கோடை வெயிலில் முகம் எண்ணெய் வழியாமல் இருக்க இந்த சீக்ரெட் ரூட்டினை ஃபாலோ பண்ணுங்க!

summer-skincare-routine
summer-skincare-routine
Published on

கோடைகாலம் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு  மிகப்பெரிய போராட்டமாகவே மாறிவிடும். காலையில் எவ்வளவு தான் அழகாக மேக்கப் போட்டுக்கொண்டு வெளியே சென்றாலும், கொஞ்ச நேரத்திலேயே முகம் முழுவதும் எண்ணெய் வடிந்து பார்க்கவே டல்லாக மாறிவிடும். 

தூசி, வியர்வை மற்றும் முகத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் எல்லாமே சேர்ந்து முகப்பருக்களுக்கு ஒரு பெரிய அழைப்பிதழ் கொடுத்துவிடும். இப்படிப்பட்ட சம்மர் டென்ஷனில் இருந்து விடுபட்டு முகத்தை எப்போதுமே ரொம்ப புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள ஒரு சூப்பரான ஸ்கின் கேர் ரூட்டின் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சரியான ஃபேஸ் வாஷ்!

முதல் மற்றும் மிக முக்கியமான ஸ்டெப் முகத்தை சரியாக சுத்தம் செய்வது தான். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் சாலிசிலிக் ஆசிட் அல்லது கிளைகோலிக் ஆசிட் கலந்த ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது. இது முகத்தில் உள்ள ஆழமான அழுக்குகளையும் அதிகப்படியான எண்ணெயையும் முழுமையாக நீக்கிவிடும்.

அதற்காக அடிக்கடி முகத்தை கழுவிக்கொண்டே இருக்கக் கூடாது. அப்படிச் செய்தால் சருமம் இன்னும் வறண்டு போய் அதிக எண்ணெயை சுரக்க ஆரம்பித்துவிடும். அதனால் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் முகத்தை கழுவுவது தான் புத்திசாலித்தனம்.

ஆல்கஹால் இல்லாத டோனர்!

முகத்தை கழுவிய பிறகு சருமத்தில் உள்ள துளைகள் அப்படியே திறந்திருக்கும். அதை மூடுவதற்கும், முகத்தின் pH அளவை சரியாகப் பராமரிப்பதற்கும் ஒரு நல்ல டோனர் பயன்படுத்துவது அவசியம். கடைகளில் விற்கும் டோனர்களை வாங்கும் போது அதில் ஆல்கஹால் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால் ரோஸ் வாட்டர் அல்லது கிரீன் டீ டோனர் போன்ற இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது உங்களின் சருமத்திற்கு மிகவும் பாதுகாப்பானது.

இதையும் படியுங்கள்:
ஸ்டைலா? ஆரோக்கியமா? ஹேர் ஜெல் உபயோகிப்பதால் முடி கொட்டுமா? ஓர் அலசல்!
summer-skincare-routine

ஜெல் மாய்ஸ்சரைசர்!

ஏற்கனவே முகத்தில் எண்ணெய் வடிகிறது, இதில் எதற்கு மாய்ஸ்சரைசர் என பலரும் இதை தவிர்த்துவிடுவார்கள். இது தவறான ஒரு விஷயம். சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கவில்லை என்றால் அது தானாகவே அதிக எண்ணெயை உற்பத்தி செய்யத் தொடங்கும். அதனால் தண்ணீர் அல்லது ஜெல் பேஸ்டு மாய்ஸ்சரைசர்களை (Gel-Based Moisturizer) கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் தினமும் முகத்தில் தடவுங்கள். இது முகத்தை பிசுபிசுப்பு இல்லாமல் சாஃப்ட்டாக வைத்துக்கொள்ளும்.

மேட் பினிஷ் சன்ஸ்க்ரீன்!

வெளியே செல்லும் போது வெயிலின் தாக்கத்தில் இருந்து முகத்தை பாதுகாக்க சன்ஸ்க்ரீன் தடவுவது மிக மிக முக்கியம். ஆனால் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் கிரீம் போல இருக்கும் சன்ஸ்க்ரீன்களை பயன்படுத்தினால் முகம் இன்னும் கருமையாகிவிடும். இதற்கு பதிலாக மேட் பினிஷ் (Matte finish) சன்ஸ்க்ரீன்கன் வாங்கிப் பயன்படுத்துங்கள். இது முகத்தில் எண்ணெய் வழிவதை தடுப்பதோடு வெயிலால் ஏற்படும் கருமையையும் அடியோடு தடுத்து நிறுத்தும்.

இதையும் படியுங்கள்:
கோடைக்காலம் Vs பலாப்பழம்: சாப்பிடலாமா? கூடாதா?
summer-skincare-routine

எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு கோடைக்காலம் ஒரு பெரிய வில்லன் கிடையாது. உங்களின் சருமத்திற்கு ஏற்ற சரியான பொருட்களை தேர்ந்தெடுத்து அதனை ஒரு முறையான பழக்கமாக மாற்றிக்கொண்டால் போதும். விலை உயர்ந்த அழகு நிலையங்களுக்கு சென்று ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்வதை விட, வீட்டில் இருந்தபடியே இந்த சிம்பிளான ரூட்டினை தொடர்ந்து ஃபாலோ செய்து வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com