கண்ணாடி போல சருமம் மின்ன இந்த ஒரு எண்ணெய் போதுமே!

Sea buckthorn oil
Sea buckthorn oil
Published on

கடல் பக்ஹார்ன் எண்ணெய் (Sea buckthorn oil) பலநூறு ஆண்டுகளாகப் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆரோக்கியத்தைத் தாண்டி முடி மற்றும் சருமப் பராமரிப்பிற்கும் கடல் பக்ஹார்ன் எண்ணெய் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடல் பக்ஹார்ன் எனும் தாவரத்தின் விதைகள் மற்றும் பழங்களில் இருந்து இந்த எண்ணெய் தாயாரிக்கப்படுகிறது. சீபெர்ரி அல்லது சைபீரியன் அன்னாசி அல்லது ஹிமாலயன் பெர்ரி என்றும் அழைக்கப்படுகிறது. கடல் பக்ஹார்ன் ஐரோப்பா, ரஷ்யா மற்றும் ஆசியாவின் பல்வேறு குளிர்-மிதமான பகுதிகளிலும் மலைத்தொடர்களிலும் வளரும். 

சருமப் பராமரிப்பில் கடல் பக்ஹார்ன் எண்ணெய்:

  • கடல் பக்ஹார்ன் எண்ணெய் சருமப் பிரச்னைகளுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள ஒரு இயற்கை தீர்வாகும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் பால்மிடோலிக் அமிலம் மற்றும் கரோட்டினாய்டுகள் ஆகியவை நிறைந்துள்ளன.

  • இதில் உள்ள பால்மிடோலிக் அமிலம் தீப்புண், வெட்டுப்பட்ட காயம் போன்ற சேதமடைந்த சருமத்தையும் புற ஊதா கதிரினால் சேதமடைந்த சருமத்தையும் சரிசெய்ய உதவுகிறது. கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

  • கரோட்டினாய்டுகள் சருமத்தில் ஏற்படும் கோடுகளையும் சுருக்கங்களையும் கட்டுப்படுத்துகின்றன. 

  • இதில் உள்ள வைட்டமின் ஈ இயற்கையாக சருமத்தைப் பளபளப்பாக்க உதவுகிறது. சருமத்தில் மெலனின் உற்பத்தியைத் தடுத்து சருமத்திற்கு நிறத்தை அளிக்கிறது. கரும்புள்ளிகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்ட்டேஷனை சரி செய்கிறது. 

  • சரும அழற்சி மற்றும் சிவத்தலைக் குறைப்பதன் மூலம் சருமத்தின் நிறத்தை சமன் செய்ய உதவுகிறது.

  • இது சருமத்தில் நீரிழப்பு ஏற்படுவதைத் தடுத்து சருமத்தை ஈரப்பதத்துடனும் மிருதுவாகவும் நெகிழ்வுத் தன்மையுடனும் வைத்திருக்க உதவுகிறது.

  • சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க, இந்த எண்ணெயை சன்ஸ்கிரீனுக்குப் பதிலாக பயன்படுத்தலாம். 

  • அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது. சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதைத் தடுக்க உதவுகிறது. எனவே, எண்ணெய் சருமம் கொண்டவர்கள் இதனை தாராளமாகப் பயன்படுத்தலாம். முதுமைத் தோற்றத்தை மெதுவாக்க இது பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
காய்கறிகள் இல்லாமல், சுவையாகவும் சத்தாகவும் சமைக்க 7 வகை உணவுகள்!
Sea buckthorn oil
  • இரவில் முகத்தை சுத்தம் செய்து, மென்மையான துண்டு பயன்படுத்தி உலர்த்த வேண்டும். பின்,  கடல் பக்ஹார்ன் எண்ணெயை 3 அல்லது 4 துளிகள் எடுத்து முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி 5 முதல் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யலாம். தினமும் இவ்வாறு  சிறிதளவு கடல் பக்ஹார்ன் எண்ணெயை தடவி வந்தால் பளபளப்பான, மென்மையான சருமத்தைப் பெற முடியும். 

  • மருத்துவ ரீதியாக, கடல் பக்ஹார்ன் எண்ணெய் முகப்பரு, அழற்சி, வீக்கம், சரும சேதங்களை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

  • உதடு மற்றும் கூந்தல் பராமரிப்பிலும் கடல் பக்ஹார்ன் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது முடி வளர்ச்சியை அதிகரித்து, பளபளப்பாக்க வைக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
நீங்க குப்புற படுத்து தூங்குவீங்களா? போச்சு போங்க!
Sea buckthorn oil
  • மற்ற அத்தியாவசிய எண்ணெய்களுடன் கலந்து பயன்படுத்துவதன் மூலம் இதன் செயல்திறனை மேம்படுத்த முடியும். இது வெளிநாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆன்லைன் மூலமாக இதனை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும் பயன்படுத்த ஆரம்பிப்பதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்துகொள்வதும் அளவோடு பயன்படுத்துவதும் நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com