
கம்பீரமான தோற்றம் உங்களுக்கு உண்டாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? கேரட் தக்காளி வெண்டைக்காய் இவைகளின் சூப் அருந்துவது உங்கள் ஆசையை நிறைவேற்றும்.
சிலருக்கு மூக்கின் இரு ஓரங்களிலும் சுருக்கம் விழுந்துவிடும். அப்படி சுருக்கம் விழாமல் இருக்க வெண்ணையை சாப்பிட்டு வர வேண்டும்.
அங்கங்களில் சுருக்கம் விழாமல் வலிவு பெற்று மொழு மொழுவென்று பார்ப்பதற்கு அழகாக இருக்க தினந்தோறும் எந்த பழச்சாற்றையாவது ஒரு டம்ளர் அளவு அருந்தி வரவேண்டும்.
தினமும் ஆப்பிள் பழத்தினை நறுக்கி தேனில் தொட்டு சாப்பிட்டு வந்தால் புருவங்கள் நீண்டு அழகுடன் வளரும்.
கன்னங்கள் ரோஸ் நிறத்துடன் வழுவழு வென்று இருக்க தக்காளி பழத்தை தினமும் பச்சையாக உண்ணுவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மேனி தங்க தகடுபோல பிரகாசிக்க வேண்டும் என நினைப்பவர்கள் பொன்னாங்கண்ணி கீரை சூப் வைத்து மதிய வேளையில் அருந்த வேண்டும்.
தினசரி காய்கறிகள் பழங்கள் சாப்பிட்டு வந்தால் முடிகொட்டுவது பெருமளவு குறையும் அழகான தோற்றமும் கிடைக்கும்.
மஞ்சளை பூசி குளித்துவர அழகை கொடுக்கும் தேவையில்லாத முடிகள் உதிரும்.
எண்ணெய் பசையுள்ள சருமம் கொண்டவர்களுக்கு பருக்கள் வந்தால் ஏடு இல்லாத தயிரை முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவவேண்டும் பருக்கள் காணாமல் போய்விடும்.
சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளிச்சாறுடன் சிறிது தயிர் சேர்த்து முகத்தில் பூசி வந்து ஐந்து நிமிடம் கழித்து அவற்றை தண்ணீர்விட்டு கழுவிவிட்டால் வறண்ட முகம் கூட பொலிவு பெறும்.
உடலை சிக் என வைத்துக்கொள்ள விடியற்காலையில் மிதமான சூடு நீரில் தேன் கலந்து பருகி வந்தால் இரண்டு மாதங்களில் உடல் இளைத்துவிடும் உடம்பில் உள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்துவிடும்.
முதன் முதலில் அரிசி கழுவிய நீரில் நன்றாக முகத்தை கழுவி பின்னர் சிறிது நேரம் கழித்து சுத்தமான நீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் அழகு மிளிர பொலிவுடன் காணப்படும்.
உடலில் உள்ள கருமை மாற பார்லி பொடியுடன் சிறிதளவு எலுமிச்சைசாறு மற்றும் பால் ஆகியவற்றை கலந்து வெயில் படும் இடங்களான முகம் கழுத்து கைகால் களில் பூசி உலர்ந்த பிறகு கழுவி விடவேண்டும் இதனை தொடர்ந்து செய்து வந்தால் கருமை மறைந்துவிடும்.
நீரின் நனைத்த கைவிரலை கோதுமை மாவு அல்லது பயத்த மாவில் தொட்டு தினமும் தடவி வந்தால் மூக்கின் ஓரங்களில் உள்ள வறட்சி நீங்கி பளபளப்பாகும்.
சூடான ஒரு டம்ளர் பாலில் அரை எலுமிச்சம் பழச்சாறு பிழிய வேண்டும் இப்போது பால் தயிர் போல் கட்டியாகிவிடும் இதை முகம் கழுத்து கை கால்களில் தட வேண்டும் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவேண்டும் இவ்வாறு செய்தால் தோல் பளபளப்பாக இருக்கும்.
இஞ்சியின் தோலை சீவி எடுத்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக அறிந்து ஒரு பாட்டில் போட்டு அது மூழ்கும் வரை தேனை ஊற்றி ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறிய பின் தினசரி காலையில் வெறும் வயிற்றில் ஒவ்வொரு துண்டாக சாப்பிட்டு வந்தால் உடம்பு மினுமினுப்பாக ஆகும்.
ஒரு பிடி கொத்துக்கடலையை முந்தின இரவே ஊறவைத்து அதில் சீமை அத்திப்பழம் இரண்டைக் கிள்ளி போட்டு ஊறவைக்க வேண்டும். காலையில் வேகவைத்து வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் உடல் அழகு கூடும்.