சமந்தாவின் வைர மோதிரத்தில் ஒளிந்திருக்கும் முகலாய கால வரலாறு!

samantha marriage and diamond ring
Portrait cut diamond ring
Published on

இதுவரை எத்தனையோ விலையுயர்ந்த வைர மோதிரங்களை பிரபலங்கள் அணிந்து பார்த்திருந்தாலும், தற்போது சமந்தா அவரது திருமண நாள் அன்று அணிந்திருந்த வைர மோதித்தை பற்றியே அனைவரும் பரவலாக பேசுகிறார்கள். இந்த மோதிரம் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருப்பதே அதற்கான காரணமாகும். இந்த portrait cut diamond ஐ பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சமந்தா அணிந்திருக்கும் 'Portrait Cut' வைர மோதிரத்தில் மிகவும் தொன்மையான ஒரு வரலாறு ஒளிந்து உள்ளது பலருக்கு தெரியாது. இந்த மோதிரம் நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தை சுமந்து நிற்கும் ஒரு கலைப்படைப்பு. முகலாயர்கள் காலத்தில் நகைகளில் மினியேச்சர் ஓவியம் அல்லது அரச உருவப்படங்களை பாதுகாக்கவும், அவற்றின் அழகை அதிகரிக்கவும் இந்த மாதிரியான Portrait cut diamond ஐ பயன்படுத்தினார்கள். அதனால் தான் இதற்கு portrait cut ring என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. 

முகலாயப் பேரரசர்கள் தங்கள் ஆபரணங்களில் நெக்லஸ், மோதிரம், பதக்கம் போன்றவற்றில் மினியேச்சர் ஓவியங்கள் அல்லது அரச குடும்பத்தின் சிறிய உருவப்படங்களை பதிப்பது வழக்கம். இந்த மென்மையான ஓவியங்கள் சேதமடையாமல் பாதுகாக்க, அவற்றின் மேல் ஒரு கண்ணாடி போல, அதிக ஒளிபுகும் தன்மையுள்ள போர்ட்ரெய்ட் கட் வைரங்கள் பதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அதிசயமான தாஜ்மஹாலைக் கட்டிய முகலாய மன்னன் ஷாஜகானுக்கு இந்த வகை வைர வெட்டு மிகவும் பிடித்தமானதாக இருந்தது என்று கூறப்படுகிறது. கணவன் மனைவியாக இந்த மோதிரத்தை அணிந்திருப்பது அவர்களுக்குள் இருக்கும் ஆழமான அன்பையும், காதலையும் வெளிப்படுத்துவதற்கு அடையாளமாக, இந்த மாதிரியான மோதிரத்தை பயன்படுத்தினார்களாம் ராஜாக்கள். 

பிளேட்டினம் அல்லது 18 கேரட் வெள்ளை தங்கத்தால் செய்யப்பட்ட சமந்தா அணிந்திருக்கும் இந்த மோதிரம் 1.5 கோடி ரூபாய் மதிப்பிருக்கும் என்று சொல்கிறார்கள். இதை சமந்தாவிற்கு ராஜ் நிடிமோரு திருமணத்திற்காக பரிசளித்ததாக சொல்லப்படுகிறது. 

'Portrait Cut' என்பது வைர வெட்டுக்களில் மிகவும் தொன்மையான ஒன்றாகும். சமந்தாவின் வைர மோதிரம் எட்டு இதழ்களை கொண்டை பூவை போல அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் நடுவே 2 கேரட் 'Lozenge Portrait Cut' வைரம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த டிசைன் பார்ப்பதற்கு தனித்துவமாக தெரிவது போலவே இதை தயாரிப்பதும் மிகவும் கடினம் என்று சொல்கிறார்கள். இந்த மோதிரம் பழமையையும், புதுமையையும் ஒன்றிணைத்து கலவையாக உருவாக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
குறைந்த நாட்களில் கூடுதல் கலர் தரும் Body Whitening Cream: சீக்ரெட் இதோ!
samantha marriage and diamond ring

சமூகவலைத்தளத்தில் இந்த மோதிரத்தை பற்றி பலதரப்பட்ட கருத்துகள் வருகின்றன. சிலர் இந்த மோதிரம் தனித்துவமாக இருப்பதாதவும், இன்னும் சிலர் இந்த மோதிரம் பார்ப்பதற்கு அழகாக இல்லை என்றும் விவாதம் செய்கிறார்கள். இருப்பினும் சமந்தாவின் விசிறிகள், இந்த மோதிரம் அவரைப்போலவே தனித்துவமாகவும், அழகாகவும் இருப்பதாக சொல்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com