விரல் மற்றும் முழங்கால்களில் ஏற்படும் நிறமாற்றத்திற்கான தீர்வுகள்!

Beauty tips
Hyper pigmentation solutions
Published on

கை, கால், விரல் முட்டிகளில் மெது, மெதுவாக கருமையான திட்டுகள் தென்படத் தொடங்குகின்றனவா? அவை, பெரும்பாலும் ஹைப்பர் பிக்மென்டேஷன் காரணமாக ஏற்படுகின்றன. இந்தக் குறைபாடானது சருமம் வழக்கத்தைவிட அதிக மெலனின் உற்பத்தி செய்யும்போது நிகழ்கிறது. மெலனின் என்பது தோலுக்கு நிறத்தைக் கொடுக்கும் நிறமி. பொதுவாக மாநிறம் அல்லது அதற்கும் கீழான நிறம் கொண்டவர்களுக்கு கணுக்கால் முட்டியில் சரும நிறம் சற்றே கருப்பாகத்தான் இருக்கும். இருப்பினும், நிற பேதமின்றி அனைவருக்குமே கூட இப்படியான கருமை நிற திட்டுகள் தோன்றிடக் கூடும்.

ஹைபர் பிக்மெண்டெஷன் தவிர வேறு என்ன குறைபாட்டினால் கருந்திட்டுகள் தோன்றுகின்றன?

வைட்டமின் பி-12 குறைபாடு என்பது இரத்த சோகை, சோர்வு மற்றும் நரம்பியல் அறிகுறிகளுக்கு அங்கீகரிக்கப்படாத,ஆனால் எளிதில் சரிசெய்யக்கூடிய ஒரு காரணமாகும். கை, கால், விரல் முட்டிகளில் ஹைப்பர் பிக்மென்டேஷன் என்பது வைட்டமின் பி-12 குறைபாட்டைக் கண்டறிவதற்கான ஒரு முக்கியமான அறிகுறியாகும்.

இதிலிருந்து விடுபட பொதுவான தீர்வுகள் என்னென்ன?

1. கைகளை சுத்தமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருங்கள்

வெளியில் சென்று திரும்பும் ஒவ்வொருமுறையும் கை மற்றும் கால்களை நன்கு மென்மையான சோப் வாட்டர் கொண்டு கழுவப் பழகுங்கள். சோம்பல் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் நீங்கள் இதைச் செய்ய மறந்தீர்களானால் சருமத்துளைகளில் அழுக்குகள் அடைத்துக்கொண்டு சருமத்துக்கு உட்புற சேதத்தை ஏற்படுத்தக்கூடும். வெயிலில் அலைந்து திரிந்துவிட்டு இரவில் வீட்டுக்குள் வருகிறீர்கள் எனில் தூங்குவதற்கு முன்பு கைகளையும், கால்களையும் மென்மையான பாடி வாஷ் கொண்டு ஒரு குளியலைப்போடுங்கள். குளித்த பின் மென்மையான துவாலையால் உடலைத் துடைத்த பின் மறக்காமல் மாய்ஸ்ச்சுரைஸைர் பயன்படுத்தலாம். இதன் மூலமாக சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப் பசைத்தன்மை பாதுகாக்கப்படும். தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த மாஸ்டரைஸராக செயல்படுவதோடு சருமம் கருமையாகாமலும் தடுக்கும்.

இதையும் படியுங்கள்:
இனிமை தரும் கொய்யா: முதுமையைத் தள்ளிப் போடும் இயற்கை மருந்து!
Beauty tips

2. எலுமிச்சை

பாதிக்கப்பட்ட பகுதிகளின் அளவு மற்றும் எண்ணிக்கையைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு நடுத்தர அளவிலான எலுமிச்சம் பழத்திலிருந்து சாறு எடுக்கவும். பின் தூய பருத்தியினால் ஆன பஞ்சை, சாற்றில் தோய்த்து,

அதிகப்படியான சாற்றைப் பிழிந்து விட்டு, பாதிக்கப்பட்ட பகுதியை மெதுவாக 2 முதல் 3 நிமிடங்கள் தேய்க்கவும். பின் சில நிமிடங்கள் அதை உலரவைத்துக் குளிர்ந்த நீரில் கழுவவும். எலுமிச்சையில் சருமத்தை பளபளக்கச் செய்யும் தன்மை அதிகம். இது வைட்டமின‘ சி’ மூலம் செறிவூட்டப்பட்டுள்ளது, எனவே,மெலனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுவதோடு கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இது சருமத்தின் கருமை, கரும்புள்ளிகள், தோல் நிறமி போன்றவற்றை போக்க உதவுவதோடு பிரகாசமான சருமத்தையும் அளிக்கிறது. இதைச் செய்து முடித்தபிறகு, சருமத்தை ஈரப்பதமாக்க உங்களது வழக்கமான குளியலையும் மாஸ்ச்ரைஸர் தேய்த்தலையும் மறக்காதீர்கள்.

