
வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே உங்கள் அழகை மெருகூட்டலாம். எப்படி?
1. WOW வாசலீன்:
பிங்க் நிற உதட்டுக்கு பீட்ரூட் மற்றும் வாசலீன்: ஒரு டீஸ்பூன் பீட்ரூட் பௌடரில் சிறிது வாசலின் சேர்த்து இரவு படுக்கப் போகுமுன் தடவி காலையில் கழுவ உதடு நல்ல நிறமாகும்.
பாதவெடிப்பில் வாசலீன் தடவ அவை குணமாகும்.
ஒரு டீஸ்பூன் வாசலீன் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ முக கருமை நீங்கும்.
வாசலீனோடு, வைட்டமின் ஈ ஆயில் சேர்த்து கண் இமை முடிகளில் மஸ்காரா ப்ரஷ் கொண்டு தடவ அவை நன்கு வளரும்.
2 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை ஒரு டீஸ்பூன் வாசலீனோடு சேர்த்து முகம் கழுத்து பகுதியில் தடவிக் கழுவ சருமம் மிருதுவாகும்.
இரண்டு டீஸ்பூன் வாசலீன் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவிக் குளிக்க சருமம் பளபளப்பாகவும் மென்மையாகவும் ஆகும்.
காபி பௌடர் ஒரு டீஸ்பூன், வாசலீன் 1 டீஸ்பூன் மற்றும் வைட்டமின் ஈ உடன் மூன்று சொட்டு பாதாம் ஆயில் சேர்த்து முகத்தில் தடவிக் கழுவ முகம் பிரகாசமாகும்.
ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் வாசலீன் சேர்த்து புருவ முடியில் தடவிவர முடி கருகருவென இருக்கும். நன்கு வளரும்.
2. முகப் பொலிவிற்கு இயற்கை Cleansers (க்ளென்சர்கள்):
உங்கள் சருமம் எந்த வகை என்பதைத் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்த க்ளென்சர்களைப் பயன்படுத்த வேண்டும்.
எண்ணெய்ப் பசை முகத்திற்கு:
முல்தானி மெட்டி சிறந்தது. பழைய காலங்களிலிந்தே இது பயன்பாட்டில் உள்ளது. இரண்டு டீஸ்பூன் முல்தானி மெட்டியும், ஒரு சிட்டிகை கற்பூர பொடியும் சேர்த்து நீர் கலந்து முகத்தில் தடவிக் கழுவ எண்ணை பசை நீங்கி பொலிவாகும்.
Combination skin:
மசித்த பப்பாளி, ஓட்ஸ் மற்றும் சிறிது பால் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவுங்கள். பப்பாளியில் சுத்தம் செய்யக்கூடிய enzyme அதிகம் உள்ளன. இதன் ஆல்ஃபா ஹைட்ராக்சில் அமிலம் முகக் கருமையை போக்குகின்றது.
இந்த சருமத்திற்கு யோக்ஹர்ட் தடவிக் கழுவுவதும் மிக நல்லது. தினமும் படுக்கப் செல்லும் முன் இதைத் தடவிக் கழுவ முகம் பளிச்சென ஆகும்.
Combination சருமத்திற்கு ஸ்ட்ரா பெர்ரி மிகச் சிறந்தது. நான்கு ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்கு மசித்து முகத்தில் மசாஜ் செய்து கழுவலாம். இதில் உள்ள அதிக வைட்டமின் சி சத்து முகத்தை பிரகாசமாக்கும்.
வறண்ட சருமம்:
இதற்கு 10 டீஸ்பூன் ஆல்மண்ட் ஆயில் மற்றும் 10 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் எடுத்துக் கொண்டு அதில் அரை எலுமிச்சையை எடுத்து பிழிந்து ஒரு பாட்டிலில் வைக்கவும். தினமும் இதில் ஒரு டீஸ்பூன் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் காய்ந்த ஆரஞ்சு தோல் பொடி சேர்த்து முகத்தில் தடவவும். இது ஒரு சிறந்த எக்ஸ்ஃபோலியேட் ஆகும்.
கடலை மாவை தயிரில் கலந்து முகத்தில் உபயோகிப்பது அனைத்து வித சருமத்திற்கும் நல்லது.
3 . ஏழே நாட்களில் கண்ணிற்கு கீழுள்ள கருமை நீங்க வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய ஜெல்:
தேவையானவை:
1 டீஸ்பூன் ஆலோவேரா ஜெல்,
அரை டீஸ்பூன் வெள்ளரி ஜுஸ்,
ஒரு சிட்டிகை மஞ்சள் பௌடர்,
ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர்,
ஒரு சொட்டு ஆல்மண்ட் ஆயில்,
மேற்கூறிய அனைத்தையும் ஒரு பௌலில் சேர்த்து நன்கு கலக்கவும். இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கலாம். தினமும் காலை மற்றும் மாலையில் கண்ணின் கீழ் தடவவும்; பிறகு 15 நிமிடம் கழித்து கழுவவும்; ஒரே வாரத்தில் கருமை மறைந்து வீக்கம் இருந்தால் அதுவும் குறைந்து கண்கள் புத்துணர்ச்சியோடு காணப்படும். அதுமட்டுமல்லாமல் கண் சோர்வையும் போக்கும்.