சருமப் பராமரிப்பு: உங்கள் சரும வகையைக் கண்டறிந்து பாதுகாக்க சில எளிய வழிகள்!

simple ways to protect your skin
Skin Care tips
Published on

ழகு பராமரிப்பில் மிக முக்கியமான பகுதி சருமம் (Skin). ஒவ்வொரு மனிதரின் சருமமும் தனித்துவமானது. எனவே ஒருவருக்கு பொருந்தும் பராமரிப்பு முறை, மற்றவருக்கு பொருந்தாது. அதனால் முதலில் சரும வகையை (Skin Type) அறிந்துகொள்ள வேண்டும்.

1.சரும வகைகள் (Skin Types)

வறண்ட சருமம் (Dry Skin) – நீர்ச்சத்து குறைவால் எளிதில் உலர்ந்து விடும்.

எண்ணெய் சருமம் (Oily Skin) – அதிக சதைப்பற்றிய சுரப்பி காரணமாக முகம் பிரகாசமாக ஒளிவிடும்.

கலவை சருமம் (Combination Skin) – சில பகுதிகள் எண்ணெய், சில பகுதிகள் வறண்டுவிடும்.

சென்சிட்டிவ் சருமம் (Sensitive Skin)- சூரிய ஒளி, தூசி, ரசாயனங்கள் ஆகியவற்றுக்கு சீக்கிரம் தாக்கம் அடையும்.

சாதாரண சருமம் (Normal Skin) – அதிகமான பிரச்னை இல்லாமல் சமநிலையுடன் இருக்கும்.

2. தினசரி பராமரிப்பு முறைகள் (Daily Skin Care Routine)

காலை பராமரிப்பு

முகம் கழுவுதல்: சரும வகைக்கு ஏற்ற Face Wash பயன்படுத்த வேண்டும்.

டோனர் (Toner): ரோஸ் வாட்டர் போன்றவை துளைகள் (pores) சுருங்க உதவும்.

மாய்ஸ்ச்சரைசர் (Moisturizer): வறண்டு சருமத்துக்கு எண்ணெய் சத்து நிறைந்த க்ரீம், எண்ணெய் தோலுக்கு Water-based moisturizer.

சன்ஸ்கிரீன் (Sunscreen): குறைந்தது SPF 30+ கொண்டது அவசியம்.

இதையும் படியுங்கள்:
இயற்கை முறையில் முக அழகை மேம்படுத்தும் வழிகள்!
simple ways to protect your skin

இரவு பராமரிப்பு

முகம் நன்கு சுத்தம் செய்தல்: நாள் முழுவதும் படிந்த தூசி, மேக்கப் நீக்குதல்.

நைட் க்ரீம் அல்லது சீரம்: தோலை புதுப்பிக்க உதவும்.

கண்களுக்கு (Under Eye Care): குளிர்ந்த வெள்ளரிச் சாறு அல்லது Eye Cream

3. இயற்கை பராமரிப்பு (Natural Remedies)

மஞ்சள் + பால் முகப்பருவை குறைக்கும். அலோவேரா ஜெல் சுடும் உணர்வு, சிவப்பு, உலர்ச்சி குறையும். தேன் இயற்கை மாய்ஸ்ச்சரைசர். வெள்ளரி (Cucumber) கண் வீக்கம், கருவளையை குறைக்கும். நெல்லிக்காய் சாறு Vitamin C காரணமாக முகம் பிரகாசமாகும்.

4. உணவு & வாழ்க்கைமுறை (Diet & Lifestyle)

தினமும் 2–3 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். பழங்கள் (மாதுளை, ஆரஞ்சு, பப்பாளி) மற்றும் காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும். ஜங்க் ஃபுட், அதிக எண்ணெய் உணவு தவிர்க்க வேண்டும். 8 மணி நேர தூக்கம் தோல் புதுப்பிக்க உதவும். யோகா, மெதுவான உடற்பயிற்சி ரத்த ஓட்டத்தை சீராக்கி முகம் குளிர்ச்சி பெற உதவும்.

5. தவிர்க்க வேண்டியவை

அதிக சோப்பு/ஹார்ஷ் Face Wash பயன்படுத்துதல். பருக்களை கைகளால் அழுத்தி பிளத்தல். போதிய தூக்கம் இல்லாமல் இரவு முழுவதும் விழித்திருத்தல். அதிக ரசாயனங்கள் கொண்ட மேக்கப்.

சருமத்துக்கு சரியான பராமரிப்பு என்பது வெறும் க்ரீம், மேக்கப் அல்ல; அது சரியான சுத்தம், சரியான உணவு, சரியான பழக்கவழக்கம் ஆகியவற்றின் கலவையாகும். உங்கள் சரும வகையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற முறையைப் பின்பற்றினால், சருமம் எப்போதும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும். உங்கள் சருமம் தனித்துவமானது.

இதையும் படியுங்கள்:
'Gender fluid fashion' இது ஃபேஷன் உலகில் ஒரு புதிய மாற்றம்!
simple ways to protect your skin

எனவே உங்கள் சருமப் பராமரிப்பும் அப்படித்தான் இருக்கவேண்டும். உங்களுக்கு எண்ணெய் பசை, வறண்ட, கலவை, உணர்திறன் அல்லது சாதாரண சருமம் இருந்தாலும், உங்கள் சருமத்தில் நம்பிக்கையுடனும் சௌகரியத்துடனும் உணரஉதவும் ஒரு வழக்கம் உள்ளது. சருமப் பிரச்னையின் அறிகுறிகளைப் புறக்கணிக்காமல், சரியான பராமரிப்பு மற்றும் நிபுணர்களின் உதவியுடன், ஆண்டு முழுவதும் தெளிவான, மென்மையான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com