வறண்ட சருமமா? எண்ணெய் பசையா? உங்கள் சருமத்திற்கு ஏற்ற டோனரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

Skin Care Tips
Skin Care Tips
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

முகத்தை சுத்தம் செய்ய கிளன்சிங் பயன் படுத்தப்படுகிறது. அப்படி சுத்தம் செய்து திறக்கப்பட்ட முகத்தின் சரும துவாரங்களை மூடிக் கொள்ள டோனர் (Toner) அவசியமாகிறது. முகத்திற்கு டோனர் பயன்படுத்துவது சருமத்தின் பிஹெச்(pH) அளவை சமப்படுத்துகிறது. துளைகளை(Pores) சுருக்கி சுத்தப்படுத்துகிறது.

இதனால் சருமம் பளபளப்பையும் இயற்கையாக பெறுகிறது. சருமம் இளமையாகவும், அழகாகவும், மென்மையாகவும் இருப்பதற்கு டோனர் அவசியம். இது சருமத்தை சுத்தம் செய்ய பயன் படுத்தப்படுகிறது. இயற்கையாகவே முகத்தை பராமரிக்க உதவும் இவை சருமத்திற்கு பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை.

நம் சருமத்தின் தன்மைக்கேற்ப டோனரை தேர்ந்தெடுக்க வேண்டும். எண்ணெய் பசை சருமம், வறட்சி சருமம், நார்மல் சருமம் போன்றவற்றிற்கு ஏற்ப தேர்வு செய்து 10 துளிகள் எடுத்து பஞ்சில் முக்கிய எடுத்து முகத்தில் அழுந்த துடைக்கலாம். முகம் முழுவதும் தடவி நன்கு காய்ந்ததும் சருமத்துளைகள் மூடிக் கொள்ளும். டோனர் செய்வதன் மூலம் முகம் பளிச்சென்று இருக்கும்.

1) ஃபேஸ் டோனர் பயன்படுத்துவதின் நன்மைகள்:

a) டோனர் பயன்படுத்துவதன் மூலம் நம் முகத்திற்கு தேவையான நீர்ச்சத்தும் ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன. இதனால் சருமத்தை ஈரப்பதமாக்கி(hydration), வறட்சியைத் தடுத்து மென்மையாக்கி முகத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது.

b) அதிக நறுமணம் மிக்க சோப்புக்களையும், ஃபேஸ் வாஷ் திரவங்களையும் பயன்படுத்தினால் சருமத்தில் வறட்சி உண்டாகும். இதை டோனர் பயன்படுத்துவதன் மூலம் சரி செய்ய முடியும்.

இதையும் படியுங்கள்:
ஒரு சோப் விலை 2 லட்சமா? அப்படி இதில் என்னதான் இருக்கிறது? வியக்கவைக்கும் பின்னணி!
Skin Care Tips

c) சருமத்துளைகளில் உள்ள தூசு மற்றும் அசுத்தங்களை நீக்கி துளைகளை இறுக்கி சுருக்குவதன் மூலம் சருமத்தை மென்மையாக்குகிறது.

d) சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தி எண்ணெய் பசையுள்ள சருமத்தை ஒழுங்கு படுத்தி பொலிவான சருமத்தை வழங்குகிறது.

e) AHA மற்றும் BHA போன்ற எக்ஸ்ஃபோலியேட்டிங் பொருட்களைக் கொண்ட டோனரை பயன்படுத்தும் பொழுது இறந்த சரும செல்களை அகற்றி, செல் புதுப்பித்தலை ஊக்குவிக்கிறது. தோல் டோனரை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சமமான நிறத்தை அளிக்கவும், ஒட்டுமொத்த சரும அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.

f) அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட டோனர்கள் சருமம் சிவப்பதையும், வீக்கம் மற்றும் எரிச்சலையும் போக்குகின்றன. டோனர் பயன்படுத்துவதால் சீரம் அல்லது மாய்ஸ்சரைசர் சருமத்தில் நன்கு ஊடுருவிச் சென்று செயல்பட உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
காபி தூள் கொண்டு ஃபேஸ் மாஸ்க்... ஒருமுறை ட்ரை பண்ணுங்க!
Skin Care Tips

2) பயன்படுத்தும் முறை:

முகம் கழுவிய உடன் டோனரை காட்டன் பேடில் எடுத்து முகத்தில் தடவலாம் அல்லது நேரடியாக முகத்தில் ஸ்பிரே செய்து பிறகு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். ஆல்கஹால் இல்லாத, சருமத்திற்கு ஏற்ற இயற்கை மூலப்பொருட்கள் கொண்ட டோனர்களை தேர்ந்தெடுப்பது நல்லது.

logo
Kalki Online
kalkionline.com