
'பழங்களின் அரசன்' எனப்படும் மாம்பழத்தின் வருகை கூப்பிடு தூரத்திற்கு வந்துவிட்டது. அதற்கு முன் வரும் 'ரா மேங்கோ' எனப்படும் பச்சை மாங்காய்கள் ஊறுகாய்போட மட்டும் பயன்படுமென நினைக்காதீங்க. நம் சருமத்திற்கு அவை தரும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். அவை என்னென்ன, மாங்காய்களை எப்படி உபயோகிப்பது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
வைட்டமின் A, C மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மாங்காய் பருக்களை நீக்கி சருமத்தை பளபளப்பாக்க உதவும். இதில் நீர்ச்சத்து அதிகம். அதன் காரணமாய் சருமத்தின் மேற்பரப்பு மென்மையும் அழகுத் தோற்றமும் பெறும்.
பச்சை மாங்காயில் அதிகளவில் உள்ள வைட்டமின் A, C மற்றும் E ஆகிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும செல்களைப் பாதிக்கக் கூடிய ஃபிரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, சருமம் முன் கூட்டியே சுருக்கமடைந்து வயோதிகத் தோற்றம் பெறும் அவல நிலையைத் தடுத்து நிறுத்துகின்றன.
மேலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் சருமத்தில் உண்டாகும் கோளாறுகளையும், சூரியக்கதிர்களால் செல்களுக்கு உண்டாகும் பாதிப்புகளையும் தடுத்து சருமத்தைப்பாதுகாக்க உதவுகின்றன.
பச்சை மாங்காயில் உள்ள என்ஸைம்கள் மற்றும் இயற்கையிலான அமிலங்கள் சருமத்திற்கு மினு மினுப்பு தர உதவுவதோடு சருமத்திலுள்ள கறைகள் மற்றும் கரும் புள்ளிகளையும் நீக்க உதவுகின்றன.
சம்மர் சீசனில் தினசரி 'கச்சா ஆம்' பேஸ்ட்டை சருமப் பாதுகாப்பிற்கு உபயோகித்து வந்தால் சருமம் எந்தவித வேறுபாடும் காட்டாமல் ஒரேமாதிரி சுத்தமான காம்ப்ளெக்ஷன் பெற்றுத் திகழும். பச்சை மாங்காயில் பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி வந்தால் அதிலுள்ள அதிகளவு என்ஸைம்கள் மற்றும் AHAs (Alpha Hydroxy Acids) சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை மிருதுவான முறையில் உரித்தெடுத்துவிட்டு, புதிய செல்களுடன் சருமம் 'பளிச்' சென்று மின்ன உதவி புரியும்.
'கச்சா ஆம்' ஆன்டி மைக்ரோபியல் குணமுடையது. இது சருமத்தில் உள்ள துவாரங்களை சுத்தப்படுத்தவும், பருக்கள் வருவதைத் தடுக்கவும் உதவி புரியும். இதிலுள்ள வைட்டமின் C கொல்லாஜன் உற்பத்திக்கு உதவி புரிந்து, சருமத்தில் ஃபைன் லைன்ஸ் மற்றும் சுருக்கங்கள் தோன்றுவதைத் தடுக்கும்.
ஒரு ஃபிரஷ் மாங்காயை அரைத்து, அந்தப் பேஸ்டை முகம் முழுக்க மாஸ்க்காக தடவி வைத்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிவிடலாம்.
மாங்காய் தோலை யோகர்ட்டுடன் சேர்த்து அரைத்து, தேன் கலந்து அந்தப் பேஸ்டை முகம் முழுக்க தடவி வர முகத்தின் இறந்த செல்கள் உரிக்கப்பட்டு (exfoliate) சருமம் புதுப்பொலிவு பெறும்.