
அதிகமாக அறியப்படாத வெள்ளை தக்காளி சருமப்பொலிவிற்கு மிகச் சிறந்ததாக அறியப்படுகிறது. இதன் ஊட்டச்சத்துக்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இது ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சிவப்புத் தக்காளியில் இருக்கும் லைகோபீன் வெள்ளைத் தக்காளியில் கிடையாது. ஆனால், இதில் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளன.
இதில் phytoene மற்றும் phytofluene காணப்படுகிறது. இது இயற்கை சத்துக்கள் ஆகும். வெள்ளைத் தக்காளியில் இருந்து cold press முறையில் ஊட்டச்சத்துக்கள் எடுக்கப்படுகின்றன. இந்த நிறமில்லாத கரோடினாய்டுகள் சருமத்தை ஊடுருவிச் சென்று சூரிய ஒளி மற்றும் சுற்றுச்சூழல் மாசுகளிடமிருந்து சருமத்தை காக்கிறது. இந்த இயற்கை ஊட்டச்சத்து சருமத்திற்குப் பொலிவைத்தந்து சருமத்தை பளபளப்பாக வைக்கிறது.
வெள்ளைத் தக்காளியின் பயன்கள்
இதன் ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் அதிக மெலனினால் கருப்பு திட்டுகள் உருவாகாமல் தடுக்கிறது. இது சென்சிடிவான சருமம் உள்ளவர்களுக்கும் ஏற்றது.
இதில் அதிக ஆன்டி ஆக்சிடண்ட் இருப்பதால், ஃப்ரீ ராடிகல்கள் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. இதனால் சருமம் பாதுகாப்பாக வைக்கப்படுவதுடன் முகத்தில் கோடுகளை தடுக்கிறது. முகம் மிக மென்மையாகிறது. முகத்தை இளமையாகவும் வைக்கிறது.
இதன் நிறமில்லா கரோடினாய்டுகள் சருமத்தை அல்ட்ரா வயலெட் கதிர்களிடமிருந்து காக்கிறது. பகல் நேரத்தில் சூரிய வெளிச்சத்திலிருந்து சருமத்துக்கு நல்ல பாதுகாப்பு தருகிறது.
இதில் எந்த கெமிகல் மற்றும் பீளீசிங் பண்பு இல்லாததாலும், கடின அமிலங்கள் இல்லாததாலும், அரிப்பை தடுப்பதாலும் இது எல்லா வித சருமத்திற்கும் ஆரோக்கியமானது. பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
ஆக்சிடேடிவ் அழுத்தத்தைக் எதிர்ப்பதாலும் மேலும் இளமையை தக்க வைக்கும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதாலும், இது சருமத்தை இளமையை தக்க வைக்க மிக உதவியாக இருக்கிறது.
வெள்ளை தக்காளியில் இருந்து எடுக்கப்படும் ஊட்டச்சத்துக்கள் பண்புகள் சருமத்திற்கு மிக பயனுள்ளதாக இருப்பதால், இது அதிக அளவில் மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது. நல்ல இளமையான பொலிவான சருமத்திற்கு வெள்ளை தக்காளியை பயன்படுத்துங்கள். இது உங்கள் அழகையும், இளமையையும் இயற்கையாக தக்க வைக்க உதவுகிறது.