3.ஆரஞ்சு தோல் மாஸ்க்

ஆர்கானிக் முறையில் விளைந்த ஆரஞ்சு தோலை நன்கு காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆரஞ்சு தூள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த ஒரு இயற்கையான சருமக்கறை அகற்றும் காரணி ஆகும். இது சருமத்துளைகளைத் திறந்து சுத்தப்படுத்தி, சருமத்தை இளமையாகவும் பிரகாசமாகவும் வைக்கிறது. இது சருமத்திற்கு சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டர் ஆகும், அதாவது இறந்த சரும செல்களை நீக்கி புது செல்களை உற்பத்தி செய்ய உதவுகிறது எனக்கொள்ளலாம். 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியை எடுத்து, 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு சாறு, 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் ½ டேபிள் ஸ்பூன் கடலை மாவு அல்லது பயத்தம் மாவு சேர்த்து நன்கு கலக்கவும்.

முகமூடியைப் பயன்படுத்துவதற்கு முன் பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தம் செய்து, தோலின் கருமையான பகுதிகளில் தடவவும். 15 நிமிடங்கள் காய வைத்து விட்டு பின் முகத்தில் நீர் அடித்து மிருதுவாகத் தேய்த்துக் கழுவி, பூந்துவாலையால் மென்மையாக முகத்தைத் துடைக்கவும். பிறகு நிச்சயமாக முன்பே சொன்னபடி தரமான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இது இறந்த சருமத்தை நீக்கி பொலிவாக்க உதவும்.

4. தயிர் & தக்காளி

தக்காளியில் ப்ளீச்சிங் ஏஜெண்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது, இது சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளவும், ஊட்டமளிக்கவும் உதவுகிறது. 1 நடுத்தர அளவிலான தக்காளியின் கூழ் எடுத்து, 1 தேக்கரண்டி தயிர் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும். நன்கு கலந்து சருமத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். 15 நிமிடங்கள் உலர விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். தயிரில் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன மற்றும் தக்காளியில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, எனவே அவை தோல் உரித்தல் மற்றும் இறந்த செல்களை அகற்ற உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
முடி வளர்ச்சியை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் சியா விதை - எப்போது சாப்பிடணும்?
Beauty tips

5. மஞ்சள்

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை சருமத்திற்கு புத்துயிர் அளித்து, கரும்புள்ளிகளை நீக்கி, பளபளப்பான சருமத்தை தருகிறது. மேலும், மஞ்சளில் சருமத்திற்கு உட்புறமாக வேலை செய்து காயங்களை குணப்படுத்தும் பண்புகள் உள்ளன. ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சளை எடுத்து, அதில் சில துளிகள் எலுமிச்சைசாறு அல்லது வெள்ளரிச் சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட்டாக்கி சருமத்தில் தடவி வந்தால் சரும வறட்சியைத் தடுக்கலாம். அதை உலரவைத்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

மேலே உள்ள எந்தவொரு கை வைத்தியத்தையும் முயற்சிக்கும் முன், ஒரு பேட்ச் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. அதாவது மேலே சொன்ன முறைகள் அனைத்திலும் முதலில் ஒரு சிறு துளி எடுத்து முன் கையிலோ அல்லது காது மடலின் பின்புறத்திலோ தேய்த்து சில நிமிடங்கள் உலரவைத்து சருமத்தில் எரிச்சல் அல்லது ஒவ்வாமை தோன்றுகிறதா என்று கவனிக்கவும். அப்படி எதுவும் இல்லை என்றால் இந்த வழிமுறைகள் உத்தமமானவை என்று பொருள். ஒவ்வாமை உணரப்பட்டால் இவற்றை முயற்சிக்கவேண்டாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com