முகப்பொலிவை பரிசாக அளிக்கும் தென்கொரியாவின் அழகு சூட்சுமங்கள்!

Korean glowing skin
Korean glowing skin
Published on

உலகம் முழுவதும் அழகு சாதனப் பொருட்கள் விற்கப்படுகின்றன; ஆனால் தென்கொரியா மட்டும் இதில் தனித்து பிரபலமாக உள்ளது. தென்கொரிய அழகுப் பொருட்கள், பொதுவாக தரம், புதுமை, மற்றும் தனித்துவமான அணுகுமுறையால் உலகளவில் பெயர் பெற்றுள்ளன.

தென்கொரிய நாடகங்கள் நம்ம ஊர் OTT தளங்களில் பரவலாக வருகின்றன. அந்த நடிகைகளின் பளபளப்பான சருமமும், இயற்கையான அழகும் நம்மை கவர்கின்றன. "இவர்கள் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார்கள்? என்ன மேக்கப் பயன்படுத்துகிறார்கள்?" என்று எல்லோரும் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளோம். இதற்கு பின்னால் தென்கொரியாவின் அழகு சாதனப் பொருட்களே உள்ளன. இவற்றின் தனித்துவமான பண்புகள், அறிவியல் அடிப்படையிலான ரகசியங்கள், மற்றும் முகத்தில் பளபளப்பை தரும் வழிமுறைகளை பார்க்கலாமா ......

தென்கொரிய அழகுப் பொருட்களின் சிறப்புகள்:

தென்கொரிய அழகுப் பொருட்களில் இயற்கையான, தாவர அடிப்படையிலான பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக, பச்சைத் தேயிலை சாறு, அலோவேரா (அதாங்க நம்ம ஊரு கற்றாழை) , மற்றும் சென்டெல்லா ஆகியவை சருமத்துக்கு ஈரப்பதம் மற்றும் புத்துணர்ச்சி அளிக்கின்றன.

இவற்றின் பேக்கேஜிங் அழகாகவும், பயன்படுத்த எளிதாகவும் இருப்பது இளைஞர்களை கவர்கிறது.

தரம் உயர்ந்திருந்தாலும், விலை மலிவாக இருப்பது மற்றொரு பெரிய சிறப்பு.

ஒவ்வொரு சரும வகைக்கும் ஏற்றவாறு பல்வேறு தயாரிப்புகள் கிடைப்பதும் இதன் தனித்தன்மை.

இதையும் படியுங்கள்:
‘கச்சா ஆம்' (Raw Mango) நம் சருமத்திற்கு தரும் ஆரோக்கிய நன்மைகள்!
Korean glowing skin

அறிவியல் ரீதியான விளக்கங்கள்:

தென்கொரிய அழகுப் பொருட்கள் அறிவியல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை. உதாரணமாக, hyaluronic acid சருமத்தில் நீரைத் தக்கவைத்து, சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கிறது. இது சரும செல்களின் ஆழமான அடுக்குகளில் ஊடுருவி, உள்ளிருந்து புத்துணர்ச்சி தருகிறது. அதேபோல், வைட்டமின் சி மற்றும் niacinamide போன்றவை சரும நிற மாசுகளை குறைத்து, சருமத்தை சீராக்குகின்றன. இந்த அறிவியல் அணுகுமுறை தென்கொரியப் பொருட்களை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்துகிறது.

ஃபேஸ் மாஸ்க்கின் சிறப்பு

தென்கொரியாவின் ஷீட் மாஸ்க்குகள் உலகளவில் பிரபலமானவை. இவை பருத்தித் துணியால் செய்யப்பட்டு, தாவர சாறுகள் மற்றும் சீரம் நிரப்பப்பட்டவை. ஒரு மாஸ்க் பயன்படுத்துவதன் மூலம் சருமத்துக்கு தேவையான ஊட்டச்சத்துகள் உடனடியாக கிடைக்கின்றன. வைட்டமின் சி, கொலாஜன், மற்றும் சென்டெல்லா போன்றவை சருமத்தை பிரகாசமாக்கி, சுருக்கங்களை குறைக்க உதவுகின்றன. 15-20 நிமிட பயன்பாட்டிற்கு பிறகு, சருமம் பளபளப்பாக மாறுவதை உணரலாம். இதன் எளிமையும், விரைவான பலனும் இதை சிறப்பாக்குகின்றன.

பருக்களை எப்படித் தடுக்கிறார்கள்?

பருக்களைத் தடுப்பதில் தென்கொரியர்கள் சரும பராமரிப்பு முறைகளை கவனமாக பின்பற்றுகிறார்கள். தினசரி சுத்தம் செய்தல், இறந்த செல்களை நீக்குதல், மற்றும் ஈரப்பதம் அளித்தல் ஆகியவை அவர்களின் அடிப்படை பராமரிப்பில் அடங்கும். எண்ணெய் பசையை அகற்ற இரட்டை சுத்திகரிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. Tea tree oil மற்றும் salicylic acid போன்ற தாவர அடிப்படையிலான பொருட்கள் பருக்களை கட்டுப்படுத்தி, சரும துவாரங்களை சுத்தமாக வைத்திருக்கின்றன. இது சருமத்துக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்கி, பருக்களை தடுக்கிறது.

தென்கொரிய நடிகைகளின் அழகு ரகசியம்:

தென்கொரிய நாடகங்களில் நடிகைகள் பயன்படுத்தும் மேக்கப் இயற்கையான தோற்றத்தை மையமாகக் கொண்டவை. அவர்கள் மேக்கப்பை விட சரும பராமரிப்புக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். BB க்ரீம்கள், cushion foundations, மற்றும் lip tints போன்றவை அவர்களின் அழகை மேம்படுத்துகின்றன. இவை சருமத்துக்கு இலேசாகவும், நீண்ட நேரம் நீடித்தும் இருக்கின்றன. இதனால், OTT தளங்களில் அவர்களைப் பார்க்கும்போது அவர்களின் சருமம் பளபளப்பாக தெரிகிறது.

முடிவாக, தென்கொரியாவின் முக அழகை மேம்படுத்தும் அழகு பொருட்கள் இயற்கை, அறிவியல், மற்றும் கலாச்சாரத்தின் சிறந்த கலவையாக உள்ளன. எந்த உயிரையும் பலியிடாமல், தாவர அடிப்படையிலான பொருட்களால் தயாரிக்கப்படும் இவை உலக அளவில் பிரபலமடைந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
இறந்த செல்களை நீக்கி, சருமத்தை பொலிவாக்கும் முல்தானி மெட்டி!
Korean glowing skin

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com