

இந்தியாவில் கோடைகாலம் என்பது கடுமையான வெப்பத்துடன் சருமத்திற்கு பல பாதிப்புகளை உண்டாக்கும் வகையில் இருக்கும். எனவே வெப்பம், சூரிய ஒளி மற்றும் வியர்வை ஆகியவற்றின் விளைவுகளை எதிர்த்து போராட, முறையான சருமப் பராமரிப்பு அவசியம். எனவே இப்பதிவில் கோடை காலத்தில் சருமத்தை எப்படி பராமரிப்பது? என்பது பற்றி பார்க்கலாம்.
1. ஃபேஸ் வாஷ்: கோடை காலத்தில் அவ்வப்போது முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவுவது மூலம் சருமம் நல்ல விதமாகப் பராமரிக்கப்படுகிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஃபேஸ் வாஷ், முகத்தின் இயற்கையான ஈரப்பதத்தை நீக்கி விடாமல், அழுக்கு, எண்ணெய் மற்றும் வியர்வையை மட்டும் நீக்கும் ஒன்றாகத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு இருவேளை, காலை மாலை என சுத்தம் செய்தால், சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கலாம்.
2. மாய்ஸ்சரைசர்: வெப்பமான காலநிலையில் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது முக்கியம். அதற்கு அதிக கெமிக்கல் இல்லாமல் இருக்கும் மாய்ஸ்சரைசரைத் தேர்வு செய்வது நல்லது. குறிப்பாக நீங்கள் தேர்வு செய்யும் மாஸ்சரைசரில் கற்றாழை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.
3. சன் ஸ்கிரீன்: சூரியனிலிருந்து வெளிவரும் தீங்கு விளைவிக்கும் UVA மற்றும் UVB கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க அதிக SPF அளவு கொண்ட சன் ஸ்கிரீனைத் தேர்வு செய்யவும். உங்கள் முகம், கழுத்து, கைகள் மற்றும் கால்கள் உட்பட, வெயில் படும் அனைத்து பகுதிகளிலும் சன் ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக, நீங்கள் வெயிலில் அதிக நேரம் செலவிடுகிறீர்கள் என்றால் நிச்சயம் பயன்படுத்த வேண்டும்.
4. நீரேற்றத்துடன் இருங்கள்: கோடைகாலத்தில் ஆரோக்கியமான சருமத்தைப் பராமரிக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியம். உடலில் போதிய அளவு நீர் இருந்தால், அது நச்சுக்களை வெளியேற்றி உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். கூடுதலாக பழங்கள், பழச்சாறுகள் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
5. குளிர்ச்சியான ஃபேஸ் மாஸ்க்: வெப்பம் சுட்டெரிக்கும் கோடை மாதங்களில் உங்கள் சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். எனவே ரோஸ் வாட்டர், வெள்ளரி அல்லது கற்றாழை போன்ற பொருட்களைப் பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க் தயாரித்து முகத்தில் பூசிக்கொள்ளுங்கள். இது அதிகப்படியான வெப்பம் மற்றும் வியர்வையின் விளைவுகளை எதிர்த்துப் போராட உதவும்.
இந்த சம்மருக்கு மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி உங்களது சருமத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.