி எடுத்து கண்களை சுற்றி தடவ வேண்டும்..

வெள்ளரிக்காய் சாறு தேன் மசித்த உருளைக்கிழங்கு எல்லாமே கண்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்..

பாக்கெட்டில் உள்ள டீ தூளை டப்பாவில் நிறைந்த பின் அந்த பாக்கெட்டை பிரிட்ஜில் வைத்த பிறகு வெளியே எடுத்து கண்களின் மேல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்தால் கண்களில் குடி கொண்டுள்ள சோர்வு எல்லாம் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.

வாரம் ஒரு முறை வெள்ளரி, ஆப்ரிகாட், பப்பாளி போன்ற ஏதேனும் ஒன்றை அரைத்து முகத்திற்கு மாஸ்க்  போல் போடலாம். இதை தனியா அரைத்து போடாமல் அதனை அரைத்து தயிர், தேன், ஓட்மீல் எலுமிச்சை சாறு அல்லது பன்னீர் சேர்த்து முகத்தின் மீது போட்டு ஊறி கழுவ வேண்டும்.

கிராம்பு ஜாதிக்காய் இரண்டையும் பொடி செய்து பன்னீர் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி சிறிது நேரத்துக்கு பிறகு கழுவினால் பருக்கள்  குறையும்.

துளசி, புதினா, கொத்தமல்லி, சிறிது வேப்பிலை கொழுந்து சேர்த்து அரைத்து எலுமிச்சை சாறு கலந்து ஒரு ஸ்பூன் முல்தானிமட்டி சேர்த்து முகத்தில் பேக் போட வேண்டும். இருபது நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் எல்லாம் மறைந்து முகம் பொலிவுடன் மின்னும்.

அழகு பராமரிப்பு...
அழகு பராமரிப்பு...pixabay.com

திக எண்ணெய் பசை உள்ளவர்கள் முகத்தில் கொண்டைக்கடலை மாவு அல்லது ஓட்மீலை தயிருடன் கலந்து சிறிதளவு எலுமிச்சை சாறு, வேப்ப இலை பொடி சேர்த்து கலந்து முகத்தில் பூசி ஊறிய பின் குளிக்க வேண்டும்.

தேன் சிறந்த ப்ளீச்சிங் என்பது தெரியுமா பப்பாளி பழத்தை அரைத்து தேன் மற்றும் எலுமிச்சைசாறு சேர்த்து உடலில் தடவிய பின் கழுவினால் வறண்ட சருமம் வழவழப்பான சருமம் ஆகும்.

இதையும் படியுங்கள்:
‘நேத்ரா பஸ்தி’ முறை என்றால் என்ன தெரியுமா?
அழகு பராமரிப்பு...

திக நேரம் ஏசி அறையில் இருப்பவர்கள் வாக்சின் உடலில் தடவிக்கொள்வது போல் ஏலாதி தைலத்தையும் பூசிக்கொள்ளலாம். தோல் வறண்டு போகாமல் தடுக்கப்படும்.

ரு ஆரஞ்சு பழத்தை தோல் உரித்து சதை பற்றுகளை நீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும் குளிர்ந்ததும் வடிகட்ட வேண்டும். இதனை லோஷன் போல சருமத்தில் தடவி வர சருமம் மிருதுவாகவும் அழகாகவும் திகழும். வெய்யிலினால் ஏற்படும் சரும கோளாறுகளும் நீங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com