
பொதுவாக மனித உருவ அமைப்பில் உணர்ச்சியின் வெளிப்பாடாக பெரும்பாலும் முகமே அமைகிறது. ஒவ்வொருவரின் இன்ப துன்பம் மற்றும் பலவகை உணர்ச்சிகளை முகமே காட்டும்.
மேலும் ஒருவரின் அழகுத்தன்மை அவரின் முகத்தைக் கொண்டு அமைகிறது. எனவே ஒவ்வொருவருக்கும் அவரவர் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் நிறைவே உண்டு.
உங்கள் முகத்தை அழகுபடுத்துவதற்கு முன் அது எந்த வகையானது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். சாதாரண சருமம் உடையவர்கள் அதிகம் கவலைப்பட தேவையில்லை. மேலும் இவ்வகை சருமத்திற்கு அதிக கவலைபடத்தேவையில்லை.
சாதாரண கவனிப்பே போதும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை மசாஜ் செய்து அதற்கேற்றவாறு பேக் போட்டு வர சருமம் பொலிவு வரும்.
சாதாரண சருமத்திற்கு செய்ய வேண்டிய குறிப்புகள்.
உருளைக்கிழங்கு சாற்றுடன் சம அளவு தேன் கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவவேண்டும். முகம் அழகாக மாறும்.
இளம் சூடான பாலுடன் ஒரு தேக்கரண்டி தேனை கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசி பத்து நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாகும்.
நன்கு பழுத்த பப்பாளி பழத்தின் சாற்றை முகத்தில் தேய்த்தால் வடுக்கள் மாறி முகம் பொலிவு பெறும்.
தயிரை முகத்தில் பூசி ஊறவைத்து பத்து நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாகும்.
ஆரஞ்சு பழ தோலை காயவைத்து பொடி செய்து அதை மோரில் கலந்து முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளபளப்பாகும்.
கசகசாவை ஊறவைத்து அரைத்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி வர முகச்சுருக்கங்கள் மறையும்.
பாலேட்டை நன்றாகமுகத்தில் தேய்த்து ஊறவிட்டு முகத்தை கழுவி வந்தால் முகம் மென்மையுடன் பிரகாசமாக ஜொலிக்கும்.
கேரட் ஆரஞ்சு சாற்றுடன் தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும்.
முட்டையின் வெள்ளை கருவுடன் மூன்று துளிகள் எலுமிச்சை சாறு விட்டு முகத்தில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்துகுளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளப்பு பெறும்.
ஆரஞ்சு பழச்சாற்றை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் கழித்து பயத்தம் பருப்பு மாவை கொண்டு தேய்த்து முகம் கழுவினால் முகத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.
காய்ச்சாத பச்சை பாலை பஞ்சில் தொட்டு முகம் முழுவதும் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
5 பாதாம் பருப்பை ஊறவைத்து பாலுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கும்.
வாழைப்பழத்தை கூழாக்கி அதனுடன் தேனை கலந்து பூசி பத்துநிமிடம் கழித்து முகத்தை கழுவி வர முகம் பளபளப்பாகும்.
கடலை மாவுடன் சிறிது எலுமிச்சைசாறு கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவி வந்தால் நல்ல நிறத்தை கொடுக்கும்.
பாலுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து சிறிதளவு சர்க்கரை கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவி வர முகம் பளபளப்பாகும்.
வெள்ளரிச்சாற்றை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து பயத்த மாவு தேய்த்து முகத்தைகழுவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.
தக்காளியை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து உலர வைத்து பத்து நிமிடம் கழித்து முகத்தைகழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
தர்பூசணி பழத்தை நன்கு மசித்து சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து கழுவிவர முகத்திற்கு நல்ல பொலிவையும் சருமத்தை இளமையாகவும் வைத்துக்கொள்ளும்.